Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
செப்டம்பர் மாத கிரக பெயர்ச்சிகளால் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது தெரியுமா?
2022 செப்டம்பர் மாத கிரக நிலைகளால் சில ராசிக்காரர்கள் தொழில், வியாபாரம் மற்றும் நிதி ரீதியாக நல்ல பலன்கள் கிடைக்கும்.
செப்டம்பர் மாதத்தில் நுழையவுள்ளோம். ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும். அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் 3 கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. அதில் செப்டம்பர் 17 ஆம் தேதி சூரியன் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு செல்கிறார். கிரகங்களின் இளவரசனான புதன் செப்டம்பர் 10 ஆம் தேதி கன்னி ராசியில் வக்ரமாகிறார்.

அதன் பின் செப்டம்பர் 24 ஆம் தேதி சுக்கிரன் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு செல்கிறார். அதற்கு முன் செப்டம்பர் 15 ஆம் தேதி சிம்ம ராசியில் சுக்கிரன் அஸ்தமனமாகிறார். இந்த கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், செப்டம்பர் மாத கிரக நிலைகளால் சில ராசிக்காரர்கள் தொழில், வியாபாரம் மற்றும் நிதி ரீதியாக நல்ல பலன்கள் கிடைக்கும். இப்போது செப்டம்பர் மாத கிரக பெயர்ச்சிகளால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
செப்டம்பர் மாத கிரக மாற்றங்கள் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். தொழிலில் சாதனை படைப்பீர்கள். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலதிபர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். உங்களின் நிலை இம்மாதத்தில் உயரும். மாணவர்கள் இம்மாதத்தில் சிறப்பான பலனைப் பெறுவார்கள். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். ஆனால் உங்கள் துணையுடன் பேசும் போது சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்திலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

மிதுனம்
செப்டம்பர் மாதத்தில் மிதுன ராசிக்காரர்கள் கிரக மாற்றங்களால் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள். தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். மன அழுத்தம் குறையும். வணிகர்களுக்கு இம்மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் சில இழப்புகளை சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்வில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் உடல்நிலை சாதகமாக இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக அதிர்ஷ்டமானதாக இருக்கும். அனைத்திலும் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தினர்களின் ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் கலவையான பலன்கள் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். ஆனால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

கும்பம்
செப்டம்பர் மாதம் கும்ப ராசிக்காரர்களுக்கு செல்வம் அடிப்படையில் சிறப்பாக இருக்கும். இம்மாதத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். தொழிலதிபர்கள் இம்மாதத்தில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புக்களைப் பெறுவார்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவழிப்பீர்கள். பயணம் செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். நிதியைப் பொறுத்தவரை, இம்மாதம் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.

மீனம்
செப்டம்பர் மாதம் மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் நன்கு வேலை செய்வீர்கள். இம்மாதத்தில் பல சவால்களை சந்திப்பீர்கள். இருப்பினும் அதை திறம்பட சமாளிப்பீர்கள். மாணவர்களுக்கு கலவையானதாக இருக்கும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உறவுகளும் சிறப்பாக இருக்கும். திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை, இம்மாதம் சிறப்பானதாக இருக்கும்.



Click it and Unblock the Notifications