2023 இந்த 3 ராசிக்கு பிரச்சனைகள் மற்றும் கஷ்டங்களை தரக்கூடிய துரதிர்ஷ்டமான ஆண்டாக இருக்கப் போகுது..

இதுவரை நாம் 2023 ஆம் ஆண்டின் அதிர்ஷ்ட ராசிக்காரர்களைப் பார்த்தோம். இப்போது 2023 ஆம் ஆண்டின் துரதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

2022 ஆம் ஆண்டு நாம் வாழ்வில் பல நன்மைகள் மற்றும் தீமைகளை சந்தித்திருப்போம். பலருக்கு இந்த ஆண்டு மறக்க முடியாத ஓர் ஆண்டாக இருக்கலாம். எப்படியோ 2022 ஆம் ஆண்டின் இறுதியை நெருங்கிவிட்டோம். இன்னும் ஒரு மாதத்திற்குள் 2023 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். ஒருவருக்கு ஒரு ஆண்டு எப்படி இருக்கும் என்பதை அறிய ஜோதிடம் உதவுகிறது.

Puthandu Rasi Palan 2023: Unlucky Zodiac Signs In 2023 In Tamil

ஜோதிடத்தில் உள்ள 12 ராசிகளில் 2023 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாவும், சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் மற்றும் கஷ்டங்களை அதிகம் கொடுக்கக்கூடிய துரதிர்ஷ்டமான ஆண்டாகவும் இருக்கும். இதுவரை நாம் 2023 ஆம் ஆண்டின் அதிர்ஷ்ட ராசிக்காரர்களைப் பார்த்தோம். இப்போது 2023 ஆம் ஆண்டின் துரதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

2023 ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டவசமான ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டில் இவர்கள் தங்கள் வாழ்வில் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். இந்த ராசிக்காரர்கள் வேலை விஷயத்தில் சற்று அலட்சியமாக இருப்பார்கள். இது பணியிடத்தில் பல சிக்கல்களை சந்திக்க வைக்கும். குறிப்பாக நிதி பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். தேவையில்லாத ஆடம்பரத்திற்கு அதிகமாக பணத்தை செலவழிப்பீர்கள். தொழில் செய்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். திருமணமாகாதவர்களுக்கு இந்த ஆண்டில் திருமணம் நடைபெறாது. ஆனால் காலப்போக்கில் இது மாறலாம்.

மகரம்

மகரம்

2023 ஆம் ஆண்டில் மகர ராசிக்காரர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் முரண்பாடுகளை சந்திக்க நேரிடும். எனவே உறவில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தில் அதிக அக்கறை கொண்டிருந்தாலும், பெரும்பாலும் நல்ல முடிவுகளை பெறுவதில்லை. இவர்களின் அன்பை யாரும் புரிந்து கொள்ளமாட்டார்கள். திருமணமாகாத மகர ராசிக்காரர்கள் இந்த ஆண்டு தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க அன்பைத் தவிர பேங்க் பேலன்ஸ், எவ்வளவு சம்பளம், எங்கு வேலை போன்ற அனைத்தையுமே பார்ப்பார்கள். இதனால் இந்த ஆண்டில் திருமணம் நடைபெறுவது சற்று சந்தேகம் தான். மேலும் இவர்கள் இந்த ஆண்டில் மற்றவர்களின் அனுதாபத்தில் வாழ விரும்புவார்கள். மொத்தத்தில், 2023 மகர ராசிக்காரர்களின் வாழ்வில் பல துரதிர்ஷ்டவசமான விஷயங்கள் நடக்கக்கூடும்.

கும்பம்

கும்பம்

2023 ஆம் ஆண்டில் கும்ப ராசிக்காரர்கள் துரதிர்ஷ்டவசமானவர்களில் ஒருவராக உள்ளனர். இந்த ஆண்டில் இவர்களால் செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் போகும். இதனால் கடன் வாங்கும் அளவுக்கு நிதி பிரச்சனையை சந்திப்பார்கள். பணிபுரிபவர்கள் வேலையை இழந்து புதிய வேலையை தேடுவார்கள். எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு செய்யமாட்டார்கள். தங்களுக்கு தோன்றுவதை செய்ய விரும்புவார்கள். பயணத்திற்கு அதிக பணத்தை செலவழிப்பார்கள். குடும்பத்தைப் பற்றி அதிகம் சிந்திக்க மாட்டார்கள். தேவைகளுக்காக மட்டும் குடும்பத்தை அணுகுவார்கள். மொத்தத்தில் இந்த ஆண்டில் கடன் வாங்கி, அதனால் பிரச்சனையை சந்திப்பார்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, November 23, 2022, 12:34 [IST]
Desktop Bottom Promotion