Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
ராகுவால் 2023-ல் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
ராகு மீன ராசிக்கு செல்லும் போது 3 ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதோடு, அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். இப்போது 2023-ல் ராகுவால் அதிர்ஷ்டம் பெறும்ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ஜோதிடத்தில் ராகு ஒரு நிழல் கிரகமாகும். என்ன தான் ராகு நிழல் கிரகமாக இருந்தாலும், சக்தி வாய்ந்த கிரகமாக கருதப்படுகிறது. அதுவும் ராகு ஒருவரது ஜாதகத்தில் எந்த வீட்டில் உள்ளாரோ, அந்த வீட்டு அதிபதி வழங்கும் பலன்களை வழங்குவார். ராகுவிற்கு என்று தனி ராசி எதுவும் இல்லை மற்றும் ராகு பின்னோக்கு பயணிக்கக்கூடியவர். ராகு 18 மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அந்த வகையில் தற்போது மேஷ ராசியில் பயணித்து வரும் ராகு, 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி மீன ராசிக்கு செல்கிறார்.

ராகு ராசியை மாற்றும் போது, அது அனைத்து ராசிகளையுமே பாதிக்கும். குறிப்பாக ராகு மீன ராசிக்கு செல்லும் போது 3 ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதோடு, அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். இப்போது 2023-ல் ராகுவால் அதிர்ஷ்டம் பெறும் அந்த 3 ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் ராகு 11 ஆவது வீட்டில் இருப்பார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் பல ஆசைகள் நிறைவேறும். சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பீர்கள். சமூகத் தொடர்புகள் அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்கள், சமூக நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்பார்கள். இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல முன்னேற்றத்தைத் தரும். நிதி ரீதியாகவும் இக்காலம் வலுவாக இருக்கும்.

மிதுனம்
2023 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலம் மிதுன ராசிக்காரர்களுக்கு சற்று மன உளைச்சலை ஏற்படுத்தும். இருப்பினும் அவ்வளவு பெரிய பிரச்சனைகளை சந்திக்கமாட்டீர்கள். அக்டோபர் 30 ஆம் தேதி ராகு 10 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் உங்கள் வேலையில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கடின உழைப்பினால் ஒரு நல்ல நிலையை அடைவீர்கள். உங்கள் பணி அலுவலகத்தில் பாராட்டப்படும். ராகுவால் இன்னும் சிறப்பான பலன்களைப் பெற புதன்கிழமைகளில் பசுவிற்கு உணவளியுங்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களே! 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ராகு 10 ஆவது வீட்டில் இருப்பார். இதனால் உங்களின் மெச்சூரிட்டி சற்று அதிகரிக்கும். பணியிடத்தில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. இக்காலத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். எந்த வேலையை செய்தாலும், அதில் வெற்றிக்கான வாய்ப்புகள் உள்ளன.

கடகம்
2023 ஆம் ஆண்டில் ஏப்ரல் 22 முதல் ஆக்ஸ்ட் 28 வரையிலான காலம் சற்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். இக்காலத்தில் சண்டை சச்சரவுகளை தவிர்ப்பது நல்லது. 2023 அக்டோபர் 30 ஆம் தேதி முதல் ராகு 9 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இக்காலத்தில் நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களும் அமையும். ராகுவால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க மற்றும் ராகுவின் நிலையை மேம்படுத்த, தெரு நாய்களுக்கு பிஸ்கட் வாங்கி கொடுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ராகு 6 ஆவது வீட்டில் இருப்பார். இதனால் அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் ராகு உங்களை இக்காலத்தில் காப்பாற்றுவார். எதிரிகள், கடன்கள், நோய்கள் அனைத்தையும் சமாளித்து முன்னேறுவீர்கள். வேலையில் உங்களின் நிலை வலுவடையும். உங்கள் தாயிடம் இருந்து நல்ல பண பலன்களைப் பெறுவீர்கள். வெளியூர் பயணம் அதிகம் மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்
2023 ஏப்ரல் இறுதி முதல் ஆக்ஸ்ட் இறுதி வரையிலான காலம் சற்று பலவீனமாகவே இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் திடீரென்று உங்கள் அவதிப்படுத்தும். அக்டோபர் 30 ஆம் தேதி ராக 5 ஆவது வீட்டிற்கு செல்லும் போது, உங்களின் அறிவுத்திறன் விரிவடையும். முக்கியமான பெரிய முடிவுகளை எடுப்பீர்கள். மாணவர்கள் வாழ்வில் சில பிரச்சனைகளையும், சவால்களையும் சந்தித்தாலும், அதை எளிதில் சமாளிப்பார்கள். ராகுவால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க துர்கா சாலிசாவை தொடர்ந்து பாராயணம் செய்யுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications