Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
நவம்பர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
நவம்பர் மாதத்தில் 11 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 5 கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இப்போது 2022 நவம்பர் மாதத்தில் எந்தெந்த நாட்களில் கிரகங்கள் ராசியை மாற்றப் போகின்றன என்பதைக் காண்போம்.
ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் சீரான இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜோதிடத்தைப் பொறுத்தவரை, 2022 நவம்பர் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றுவதோடு, ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் நிகழவுள்ளது. முக்கியமாக சுப கிரகமான குரு தனது சொந்த ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

அதுவும் நவம்பர் மாதத்தில் 11 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 5 கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இப்போது 2022 நவம்பர் மாதத்தில் எந்தெந்த நாட்களில் கிரகங்கள் ராசியை மாற்றப் போகின்றன மற்றும் யாருக்கு அதனால் நற்பலன்கள் கிடைக்கவுள்ளன என்பதைக் காண்போம்.

2022 நவம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி
முதலாவதாக 2022 நவம்பர் 11 ஆம் தேதி அழகு, காதல், ஆடம்பரம் போன்றவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன், தனது சொந்த ராசியான துலாம் ராசியை விட்டு விருச்சிக ராசிக்கு செல்கிறார். சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் வலுவாக இருந்தால், வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். அதுவே சுக்கிரன் பலவீனமாக இருந்தால், வாழ்வில் மகிழ்ச்சி, சுகம் போன்றவற்றில் பற்றாக்குறை இருக்கும்.

2022 நவம்பர் மாத செவ்வாய் வக்ர பெயர்ச்சி
கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் 2022 நவம்பர் 13 ஆம் தேதி வக்ர நிலையில் ரிஷப ராசிக்கு செல்கிறார். இந்த செவ்வாய் ஒருவரது ஜாதகத்தில் வலுவாக இருந்தால், அவர் தைரியமாக எதையும் எதிர்கொள்ளக்கூடியவராக இருப்பார். ஜாதகத்தில் செவ்வாய் வலுபெற வேண்டுமானால் அனுமனை வழிபட வேண்டும்.

2022 நவம்பர் மாத புதன் பெயர்ச்சி
புத்திகாரகனான புதன் 2022 நவம்பர் 13 ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார். இந்த புதன் கன்னி மற்றும் மிதுனம் ஆகியவற்றின் அதிபதியாவார். ஒருவரது ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால், வியாபாரத்திலும், பேச்சிலும் சிறந்து விளங்குவார்கள் மற்றும் புத்திசாலியாக இருப்பார்கள். ஜாதகத்தில் புதனின் நிலை வலுபெற வேண்டுமானால், புதன் கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிந்து விநாயகரை வழிபடுங்கள்.

2022 நவம்பர் மாத சூரிய பெயர்ச்சி
நவகிரகங்களின் தலைவராக கருதப்படும் சூரியன் 2022 நவம்பர் 16 ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார். ஒருவரது ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால், அந்நபர் நல்ல தலைத்துவ பண்புகளுடன் ராஜ பலம் கொண்டு திகழ்வார். ஜாதகத்தில் சூரியனை வலுவாக்க தினமும் சூரிய பகவானை வழிபடுங்கள்.

2022 நவம்பர் மாத குரு வக்ர நிவர்த்தி
நவகிரகங்களில் குரு சுப கிரகமாக கருதப்படுகிறது. தற்போது குரு மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2022 நவம்பர் 24 ஆம் தேதி குரு மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். ஜாதகத்தில் குரு வலுவான நிலையில் இருந்தால், திருமண வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும். ஜாதகத்தில் குருவை வலுப்படுத்த வேண்டுமானால், வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்யுங்கள்.
இப்போது நவம்பர் மாத கிரக பெயர்ச்சியால் அதிக நற்பலனைப் பெறும் ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் நவம்பர் மாத கிரக பெயர்ச்சிகளால் அதிக நன்மைகளைப் பெறுவார்கள். இம்மாதத்தில் பரம்பரை அல்லது பிற வழிகளில் இருந்து பணத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. குறிப்பாக சூரிய பெயர்ச்சியால் பணிபுரியும் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேலைகளில் வெற்றி பெறுவார்கள். சுக்கிர பெயர்ச்சியால் வியாபாரிகள் நற்பலனைப் பெறுவார்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாத கிரக பெயர்ச்சிகள் அற்புதமான பலன்களைத் தரும். அதுவும் சூரியன் மற்றும் குரு பெயர்ச்சியால் அதிக நற்பலன்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு இம்மாதம் அற்புதமாக இருக்கும். வேலையில் முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் பெற வாய்ப்புள்ளது.

சிம்மம்
நவம்பர் மாத கிரகப் பெயர்ச்சிகள் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். அதுவும் சுக்கிர பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு லாபத்தையும், செழிப்பையும் தரும். அதே வேளையில் செவ்வாய் பெயர்ச்சியால் மாணவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். மேலும் புதன் பெயர்ச்சி காலம் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். குறிப்பாக இக்காலத்தில் புதிய தொழில் தொடங்க வாய்ப்புள்ளது.

கன்னி
நவம்பர் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால் கன்னி ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் அதிகம் கிடைக்கும். அதுவும் சூரியன் மற்றும் குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு யோகமான காலமாக இருக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இம்மாதம் மிகவும் நன்றாக இருக்கும். சிலருக்கு இம்மாதத்தில் எதிர்பாராத பல நன்மைகள் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications