Latest Updates
-
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
ராகு கேது பெயர்ச்சியால் அடுத்த 18 மாதம் இந்த 5 ராசிக்காரங்களோட பிரச்சனை அதிகரிக்கப் போகுது.. உஷார்...
2022 ராகு கேது பெயர்ச்சியால் அடுத்த 18 மாதங்களுக்கு 5 ராசிக்காரர்களின் பிரச்சனைகள் அதிகரிக்கப் போகிறது. இதில் உங்கள் ராசி உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நவகிரகங்களில் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பின்னோக்கி நகரக்கூடியவர்கள். ராகு மற்றும் கேது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் ஆகும். 2022 ஆம் ஆண்டில் ஏப்ரல் 12 ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று ராகு மற்றும் கேது ராசியை மாற்றுகிறார்கள். அதில் ராகு செவ்வாய் ஆளும் மேஷ ராசிக்கும், கேது சுக்கிரன் ஆளும் துலாம் ராசிக்கும் இடம் மாறுகிறார்கள்.

ராகு, கேது நிழல் கிரகங்களாக இருந்தாலும், இவை ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2022 ராகு கேது பெயர்ச்சியால் அடுத்த 18 மாதங்களுக்கு 5 ராசிக்காரர்களின் பிரச்சனைகள் அதிகரிக்கப் போகிறது. இதில் உங்கள் ராசி உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு ராகும், 7 ஆவது வீட்டிற்கு கேதுவும் செல்கிறார்கள். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் உறவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்கள் நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும், ஒருவரது ஜாதகத்தில் கிரகங்களின் நிலை நன்றாக இருந்தால், இப்பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்கள் குறைவான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டிற்கு ராகுவும், 11 ஆவது வீட்டிற்கு கேதுவும் செல்கிறார்கள். 5 ஆவது வீட்டில் ராகு இருப்பதால், அது இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கும். இக்காலத்தில் எதிர்கால பாதுகாப்பின்மை மற்றும் கவலைகள் தொடர்பான சிக்கல்களை சந்திக்க நேரிடும். அதோடு பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. முக்கியமாக இக்காலத்தில் எதிலும் முதலீடு செய்துவிடாதீர்கள்.

மகரம்
மகர ராசியின் 4 மற்றும் 10 ஆவது வீட்டிற்கு ராகு மற்றும் கேது செல்கிறார்கள். கேதுவின் இந்த நிலை மகர ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது. அதேப்போல் ராகுவின் நிலையும் இந்த ராசிக்காரர்களுக்கு சிரமங்களைத் தரும். அதுவும் இப்பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்கள் குடும்ப பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. நிதி நிலையில் கூட ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்.

துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டில் ராகுவும், முதல் வீட்டிற்கு கேதுவும் செல்கிறார்கள். ஆகவே இக்காலத்தில் துலாம் ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியம், நிதி விஷயம் மற்றும் உறவுகளில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்பெயர்ச்சி காலத்தில் குருவும், சனியும் சுப நிலையில் இருக்கப் போவதில்லை. சனி 4 ஆவது வீட்டிலும், குரு 6 ஆவது வீட்டிலும் இருப்பார்கள். இத்தகைய சூழ்நிலையில் பிரச்சனை உங்களுக்கு ஏற்படலாம்.

மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு ராகுவும், 8 ஆவது வீட்டிற்கு கேதுவும் செல்கிறார்கள். இந்த கிரகங்களின் நிலையால் மீன ராசிக்காரர்கள் மோசமான பலன்களைப் பெறுவார்கள். ஒருவரது ஜாதகத்தில் ராகு, கேது சரியான நிலையில் இல்லாவிட்டால், கடன் வாங்குவது அல்லது செலவு செய்வதன் மூலம் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். எனவே இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.



Click it and Unblock the Notifications