Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
2023 ஜனவரி 1-ல் ராகு சந்திர சேர்க்கையால் உருவாகும் கிரகண தோஷம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
2023 ஜனவரி 01 ஆம் தேதி மேஷ ராசியில் கிரகண தோஷம் உருவாகவுள்ளது. இந்த கிரகண தோஷமானது ராகு மற்றும் சந்திரன் சேர்க்கையால் உருவாகிறது. ஜோதிடத்தில் இந்த தோஷம் அசுபமானதாக கருதப்படுகிறது.
2023 ஆம் ஆண்டில் நுழையப் போகிறோம். பலரும் இந்த புத்தாண்டை சந்தோஷமாக வரவேற்க ஆவலாக இருப்போம். ஜோதிட சாஸ்திரத்தின் படி, 2023 ஆம் ஆண்டில் பல சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகவுள்ளன. இந்த யோகங்கள் உருவாகும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் 2023 ஜனவரி 01 ஆம் தேதி மேஷ ராசியில் கிரகண தோஷம் உருவாகவுள்ளது.

இந்த கிரகண தோஷமானது ராகு மற்றும் சந்திரன் சேர்க்கையால் உருவாகிறது. ஜோதிடத்தில் இந்த தோஷம் அசுபமானதாக கருதப்படுகிறது. அதோடு இந்த தோஷத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் இந்த தோஷத்தால் 3 ராசிக்காரர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இப்போது ஜனவரி 01 ஆம் தேதி மேஷ ராசியில் உருவாகும் கிரகண தோஷத்தால் சற்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியில் கிரகண தோஷம் உருவாவதால், மேஷ ராசிக்காரர்கள் சற்று அதிகமாக சிரமப்படுவார்கள். அதுவும் முதல் வீட்டில் இந்த கிரகண தோஷம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் தொடங்க இது நல்ல காலம் அல்ல. ஒருவேளை தொடங்கினால் நிதி இழப்பு ஏற்படலாம். இது தவிர கிரகண தோஷத்தால் இக்காலத்தில் நெருக்கமான ஒருவருடனான உறவு மோசமடையக்கூடும். மேலும் தேவையில்லாத அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும்.

ரிஷபம்
கிரகண தோஷமானது ரிஷப ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்களை வழங்கும். ஏனெனில் இந்த தோஷமானது ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் உருவாகவுள்ளது. இது செலவு மற்றும் இழப்பின் வீடாக கருதப்படுகிறது. எனவே இந்த தோஷத்தால் ரிஷப ராசிக்காரர்கள் வியாபாரத்தில் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். வணிகர்கள் ஒரு பெரிய ஒப்பந்தத்தை முடிக்க முடியாமல் போகும். பணிபுரிபவர்கள் பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டில் கிரகண தோஷம் உருவாகிறது. இது நோய் மற்றும் வயதின் வீடாக கருதப்படுகிறது. இதனால் இக்காலத்தில் ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். அதே வேளையில் இக்காலத்தில் அதிக வீண் செலவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். வணிகர்கள் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்பை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications