Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
அக்டோபர் மாதம் இந்த 4 கிரகங்கள் இடம் மாறுவதால், இந்த 6 ராசிக்கு சூப்பரா இருக்கபோகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
அக்டோபர் மாதம் 4 கிரகங்கள் இடம் மாறப் போகின்றன. மாதத்தின் தொடக்கத்தில் சுக்கிரனும், புதனும் தங்கள் இடத்தை மாற்றுகிறார்கள். மேலும் சூரியன் மற்றும் செவ்வாயும் தனது இடத்தை மாற்றவுள்ளன.
அக்டோபர் மாதம் 4 கிரகங்கள் இடம் மாறப் போகின்றன. மாதத்தின் தொடக்கத்தில் சுக்கிரனும், புதனும் தங்கள் இடத்தை மாற்றுகிறார்கள். அதில் சுக்கிரன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கும், புதன் துலாம் ராசியில் இருந்து திரும்பி கன்னி ராசிக்கும் செல்லவிருக்கின்றன. மேலும் சூரியன் மற்றும் செவ்வாயும் தனது இடத்தை மாற்றவுள்ளன.

இந்த கிரகங்களின் மாற்றத்தால், பல ராசிகளில் நல்ல மாற்றங்கள் ஏற்படப் போகின்றன. இப்போது அக்டோபர் 2021-இல் நடக்கும் கிரக மாற்றத்தால் எந்த ராசிக்கு சூப்பராக இருக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம்.

மேஷம்
அக்டோபரில் நடக்கும் நான்கு கிரகங்களின் மாற்றம் மேஷ ராசிக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் பண பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, பணம் திரட்டுவதில் வெற்றி பெறுவார்கள். மேலும் இவர்கள் அனைத்து பிரச்சனைகளையும் சிறப்பாக சமாளிப்பார்கள். பணிபுரிபவர்கள் தங்கள் பணியிடத்தில் வெற்றி பெறுவார்கள். கிரகங்களின் மாற்றத்தால், நீதிமன்ற வழக்குகளிலும் வெற்றி காண்பார்கள். பணிபுரிபவர்கள், சக ஊழியர்களின் முழு ஆதரவையும் பெறுவார்கள். இக்காலத்தில், மேஷ ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

மிதுனம்
அக்டோபர் மாதத்தில் நடக்கும் கிரகங்களின் மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு உகந்ததாக இருக்கும். இம்மாதத்தில் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை சிறப்பாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

சிம்மம்
அக்டோபரில் நடக்கும் கிரக மாற்றங்கள் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். இம்மாதத்தில் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும் மற்றும் எதிர்காலத்தை வலுப்படுத்த ஏராளமான நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கு இம்மாதம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இம்மாதத்தில் குடும்பத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். அதே வேளையில் பொருள் வசதிகள் அதிகரிக்கும் மற்றும் பழைய கடன்களில் இருந்து விடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடனான கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் உங்கள் வேலையைப் பாராட்டுவார்கள்.

துலாம்
அக்டோபரில் நடக்கும் கிரகங்களின் மாற்றம் துலாம் ராசிக்கு சாதகமான சூழ்நிலைகளை கொண்டுவரும். இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் சொத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டால், அவர்களுக்கு எதிர்காலத்தில் நிறைய நன்மைகள் கிடைக்கும். மூதாதையர் சொத்திலிருந்தும் நீங்கள் நன்மை பெறுவீர்கள். நீங்கள் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள் அல்லது வெளிநாட்டில் வேலை செய்கிறீர்கள் என்றால், இந்த காலம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட நீங்கள் திட்டமிடுவீர்கள்.

தனுசு
அக்டோபர் மாதத்தில் நடக்கும் கிரகங்களின் மாற்றம் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களைத் தரும். மாணவர்கள் இம்மாதத்தில் சிறந்த செயல்திறனைப் பெறுவார்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். நீங்கள் வீடு அல்லது சொத்து வாங்க விரும்பினால், உங்கள் விருப்பம் நிறைவேறும். அதே வேளையில், பணியிடத்தில் சாதகமான சூழல் உருவாகும் மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

கும்பம்
நான்கு கிரகங்களின் இடமாற்றத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான காலமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் குடும்பத்தில் வசதிகள் அதிகரிக்கும் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும், வியாபாரம் செழிக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடன் காதல் தருணங்களை அனுபவிப்பீர்கள். உங்களின் சமூக தொடர்பு அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும். மேலும் குடும்பத்திற்கும் வேலைக்கும் இடையே சமநிலையைப் பராமரிப்பீர்கள்.



Click it and Unblock the Notifications