Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
2022 ஜூன் 14 ஆம் தேதி, அதாவது இன்று ராகுவின் நட்சத்திர மாற்றம் நிகழ்கிறது. இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது, ராகு கிருத்திகை நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்திற்கு செல்கிறார்.
நவகிரகங்களில் நிழல் கிரகமான ராகு 2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் 12 ஆம் தேதி மேஷ ராசிக்கு மாறினார். ராகு மேஷ ராசிக்கு 18 ஆண்டுகள் கழித்து நுழைந்துள்ளார். இந்நிலையில் 2022 ஜூன் 14 ஆம் தேதி, அதாவது இன்று ராகுவின் நட்சத்திர மாற்றம் நிகழ்கிறது. இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது, ராகு கிருத்திகை நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்திற்கு செல்கிறார்.

வேத ஜோதிடத்தில் பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன் மற்றும் இந்த சுக்கிரன் ராகுவின் நண்பன். அதோடு ராகுவும், சுக்கிரனும் மேஷ ராசியில் இணைந்துள்ளார்கள். ஜோதிடத்தின் படி, ராகு மற்றும் சுக்கிரனின் இந்த சேர்க்கை நல்லவை என்றாலும், சில ராசிக்காரர்களுக்கு இது மோசமான விளைவை ஏற்படுத்தும். இப்போது ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

சிம்மம்
பரணி நட்சத்திரத்தில் ராகு செல்வதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும் என்று கூற முடியாது. இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் பிரச்சனைகளை சந்திக்கலாம். இடமாற்றம் கூட ஏற்படலாம். அதோடு தேவையற்ற பயணத்தை மேற்கொள்ள நேரிடலாம். இதனால் நிறைய செலவுகள் ஏற்படலாம். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ராகுவின் நட்சத்திர மாற்றம் சாதகமான பலன்களைத் தராது. முக்கியமாக இக்காலத்தில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருங்கள். பண இழப்பும் ஏற்படலாம். தொழிலில் பிரச்சனைகளை சந்திக்கலாம். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு இருக்காது. வீட்டில் பிரச்சனைகள் வராலம். இக்காலத்தில் பொறுமையுடனும், நிதானத்துடனும் இருந்தால் சமாளிக்கலாம்.

மகரம்
ராகு நட்சத்திர மாற்றம் மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். வாழ்க்கையின் வெவ்வேறு முனைகளில் கடுமையாக போராட வேண்டியிருக்கும். தொழில் வாழ்க்கை சற்று கடினமாக இருக்கலாம். பணியிடத்தில் பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றை சந்திப்பீர்கள். எனவே சற்று கவனமாக இருங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ராகுவின் நட்சத்திர மாற்றமானது, நிதி ரீதியாக நன்றாக இருக்கும். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. திடீர் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடலாம் மற்றும் இக்காலத்தில் நிறைய சவால்களை சந்திக்கக்கூடும்.



Click it and Unblock the Notifications