Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
அதிர்ஷ்ட வீடு... பணமும் செல்வமும் சேர உங்க பீரோ இந்த திசையில் வைக்கணும்
பஞ்சபூதங்களின் அம்சம் நிறைந்தது வீடு. அந்த வீடு அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கவேண்டும். சக்தி நிறைந்த வீட்டில் செல்வமும் அதிர்ஷ்டமும் சேர்ந்தே வரும். அந்த வீட்டில் இருப்பவர்கள் அதிர்ஷ்டமாக இருப்பார்கள்.
பஞ்சபூதங்களின் அம்சம் நிறைந்தது வீடு. அந்த வீடு அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கவேண்டும். சக்தி நிறைந்த வீட்டில் செல்வமும் அதிர்ஷ்டமும் சேர்ந்தே வரும். அந்த வீட்டில் இருப்பவர்கள் அதிர்ஷ்டமாக இருப்பார்கள். பஞ்சபூத சக்திகள் நிறைந்த வீட்டில் பணம் சரளமாக வரும். சிலர் வீட்டில் கஷ்டங்களும் சங்கடங்களும் சேர்ந்தே வரும் பணம் வரவே வராது. இதற்குக் காரணம் வாஸ்து குறைபாடுதான். குறைகளை நீக்கினால் செல்வம் தாராளமாக வரும்.
நாம் வசிக்கும் வீடு என்பது அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கவேண்டும். அப்போதுதான் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ முடியும். பணம் குறைவின்றி வரும். சிலரது வீட்டில் கடன்கள் அதிகமாகும் விரய செலவுகள் ஏற்படும். இதற்குக் காரணம் வாஸ்து குறைபாடுதான். ஒருவரின் வீட்டின் பீரோவில் வைத்த பணம் செலவு ஆகாது. ஒருவரின் வீட்டின் பீரோவில் வைத்த பணம் வைத்த வேகத்தில் காணாமல் போகும்.

நாம் வசிக்கும் வீட்டை அதிர்ஷ்டகரமானதாக மாற்றினால் பணம் குறைவின்றி வரும். நோய் நொடிகள் எதுவும் இன்றி சந்தோசமாக வாழலாம். வீட்டின் மூலைப்பகுதி சரியாக அமைந்து அந்த மூலையில் சரியான பொருட்களை வைத்தால் செல்வம் பெருகும். '

குபேர பகுதி
பணம் எல்லோருக்கும் முக்கியம். வசதியாக சேர்த்து வைப்பதற்கு வருவதை விட தினசரியும் செலவு செய்ய குறைவு இன்றி பணம் கிடைக்க நடு வடக்கு நன்றாக இருக்க வேண்டும். அங்கே எந்த இடைஞ்சலும் இருக்கக் கூடாது. சமையலறை, படிக்கட்டு எதுவும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பணம் வருவது தடைபடும். குபேரன் பார்வை தெளிவாக விழும் பகுதி அதுதான். அந்த பகுதி அடைபட்டால் பணம் வருவது தடைபடும்.

வடகிழக்கு
நம் வீட்டின் ஈசான்யம் எனப்படும் வடகிழக்கு மூலைப்பகுதி காற்றும் வெளிச்சமும் கொண்டதாக இருக்க வேண்டும். ஈசான்யம் எனப்படும் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய அந்த மூளைப்பகுதியில் படிக்கட்டு வந்தாலோ அந்த வீடு சரியிருக்காது.

நைருதி - தென்மேற்கு
நைருதி மூலை. சேகரிப்பு இடம். அந்த பகுதியில் நுழைவு இருக்கக்கூடாது. திறப்பு இருந்தால் அதை முதலில் அடைக்க வேண்டும். தென்மேற்கு மூலையில் வாசல் வரக்கூடாது. எதிர்மறையான எண்ணங்களை கொடுக்கும்.

அக்னி மூலை - உடல்நிலை பாதிப்பு
அக்னி மூலை சமையல் செய்யும் மூலை. அந்த மூலைப்பகுதி தெற்கும் கிழக்கும் இணைக்கும் மூலையில் கிச்சன் வைக்க வேண்டும். அக்னி மூலையில் நீரும் நெருப்பும் வைக்கக் கூடாது. இது பெண்களுக்கு உடல்நிலையில் பாதிப்பை தரும்.

விளக்கு ஏற்றுங்கள்
பிரம்ம ஸ்தானம் என்பது வீட்டின் நடு மையப்பகுதியில் சிலர் தூண் வைத்திருப்பார்கள். அது வரக்கூடாது. அப்படி வந்தால் இது அபாயமான விளைவுகளைத் தரும். வீடு வாஸ்து குறைபாடுடன் இருந்தால் அதை சரி செய்ய நெய் தீபம் ஏற்றுங்கள் காலையில் கிழக்கு பார்த்தும் மாலையில் மேற்கு பார்த்தும் விளக்கு ஏற்றி வைத்து வழிபடுங்கள். 30 நாட்கள் தொடர்ந்து இந்த பிரார்த்தனை செய்ய நன்மைகள் நடக்கும். சூரிய உதயம், சந்திர உதய நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபடுங்கள்.

பீரோ வைக்கும் இடம்
தென்மேற்கு படுக்கை அறையில் பீரோவில் உடைகள் வைப்போம். அது கூட நகை பணம் வைக்கக் கூடாது. வடக்கு, கிழக்கு பார்த்து வைத்த பீரோவில் வைத்து நகை பணம் வைக்கலாம். வடக்கு மத்தி சரியான இடம். இந்த பகுதியில பீரோ வைத்து நகை, பணம் வைக்கலாம். கஜானா வைக்கலாம். திரும்ப திரும்ப பணம் வரும்.
வடக்கு திசையில் நடு பகுதியில் வடக்கு பார்த்து பீரோ வைக்கவும். வருமானம் அதிகம் இருக்கும். தெற்கு பார்த்த வீடு. கிழக்கை ஒட்டிய வடக்கு பகுதியில் வைக்கலாம். தென் மேற்கு பீரோ வைக்க சொல்வார்கள். அது ஸ்டோர் ரூம். அதிர்ஷ்டம் தரக்கூடியது வடக்குதான். மேற்கு பார்த்த வீடு, கிழக்கு பார்த்த வீடு இது சரியாக இருக்கும். கிழக்கு ஒட்டிய பகுதியில் பீரோ வைக்கலாம்.

குபேரன் பார்வை
வடக்கு குபேர மூலை. தென்மேற்கு கன்னி மூலை. குபேர மூலை வேறு. கன்னி மூலையில் பாரமான பொருள் வைக்கலாம். குபேர மூலை வடக்கு மூலை. வடக்கில் இருந்து பார்வையிடுவார் குபேரன். இந்த இடத்தில் பீரோ வைத்து பணம் வைத்தால் செல்வம் பெருகும். வடக்கு நோக்கி பீரோ வைத்தால் குபேரன் பார்வை கிடைக்கும் எதிர்பாராத அளவிற்கு பணம் நகை கிடைக்கும். குபேர மூலை முக்கியமானது.

பணம் வைக்கக்கூடாத இடம்
தெற்கு பகுதியில் பீரோ வைக்கலாம் பணம் சேரும். அது தவிர சமையல் செய்யும் அக்னி மூலையில் கஜானா வைத்தால் பணம் எரிந்து போகும். செலவு அதிகம் வரும். சமையல் அறைக்குள் பூஜை ரூம் வைக்கக் கூடாது. வடமேற்கு பகுதியில் பீரோ வைக்கக் கூடாது பணம் காற்று போல போய்விடும்.

நல்ல அதிர்வுகள் வரும்
பீரோவிற்குள் தங்க தகடு சேர்த்த பிரமீடு, வெள்ளியில் செய்த பிரமீடு, புதன்கிழமை வியாழன் வெள்ளி கிழமைகளில் பீரோவிற்குள் வைக்கலாம். நிறைய அதிர்ஷ்டத்தை தரும் பாசிட்டிவ் எனர்ஜியை தரும். லட்சுமி படம் போட்ட தங்க நாணயங்களை வைக்கலாம். பணம் பெருகும். குபேர சிலையை பணப்பெட்டிக்குள் வைக்கலாம். அப்படி வைத்தால் பணம் வரும்.



Click it and Unblock the Notifications