For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த பொருளை தானம் செய்வது நல்லது?

பொதுவாக ஒரு நல்ல நாளன்று தானம் வழங்குவது மிகவும் நல்லது. அதிலும் தமிழர்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடும் பொங்கல் பண்டிகையின் போது தானம் செய்வது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

|

தமிழர்கள் பாரம்பரியமாக மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் ஓர் பண்டிகை தான் பொங்கல். இந்த பொங்கல் பண்டிகையின் முதல் நாளில் பழையன கழிந்து புதியன புகுவதற்கு போகி பண்டிகை கொண்டாடப்படகிறது. இரண்டாம் நாள் இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் அறுவடை செய்த நெல்லில் இருந்து பெறப்பட்ட புத்தரிசியைக் கொண்டு பொங்கலிட்டு தைப்பொங்கல் பண்டிகையும், அதற்கு மறுநாள் விவாசயத்திற்கு உதவி புரிந்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.

Pongal 2022: Things To Donate On Pongal According To Zodiac Sign

பொதுவாக ஒரு நல்ல நாளன்று தானம் வழங்குவது மிகவும் நல்லது. அதிலும் தமிழர்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடும் பொங்கல் பண்டிகையின் போது தானம் செய்வது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இப்போது ராசிப்படி ஒவ்வொரு ராசிக்காரரும் பொங்கல் பண்டிகையன்று எந்த பொருளை தானம் செய்யலாம் என்பதைக் காண்போம். அதைப் படித்து அந்த பொருட்களை தானம் செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

ஜோதிடத்தின் படி, மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். எனவே மேஷ ராசிக்காரர்கள் பிரகாசமான எதிர்காலத்திற்காக பொங்கல் பண்டிகையன்று வெல்லம் மற்றும் எள்ளு விதைகளை தானமாக வழங்க வேண்டும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள், பொங்கல் பண்டிகை நாளில் வறுமையில் வாடுபவர்களுக்கு புதிய ஆடைகளை வாங்கி தானமாக கொடுக்கலாம். அதோடு எள்ளு விதைகளையும் தானமாக வழங்குவது நல்லது.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியின் அதிபதி புதன். ஜோதிடத்தின் படி, இந்த ராசிக்காரர்கள் பொங்கல் பண்டிகையின் போது எள்ளு விதைகள் மற்றும் முலாம் பழத்தை தானமாக வழங்குவது அதிர்ஷ்டத்தை அளிக்கும். அதோடு பசு மாட்டிற்கு பச்சைப் புல்லைக் கொடுப்பது நன்மை பயக்கும்.

கடகம்

கடகம்

ஜோதிடத்தின் படி, கடக ராசியின் அதிபதி சந்திரன். எனவே இந்த ராசிக்காரர்கள் இந்த வருடம் அதிர்ஷ்டமானதாக இருக்க பொங்கல் பண்டிகையன்று எள்ளு விதைகள், பழங்கள் மற்றும் ஆடைகளை தானமாக வழங்க வேண்டும்.

சிம்மம்

சிம்மம்

சிங்கம் போன்ற கம்பீர குணத்தைக் கொண்டவர்கள் தான் சிம்ம ராசிக்காரர்கள். இந்த ராசியின் அதிபதி சூரியன். இந்த ராசிக்காரர்கள் பொங்கல் பண்டிகையன்று எள்ளு விதைகள் மற்றும் போர்வையை தானமாக வழங்கினால் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.

கன்னி

கன்னி

ஜோதிடத்தின் படி, கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த ராசிக்காரர்கள் பொங்கல் பண்டிகையன்று எள்ளு, போர்வைகள், எண்ணெய் மற்றும் உளுத்தம் பருப்பை தானம் செய்வது நல்லது. அதோடு பசுவுக்கு தீவனத்தை வழங்கவும் வேண்டும்.

துலாம்

துலாம்

ஜோதிடத்தின் படி, துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ராசிக்காரர்கள் சந்தனம், பால் மற்றும் அரிசி போன்றவற்றை தானம் செய்வது நல்லது. இதனால் இந்த வருடம் இவர்களுக்கு பிரகாசமாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

ஜோதிடத்தின் படி, விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசிக்காரர்கள் பொங்கல் பண்டிகையின் போது அரிசி மற்றும் பருப்பு வகைகளை தானமாக வழங்குவது நல்லது. மேலும் வெல்லத்தை தானம் செய்வதும் நன்மை பயக்கும்.

தனுசு

தனுசு

ஜோதிடத்தின் படி, தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். இந்த ராசிக்காரர்கள் பொங்கல் தினத்தன்று எள்ளு விதைகள் மற்றும் கடலைப் பருப்பை தானமாக வழங்குவது, அதிர்ஷ்டத்தை அளிக்கும்.

மகரம்

மகரம்

ஜோதிடத்தின் படி, மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த ராசிக்காரர்கள் எண்ணெய், எள்ளு விதைகள், போர்வை அல்லது புத்தகங்களை தானமாக வழங்குவது, அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் அளிக்கும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். இந்த ராசிக்காரர்கள் பொங்கல் பண்டிகையின்று எள்ளு விதைகள் மற்றும் எண்ணெயை தானமாக வழங்குவது நல்லது.

மீனம்

மீனம்

ஜோதிடத்தின் படி, மீன ராசியின் அதிபதி குரு பகவான். இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்திற்காக பொங்கல் பண்டிகை நாளில் எள்ளு விதைகள், எண்ணெய், போர்வை அல்லது புத்தகங்களை தானமாக வழங்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Pongal 2022: Things To Donate On Pongal According To Zodiac Sign

Check out the list of things that you can donate according to your zodiac sign.
Desktop Bottom Promotion