Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்... -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் வேர்க்கடலை குடைமிளகாய் குருமா - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க -
செஃப் தீனா ஸ்டைல் இட்லி பொடியின் ஸ்பெஷலே கடைசியாக சேர்க்கும் இந்த ஒரு பொருள் தாங்க.. அது என்னன்னு பாருங்களேன். -
இந்த 3 மாதத்தில் பிறந்தவர்களுக்கு கெட்டவர்களை பார்த்தவுடனேயே கண்டறியும் அதிசய சக்தி இருக்குமாம் -
முகம் கருப்பா இருக்கா? பலாப்பழம் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. வெள்ளையாவீங்க.. -
இந்தியாவில் ஆண் நதி என்று அழைக்கப்படும் ஒரே நதி எது தெரியுமா? இந்தியாவின் மிகப்பெரிய நதியும் இதுதானாம் -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..! -
கோயம்பத்தூர் ஸ்டைல் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
உருளைக்கிழங்கை ஒருவாட்டி இந்த பக்குவத்துல வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
அக்டோபரில் நிகழும் 7 கிரக பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்...
2022 அக்டோபர் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளின் தேதிகள் மற்றும் எந்தெந்த ராசிக்காரர்கள் மோசமான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கிரகங்கள் ஒவ்வொன்றும் சீரான இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறுகின்றன. அந்த வகையில் செப்டம்பர் மாதம் முடிந்து 2022 ஆம் ஆண்டின் பத்தாவது மாதமான அக்டோபர் மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த அக்டோபர் மாதத்தில் நிறைய கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. அதோடு அக்டோபர் மாதத்தில் சூரிய கிரகணமும் நிகழவுள்ளது.

கிரகங்களின் ராசி மாற்றம் மற்றும் கிரகண நிகழ்வு போன்றவை மனித வாழ்க்கையில் பலவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சிலர் நற்பலன்களையோ அல்லது மோசமான பலன்களையோ பெறலாம். இப்போது 2022 அக்டோபர் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளின் தேதிகள் மற்றும் எந்தெந்த ராசிக்காரர்கள் மோசமான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

2022 அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகள்
* 2022 அக்டோபர் 02 - கன்னியில் புதன்
* 2022 அக்டோபர் 16 - மிதுனத்தில் செவ்வாய்
* 2022 அக்டோபர் 17 - துலாமில் சூரியன்
* 2022 அக்டோபர் 18 - துலாமில் சுக்கிரன்
* 2022 அக்டோபர் 23 - மரகத்தில் சனி வக்ர நிவர்த்தி
* 2022 அக்டோபர் 26 - துலாமில் புதன்
* 2022 அக்டோபர் 30 - மிதுனத்தில் செவ்வாய் வக்ர பெயர்ச்சி

மிதுனம்
அக்டோபர் மாதத்தில் மிதுன ராசிக்காரர்கள் பல ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். வாழ்வின் சில பகுதிகள் மோசமாக பாதிக்கப்படலாம். நிதி ரீதியாக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். செலவுகளில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தில் அலட்சியம் கூடாது. மொத்தத்தில் அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் உடல் மற்றும் மன ரீதியான சவால்களை சந்திக்க நேரிடும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கும் அக்டோபர் மாதம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். தொழிலில் சில சவால்களை சந்திக்க நேரிடும். மாணவர்கள் மாதத்தின் இரண்டாம் பாதியில் சவால்களை சந்திக்க நேரிடும். உறவுகளில் சில தவறான புரிதல்கள் இருக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் அதிக சண்டைகள் ஏற்படும். மொத்தத்தில் அக்டோபர் மாதம் சவால்கள் நிறைந்ததாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சற்று கடினமானதாக இருக்கும். நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும். காதல் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும், திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். மாணவர்கள் சில பிரச்சனைகளை சந்திப்பார்கள். படிப்பில் தடைகள் ஏற்படலாம். குடும்ப வாழ்க்கை சிரமங்கள் நிறைந்ததாக இருக்கும். குடும்பத்தில் சில தகராறுகள் ஏற்படலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். பண விஷயத்தில் பெரிய சவால்களை சந்திக்க நேரிடும். நிதி சிக்கல்களை சந்திக்க நிறைய வாய்ப்புள்ளது. அதிக செலவுகள் ஏற்படக்கூடும். இருப்பினும், செலவுகளைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் கவலைகள் மற்றும் பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும். நிதி மற்றும் குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருக்கும். செலவுகள் அதிகரிக்கலாம். எனவே உங்கள் செலவுகளை கவனியுங்கள். காதல் உறவில் ஏற்ற தாழ்வுகளை சந்திக்கலாம். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படலாம். மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். இருப்பினும் தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications