For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுவதற்கு பின்னால் இருக்கும் புராண காரணமும், போர் காரணமும் என்ன தெரியுமா?

இந்தியா பண்டிகைகள், பலதரப்பட்ட கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்களின் பூமி. இங்கே ஒவ்வொரு பந்தமும், உறவுகளும் பண்டிகைகளின் மூலம் கொண்டாடப்படுகின்றன.

|

இந்தியா பண்டிகைகள், பலதரப்பட்ட கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்களின் பூமி. இங்கே ஒவ்வொரு பந்தமும், உறவுகளும் பண்டிகைகளின் மூலம் கொண்டாடப்படுகின்றன. வரவிருக்கும் ரக்ஷா பந்தன் பண்டிகை, சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அன்பு மற்றும் பாசத்தின் பிணைப்பை மதிக்கிறது.

Raksha Bandhan 2022: Significance, Date, Puja timing, and Foods Related to the Festival in Tamil

ரக்ஷா பந்தன் பண்டிகை ஆடி மாதத்தில் சுக்ல பக்ஷ பௌர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ரக்‌ஷா பந்தன் ஆகஸ்ட் 11ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளின் முக்கியத்துவம் அதன் வரலாறு என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேதி மற்றும் நேரம்

தேதி மற்றும் நேரம்

இந்த ஆண்டு, ரக்ஷா பந்தன் விழா ஆகஸ்ட் 11, வியாழன் அன்று கொண்டாடப்படும், சுப முகூர்த்தம் காலை 10.38 மணிக்கு தொடங்கி, பூர்ணிமா திதி ஆகஸ்ட் 12 வெள்ளிக்கிழமை காலை 7:05 வரை நீடிக்கும்.

ரக்ஷா பந்தனின் முக்கியத்துவம்

ரக்ஷா பந்தனின் முக்கியத்துவம்

ஆடி மாதத்தில் சுக்ல பக்ஷ பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் திருவிழா, சகோதர சகோதரிகளுக்கு இடையேயான உறவுமுறைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த நாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கைகளில் பாதுகாப்பு நூலான ராக்கியைக் கட்டுகிறார்கள், மேலும் சகோதரர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அவர்களைப் பாதுகாப்பதாக உறுதியளிக்கிறார்கள். இந்த கொண்டாட்டத்தின் போது, சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் நெற்றியில் குங்குமம் மற்றும் சந்தன திலகம் வைத்து, ஆரத்தி எடுத்து, அவர்கள் மணிக்கட்டில் ராக்கி கட்டுவார்கள். பதிலுக்கு, அவர்கள் பரிசுகளையும் ஆசீர்வாதங்களையும் பெறுகிறார்கள். இந்த பண்டிகை சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அழியாத அன்பின் அடையாளமாகவும் உள்ளது. ஆடி மாதத்தின் முழு நிலவு சாவான் பூர்ணிமா அல்லது கஜாரி பூனம் என்றும் அழைக்கப்படுகிறது.

ரக்ஷா பந்தன் வரலாறு

ரக்ஷா பந்தன் வரலாறு

பல ஆண்டுகளாக இந்த திருவிழா சகோதர சகோதரிகளின் பிணைப்புக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக நம்பினாலும், ஒரு நபர் மற்றொருவரைப் பாதுகாப்பதாக உறுதியளிக்கும் ஒவ்வொரு உறவுக்கும் இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று பலர் நம்புகிறார்கள். இந்திய புராணக் கதைகளைப் பார்த்தால், மத நூல்களில் ரக்ஷா பந்தன் பற்றிய பல நிகழ்வுகள் உள்ளன. ஒரு கதையின்படி, திரேதாயுகத்தில், மகாபாரதப் போர் தொடங்குவதற்கு முன்பு, ஸ்ரீ கிருஷ்ணர் மன்னன் சிசுபாலனுக்கு எதிராக சுதர்சன சக்கரத்தை உயர்த்தினார், அதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. திரௌபதி தன் சேலையின் ஒரு துண்டைக் கிழித்து அவர் கையில் கட்டினார். பதிலுக்கு, ஸ்ரீ கிருஷ்ணர் திரௌபதியை எல்லா ஆபத்துகளிலிருந்தும் காப்பதாக உறுதியளித்தார். பின்னர் அவர் தனது வாக்குறுதியைக் காப்பாற்றினார் மற்றும் சூதாட்ட மண்டபத்தில் திரௌபதி துயிலுரியப்பட்ட நேரத்தில் ஸ்ரீகிருஷ்ணர் திரௌபதியைப் பாதுகாத்தார்.

சசி மற்றும் இந்திரன்

சசி மற்றும் இந்திரன்

பவிஷ்ய புராணத்தில், இந்திரனின் மனைவியான சசி, வலிமைமிக்க அரக்கன் பாலிக்கு எதிரான போரில் இந்திரனைப் பாதுகாக்க இந்திரனின் மணிக்கட்டில் ஒரு நூலைக் கட்டினாள். பண்டைய இந்தியாவில் புனித நூல்கள் தாயத்துகளாக இருந்திருக்கலாம் என்றும், போருக்குச் செல்லும் ஆண்களைப் பாதுகாக்க பெண்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்றும், அது சகோதர-சகோதரி உறவுகளுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை என்றும் இந்தக் கதை கூறுகிறது.

ரோக்ஸானா மற்றும் கிங் போரஸ்

ரோக்ஸானா மற்றும் கிங் போரஸ்

கி.மு 326 இல் அலெக்சாண்டர் தி கிரேட் இந்தியாவின் மீது படையெடுத்தார். அவரது பாதுகாப்பு குறித்து அவரது மனைவி ரோக்சனா கவலைப்பட்டார். அவர் பௌரவர்களின் மன்னன் போரஸ் என்ற அரசனுக்கு ஒரு ராக்கியை அனுப்பி, போர்க்களத்தில் தன் கணவனை காயப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஹைடாஸ்பஸ் நதிப் போரின் போது, போரஸ் மன்னர் தனது மணிக்கட்டில் ராக்கியைக் கண்டார். இது ரொக்ஸானாவுக்கு அவர் கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்தியது. பின்னர் அவர் அலெக்சாண்டரைத் தாக்குவதைத் தடுத்து நிறுத்தினார். போரஸ் போரில் தோற்றார், ஆனால் அவர் அலெக்சாண்டரின் மரியாதையையும், அன்பையும் வென்றார். அலெக்சாண்டர் போரஸை மீண்டும் தனது சொந்த ராஜ்யத்தின் ஆளுநராக நியமித்தார்.

ரக்ஷா பந்தன் அன்று சாப்பிட வேண்டிய உணவுகள்

ரக்ஷா பந்தன் அன்று சாப்பிட வேண்டிய உணவுகள்

இனிப்புகள் இல்லாமல் இந்திய பண்டிகைகள் முழுமையடையாத, அதற்கு ரக்ஷன் பந்தனும் விதிவிலக்கல்ல. ரக்ஷா பந்தன் சிறப்பு உணவுகளில் பெரும்பாலும் பெசன் லட்டு, போண்டி லட்டு, மேவா பர்ஃபி, கலகண்ட், காஜு கட்லி, குலாப் ஜாமூன் மற்றும் பல இனிப்புகள் நிறைந்திருக்கும். பல குடும்பங்களில், கீர், பூரி மற்றும் அல்வா ஆகியவை பண்டிகையைக் கொண்டாடுவதற்கு சுவையான விருந்துகளுடன் தயாரிக்கப்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Raksha Bandhan 2022: Significance, Date, Puja timing, and Foods Related to the Festival in Tamil

Raksha Bandhan 2022: Find out the significance, date, puja timing, and foods related to the festival.
Desktop Bottom Promotion