For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு பிடித்தவர்களுக்கு வித்தியாசமான பொங்கல் வாழ்த்து சொல்லணுமா?… அப்ப இத அனுப்புங்க…!

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல், தமிழர்களின் தேசிய திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது.

|

அறுவடை திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை, இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டாலும், தென்னிந்தியாவில் தமிழகத்தில்தான் வெகு விமர்சையாக நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல், தமிழர்களின் தேசிய திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் முக்கியமான தொழில் விவசாயம். வடமாநிலத்தில் முக்கியமாக கோதுமையும், தென்மாநிலத்தில் அரிசி, சிறுதானியங்கள் என பயிரிடப்படுகின்றன. ஆடி மாதத்தில் பயிரடப்படும் அரிசி, கரும்பு, மஞ்சள் போன்ற பயிர்கள் தை மாதத்தில் அறுவடை செய்யப்படும் போது, இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

pongal-wishes-messages-quotes-to-share-with-your-lov

பொதுவாக ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கும் பொங்கல் விழா, நான்கு நாட்களும் மிக கோலாகலமாக நடைபெறும். உழவர், சூரியன், மாடு, ஆடு என விவசாயத்திற்கு பயன்படுபவைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இந்த பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பொங்கல் பண்டிகைக்கு உங்கள் நண்பர்கள், உறவினர்கள், காதலர் என அனைவருக்கும் வாழ்த்துக்களை நீங்கள் தெரிவிக்க சில வாழ்த்துக்களை இங்கே தெரிவிக்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கல் வாழ்த்துக்கள்

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

தை திருநாளில் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

MOST READ:நகர பொங்கலை காட்டிலும் கிராமத்து பொங்கல் பண்டிகையின் சிறப்புகள் என்ன தெரியுமா?

மங்கலம் தங்கிட...

மங்கலம் தங்கிட...

பொங்கல் பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட! நலமும் வளமும் என்றும் சூழ்ந்திட !அன்னைத் தமிழ் மணம் பரப்பி வாழ்ந்திட வாழ்த்துகிறோம் !

இனிக்கட்டும்...

இனிக்கட்டும்...

விடிகின்ற பொழுது எங்கும் கரும்பாய் இனிக்கட்டும், இந்த தைத் திருநாள் முதல்..... பொங்கல் வாழ்த்துகள்!

பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல்

அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!

MOST READ:தை பொங்கல் ஸ்பெஷல்... தை பிறந்தால் வழி பிறக்கும் ஏன் எப்படி எதற்கு தெரியுமா?

மனமார்ந்த நன்றி

மனமார்ந்த நன்றி

தை திருநாளில் நாம் உண்ண உணவு அளிக்கும் இயற்கை அன்னைக்கும், உழவர்களுக்கும் என்றும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வோம். பொங்கல் நல்வாழ்த்துகள்.

செல்வம், அன்பு

செல்வம், அன்பு

தைத்திருநாளாம் இந்தப் பொங்கல் திருநாள் உங்கள் வாழ்வில் அனைத்து விதமான செல்வத்தையும், என்றும் குறையாத அன்பையும் கொண்டு வரும் புதிய நாளாக அமைய அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்

மகிழ்ச்சி வெள்ளம்

மகிழ்ச்சி வெள்ளம்

மங்களம் பொங்கட்டும்...

மகிழ்ச்சி வெள்ளம் பெருகட்டும்...

எண்ணியது நிறைவேறட்டும்...

தமிழர் திருநாள் தை பொங்கல் நல்வாழ்த்துகள்...

இன்று முதல் இனிய பொங்கல் போல உங்கள் வாழ்க்கையும் இனியதாக இருக்கட்டும். பொங்கல் வாழ்த்துக்கள்!

MOST READ:ஜல்லிக்கட்டில் மொத்தம் எத்தனை வகைகள் உள்ளது தெரியுமா? ஜல்லிக்கட்டின் தெரியாத வரலாறு...!

பொங்கல் குறுஞ்செய்தி

பொங்கல் குறுஞ்செய்தி

வெல்லம், பால் மற்றும் இந்த உலர்ந்த பழங்களின் இனிப்புகள் போல உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சந்தோஷம் என்னும் இனிப்புகள் கிடைக்கும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!

பொங்கல் பண்டிகையில் அன்பின் ஒவ்வொரு நிறமும் உங்கள் வீட்டையும் இதயத்தையும் மகிழ்ச்சியுடன் நிறைய நிரப்பக்கூடும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

அறுவடை திருவிழா

அறுவடை திருவிழா

இந்த அறுவடை திருவிழா உங்கள் வாழ்க்கையிலிருந்து உங்கள் கவலைகள் மற்றும் அச்சங்கள் அனைத்தையும் குறைத்து, உங்கள் இதயத்தை அமைதியான மற்றும் ஆரோக்கியமான எண்ணங்களால் நிரப்பட்டும். இனிய பொங்கல் வாழ்த்துகள்!

இந்த புனிதமான அலங்காரம் மற்றும் அழகான கோலங்களுடன் சேர்ந்து சந்திப்போம், வாழ்த்துவோம், சாப்பிடுவோம். உங்களுக்கு என்னுடைய இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Pongal 2022: Wishes, Messages, Quotes to share with your loved ones

Here are the makar sankranti wishes, messages, quotes and status messages to share with your loved ones.
Desktop Bottom Promotion