Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ராகு கேது பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்காரங்க மிகவும் கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
ராகு கேது பெயர்ச்சியாகும் போது 5 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்த 5 ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை பாருங்கள்.
சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி போன்றே ராகு-கேது பெயர்ச்சியும் ஒருவரது வாழ்வில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. ராகு கேது நிழல்கிரகங்களாகும். இந்த இரண்டு கிரகங்களும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாற ஒன்றரை வருடங்கள் ஆகும். இதுவரை ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் பயணித்து வருகிறார்கள். இந்த ஆண்டு இந்த இரண்டு கிரகங்களும் ராசியை மாற்றவிருக்கின்றன.

அதில் ராகு ரிஷப ராசியில் இருந்து செவ்வாய் ஆளும் மேஷ ராசிக்கும், கேது விருச்சிக ராசியில் இருந்து சுக்கிரன் ஆளும் துலாம் ராசிக்கும் ஒரே நாளில் ராசியை மாற்றுகின்றன. ராகு கேது பெயர்ச்சியாகும் போது 5 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்த 5 ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை பாருங்கள்.

ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது?
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, 2022 ஏப்ரல் 12 ஆம் தேதி மதியம் 1.38 மணியளவில் ராகு மேஷ ராசிக்கும், கேது துலாம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர். வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, 2022 மார்ச் 21 தேதி திங்கட்கிழமை மதியம் 3.02 மணிக்கு பெயர்ச்சியாகின்றனர்.

மேஷம்
மேஷ ராசிக்கு ராகு வருவதால், இந்த ராசிக்காரர்கள் தங்கள் உறவுகளில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் இப்பெயர்ச்சியால் உறவுகளில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதோடு நிதி பிரச்சனைகளையும் சந்திக்க வாய்ப்புள்ளது. ஆகவே சற்று கவனமாக இருங்கள்.

துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டில் ராகுவும், முதல் வீட்டில் கேதுவும் இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் பண பரிவர்த்தனைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒருவரது ஜாதகத்தில் ராகு மற்றும் கேது சுப ஸ்தானத்தில் இருந்தால், அவர்களின் வாழ்வில் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் காண்பார்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி சாதகமானதாக இருக்காது. இக்காலத்தில் உங்கள் எதிர்காலம் குறித்த பாதுகாப்பின்மை ஏற்படலாம். உங்களின் ஒரு தவறான முடிவு காரணமாக இக்காலத்தில் பண இழப்பை சந்திக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக இக்காலத்தில் பணம் தொடர்பாக எந்த ஒரு பெரிய முடிவும் எடுக்க வேண்டாம்.

மகரம்
மகர ராசியின் 4 மற்றும் 10 ஆவது வீட்டில் ராகு மற்றும் கேது சஞ்சரிக்கிறார்கள். இதில் கேது பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். ஆனால் ராகு உங்களுக்கு அசுப பலன்களைத் தரும் இடத்தில் உள்ளார். இதனால் இக்காலத்தில் குடும்பத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். மேலும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

மீனம்
ராகு கேது பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு சாதகமற்ற பலன்களைத் தரும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் நிதி சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். நிதி விஷயத்தில் கவனமாக இருங்கள். அதோடு ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.



Click it and Unblock the Notifications