Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
2023-ல் ராகுவின் ஆதரவால் இந்த 3 ராசிக்காரங்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு...
ராகு 2023 ஆம் ஆண்டில் அக்டோபர் 30 ஆம் தேதி மீன ராசிக்கு செல்கிறார். 2023-ல் ராகு ராசியை மாற்றும் போது சில ராசிக்காரர்களுக்கு நல்ல பண பலன்கள் கிடைத்து பணக்காரராகும் வாய்ப்புள்ளது.
2023 ஆம் ஆண்டு வரவுள்ளது. இந்த புதிய ஆண்டில் மனித வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் பல கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. அதில் ஆண்டின் முதல் மாதத்திலேயே சனி பகவான் ராசியை மாற்றுகிறார். மேலும் நிழல் கிரகமான ராகு ஆண்டின் தொடக்கத்தில் மேஷ ராசியில் இருப்பார். ராகு 18 மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர்.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டில் பல ராசிக்காரர்கள் ராகுவின் ஆதரவைப் பெறப் போகிறார்கள். இதனால் அந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றியைப் பெறுவதோடு, நல்ல லாபத்தையும் பெறுவார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி, ராகு எந்த ராசியில் உள்ளாரோ, அந்த ராசியின் அதிபதியைப் போன்ற பலனைத் தருவார். இப்படிப்பட்ட ராகு 2023 ஆம் ஆண்டில் அக்டோபர் 30 ஆம் தேதி மீன ராசிக்கு செல்கிறார். 2023-ல் ராகு ராசியை மாற்றும் போது சில ராசிக்காரர்களுக்கு நல்ல பண பலன்கள் கிடைத்து பணக்காரராகும் வாய்ப்புள்ளது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் 2023 ஆம் ஆண்டில் ராகுவில் ஆதரவால் நற்பலன்களைப் பெறுவார்கள். அதுவும் பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் நல்ல நிதி ஆதாயத்தைப் பெறுவார்கள். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இந்த ஆண்டில் முழு ஆதரவையும் அளிப்பார்கள். இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் நிறைய நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

துலாம்
துலாம் ராசிக்காரர்களும் 2023-ல் ராகுவின் ஆசியைப் பெற்றிருப்பார்கள். இதனால் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மேலும் பணிபுரிபவர்கள் புதிய வேலைக்கான சிறந்த வாய்ப்புக்களையும் பெறுவார்கள். அரசியலில் இருப்பவர்கள் இந்த ஆண்டில் ராகுவின் ஆதரவால் நல்ல மாற்றத்தைக் காண்பார்கள். வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ளது. மேலும் அந்த பயணத்தால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகளுக்கும் இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

மகரம்
2023 ஆம் ஆண்டில் நடக்கும் ராகு பெயர்ச்சியின் போது, ராகு மகர ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் மகர ராசிக்காரக்ள் ராகுவின் ஆதரவைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல வெற்றியும், முன்னேற்றமும் ஏற்படும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இக்காலத்தில் தேர்வில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இக்காலத்தில் கிடைக்கும். பணியிடத்தில் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications