Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
பொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு ராசிக்காரரும் எதை தானம் செய்வது நல்லது தெரியுமா?
பொதுவாக எந்த ஒரு நல்ல நாளிலும் தானம், தர்மம் செய்வது மிகவும் நல்ல விஷயமாக கருதப்படுகிறது. அந்த வகையில் பொங்கல் பண்டிகையன்று ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த பொருட்களை தானம் செய்வது நல்லது என்பதை இப்போது காண்போம்.
Pongal 2023: தமிழர்களால் மிகவும் சிறப்பாக மற்றும் பாரம்பரியமாக கொண்டாடப்படும் ஓர் முக்கியமான பண்டிகை தான் பொங்கல். இந்த பொங்கல் பண்டிகை ஒரு அறுவடை பண்டிகை ஆகும். இந்த பண்டிகையானது நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. அதுவும் இந்த பொங்கல் பண்டிகையன்று அறுவடை செய்த புதிய அரிசியைக் கொண்டு பால், வெல்லம் சேர்த்து பொங்கல் செய்து, அதை சூரியனுக்கும், மறுநாள் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பொதுவாக எந்த ஒரு நல்ல நாளிலும் தானம், தர்மம் செய்வது மிகவும் நல்ல விஷயமாக கருதப்படுகிறது. அந்த வகையில் பொங்கல் பண்டிகையன்று ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த பொருட்களை தானம் செய்வது நல்லது என்பதை இப்போது காண்போம். அதைத் தெரிந்து, வருகிற பொங்கல் பண்டிகையன்று தானம் செய்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் பொங்கல் பண்டிகையன்று எள், வெல்லம் போன்றவற்றை தானம் செய்வது நல்லது. இது தவிர இனிப்புப் பொருட்களையும் தானம் செய்யலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் பொங்கல் பண்டிகை நாளில் ஏழை எளியோருக்கு புதிய ஆடைகளை தானம் செய்வது மிகவும் நல்லது. மேலும் இவர்கள் எள் கலந்த இனிப்புகளையும் தானம் செய்யலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் கருப்பு நிற எள்ளு விதைகளை பொங்கல் பண்டிகை நாளில் தானம் செய்வது நல்லது. அதிலும் வெள்ளை எள்ளை தானம் செய்தால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். இது தவிர இந்த ராசிக்காரர்கள் பச்சை நிற புதிய ஆடைகளை தானமாகவும் வழங்கலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் பொங்கல் பண்டிகை நாளில் எள்ளு, வெல்லம் மற்றும் ஜவ்வரிசி போன்ற உணவுப் பொருட்களை தானம் செய்தால், வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சி நிறைந்தும் இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியைச் சேர்ந்தவர்கள், பொங்கல் தினத்தன்று புதிய ஆடைகளுடன், எள்ளு, வெல்லம் போன்றவற்றை தானம் செய்வது. இதனால் வாழ்க்கை எப்போதும் இனிமையாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் எண்ணெய், எள்ளு விதைகள் மற்றும் கருப்பு உளுந்து போன்றவற்றை பொங்கல் பண்டிகை நாளில் தானமாக வழங்குவது நல்லது.

துலாம்
துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் பொங்கல் பண்டிகையன்று எண்ணெய், எள்ளு விதைகள், பருத்தி போன்றவற்றை தானம் செய்வது நல்லது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் பொங்கல் பண்டிகையன்று அரிசி, எள்ளு போன்றவற்றை தானமாக வழங்குவது மிகவும் நல்லது.

தனுசு
தனுசு ராசியை சேர்ந்தவர்கள் பொங்கல் நாளில் கொண்டைக்கடலை, எள்ளு விதைகள் போன்றவற்றை தானம் செய்வது நற்பலனைத் தரும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் அறுவடை பண்டிகையான பொங்கல் பண்டிகையன்று எள்ளு, ஆடைகள், எண்ணெய் போன்றவற்றை தானம் செய்வது நல்லது.

கும்பம்
கும்ப ராசியைச் சேர்ந்தவர்கள் பொங்கல் பண்டிகை நாளில் எள்ளு, எண்ணெய், சீப்பு மற்றும் கருப்பு நிற ஆடைகளை தானமாக வழங்குவது மிகவும் நல்லது.

மீனம்
மீன ராசிக்காரர்கள் பொங்கல் பண்டிகையன்று ஜவ்வரிசி, கொண்டைக்கடலை, எள்ளு விதைகள், ஆடைகள் போன்றவற்றை ஏழை எளியோருக்கு தானமாக வழங்குவது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications