For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புண்ணியம் தரும் புரட்டாசி சனி - பெருமாளுக்கு விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்

புரட்டாசி என்றதுமே அனைவருக்கும் முதலில் திருப்பதி ஏழுமலையான் வழிபாடுதான் நினைவுக்கு வரும். அதனால்தான் புரட்டாசி மாதத்தை பெருமாள் மாதம் என்று சொல்கிறார்கள். புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை பெருமாளுக்கா

|

புரட்டாசி என்ற வார்த்தையைக் கேட்கும்போதே நம் கண் முன் தோன்றுவது பெருமாளின் திருவுருவமே. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருப்போரும் உண்டு. நவகிரகங்களில் மகாவிஷ்ணுவின் அம்சமாக உருவானவர் புத பகவான். புதன் கிரகம் உச்ச பலம் பெறுவது கன்னி ராசியில் எனவேதான் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புரட்டாசி, பெருமாளுக்கு உரிய மாதம் என பெரியவர்கள் வகுத்திருக்கிறார்கள். புரட்டாசி திருவோணத்தில்தான் ஸ்ரீனிவாசப்பெருமாள் அவதரித்தார் என்பதால் புரட்டாசி மாதம் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருமலைவாசன் ஏழுமலையானுக்கு பத்து நாட்கள் பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி மாதத்தில் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும். திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன. புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். புரட்டாசி மாத சனிக்கிழமைகள் பெருமாள் விரதத்திற்கு உகந்தவை. இவ்வாண்டு நான்கு சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களுக்கு தவறாமல் சென்று வர வேண்டும். திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி வைத்து வழிபடுவார்கள். சனிபகவானல் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.

Purattasi sani viratham

பாவ வினைகளால் உண்டான பிணி, தடை, தோஷம், கண் திருஷ்டி போன்றவை விலகவும் கர்ம வினைகள் தொடராமல் இருக்கவும் ஆயுள், ஆரோக்கியம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்கியம் கிடைக்கவும் விரத முறைகள் காலம் காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றனர். உணவு கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் நிறுத்தி இருக்கும் விரதங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் அருமருந்து. அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: fasting
English summary

Purattasi sani viratham 2020: Fasting Rules and Benefits

Puratasi sani Saturdays in Puratasi Month are most auspicious days during which puratasi,sani vratha is observed decrease your negative effects from Saturn and Increase your wealth by performing Rituals to Lord Vishnu during this Purattasi month. Special pujas and prayers are observed on Saturdays in Purattasi month.
Desktop Bottom Promotion