Latest Updates
-
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்!
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
பஞ்சாங்கத்தின் படி, 2022 ஜூன் 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8.15 மணிக்கு ராகு பரணி நட்சத்திற்குள் நுழைகிறார். ராகு பகவான் பரணி நட்சத்திரத்திற்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை காண்போம்.
ஜோதிடத்தில் ராகு ஒரு தீய கிரகமாக கருதப்படுகிறது. அதோடு ராகு ஒரு நிழல் கிரகமாகும். சமீபத்தல் தான் ராகு கேது பெயர்ச்சி நடைபெற்றது. அப்பெயர்ச்சியின் போது ராகு மேஷ ராசிக்கு மாறினார். இந்த மேஷ ராசியில் தற்போது ராகு சுக்கிரனுடன் இணைந்து இருக்கிறார். ராகு மற்றும் சுக்கிரன் இடையே நட்புறவு இருப்பதாக கருதப்படுகிறது.

ராகு தற்போது கிருத்திகை நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். இன்னும் சில நாட்களில் ராகு கிருத்திகை நட்சத்திரல் இருந்து வெளியேறி பரணி நட்சத்திரத்திற்கு செல்லவிருக்கிறார். கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமின்றி, நட்சத்திர மாற்றமும் மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2022 ஜூன் மாதத்தில் நடக்கவிருக்கும் ராகு நட்சத்திர மாற்றமும் மக்களின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ராகு நட்சத்திர பெயர்ச்சி 2022
தற்போது ராகு கிருத்திகை நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். கிருத்திகை நட்சத்திரத்தின் அதிபதி அனைத்து கிரகங்களுக்கும் ராஜாவாக கருதப்படும் சூரியன். கடந்த ஆண்டு 2021 அக்டோபர் 05 ஆம் தேதி, ராகு கிருத்திகை நட்சத்திரத்திற்கு வந்தார். தற்போது 9 மாதங்களுக்கு பிறகு ராகு கிருத்திகை நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்திற்கு வருகிறார்.

பரணி நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி
பஞ்சாங்கத்தின் படி, 2022 ஜூன் 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8.15 மணிக்கு ராகு பரணி நட்சத்திற்குள் நுழைகிறார். ஜோதிடத்தின் படி, பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன் மற்றும் தெய்வம் எமன். பரணி என்றால் வைத்திருப்பவர் என்று பொருள். ராகு பகவான் பரணி நட்சத்திரத்திற்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
ராகு மேஷ ராசியின் முதல் வீட்டில் உள்ளார். முக்கியமாக சுக்கிரனுடன் முதல் வீட்டில் இணைந்து பயணிக்கிறார். இந்த ராகு, சுக்கிர சேர்க்கையால், மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். ஆனால் உறவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். இதனால் சில சமயங்களில் இக்காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் தவறான விஷயங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் மூதாதையர் சொத்து, சிக்கிய பணம் போன்றவற்றைப் பெறலாம்.

ரிஷபம்
சுக்கிரன் ரிஷப ராசியின் அதிபதி. மேலும் ராகு மற்றும் சுக்கிரன் நண்பர்கள். ராகு தனது நண்பரின் ராசியில் பிரவேசிக்கப் போகிறார். ஆகவே இந்த நட்சத்திர மாற்றம் ரிஷப ராசிக்காரர்களுக்கு பண விஷயத்தில் கலவையான பலனைத் தருவதாக இருக்கும். ஆனால் பல நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். இந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொண்டால், வாழ்க்கை சிறப்பாகவும், செழிப்பாகவும் இருக்கும்.

துலாம்
ராகு பகவான் பரணி நட்சத்திரத்திற்கு செல்வதால், துலாம் ராசிக்காரர்களின் ஆடம்பர வாழ்க்கை அதிகரிக்கும். விலையுயர்ந்த கேஜெட்டுகள் போன்றவற்றை வாங்க வாய்ப்புள்ளது. திடீர் செலவுகள் அதிகரிக்கும். பயணம் செய்வதற்கான திட்டத்தை தீட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அலட்சியமாக இருந்தால், அதிக மருத்துவ செலவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.



Click it and Unblock the Notifications
