Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
மார்ச் மாதத்தில் நிகழும் கிரக மாற்றங்களால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையே மாறப்போகுது...
2023 மார்ச் மாதத்தில் சுக்கிரன், செவ்வாய், சூரியன், புதன் ஆகிய கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. அதில் புதன் மார்ச் மாதத்தில் இரண்டு முறை ராசியை மாற்றுகிறார்.
Planet Transit in March 2023: இந்த ஆண்டின் மூன்றாவது மாதமான மார்ச் மாதம் வந்துவிட்டது. ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றும். அப்படி நிகழும் கிரகங்களின் ராசி மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மார்ச் மாதத்தில் சுக்கிரன், செவ்வாய், சூரியன், புதன் ஆகிய கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. அதில் புதன் மார்ச் மாதத்தில் இரண்டு முறை ராசியை மாற்றுகிறார்.

மேலும் மார்ச் மாதத்தின் இறுதியில் உதயமாகிறார். அதன் பின் சனி உதயம் மற்றும் குரு அஸ்தமனமும் நிகழ்கிறது. இதனால் மார்ச் மாதத்தில் பல சுப, அசுப பலன்களை ஒவ்வொரு ராசிக்காரர்களும் பெறவுள்ளார்கள். இப்போது 2023 மார்ச் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகள் குறித்து காண்போம்.

2023 மார்ச் மாத சுக்கிர பெயர்ச்சி
ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன், 2023 மார்ச் 12 ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த சுக்கிர பெயர்ச்சியால் மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள்.

2023 மார்ச் மாத செவ்வாய் பெயர்ச்சி
நவகிரகங்களின் படைத்தளபதி மற்றும் தைரியம், துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுவர் செவ்வாய். இந்த செவ்வாய் 2023 மார்ச் 13 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார். இந்த செவ்வாய் பெயர்சியால் கன்னி, மீனம் ஆகிய ராகிக்ககாரர்கள் ஏராளமான நற்பலன்களைப் பெறுவார்கள்.

2023 மார்ச் மாத சூரிய பெயர்ச்சி
நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அப்படி மாற்றும் போது தமிழ் மாதங்கள் பிறக்கும். அந்த வகையில் 2023 மார்ச் 15 ஆம் தேதி சூரியன் மீன ராசிக்கு செல்கிறார். இந்த சூரிய பெயர்ச்சியால் ரிஷபம், மிதுனம், கடகம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்.

2023 மார்ச் மாத புதன் பெயர்ச்சி
நவகிரகங்களிலேயே மிகவும் சிறிய ஆனால் வேகமாக நகரும் கிரகம் தான் புதன். இந்த புதன் 2023 மார்ச் 16 ஆம் தேதி குரு ஆளும் மீன ராசிக்கு செல்கிறார். இந்த மீன ராசியில் ஏற்கனவே சூரியனும், குருவும் உள்ள நிலையில், புதன் சென்றிருப்பதால் சில யோகங்கள் உருவாகவுள்ளது. ஆனால் புதன் அஸ்தமன நிலையில் தான் மீன ராசிக்கு செல்கிறார். எனவே இந்த புதன் பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்குமே பலன்களானது சற்று சுமாராகவே இருக்கும்.

2023 மார்ச் மாத இரண்டாவது புதன் பெயர்ச்சி
மீன ராசிக்கு புதன் நுழைந்த சில நாட்களிலேயே, மேஷ ராசிக்கு செல்கிறார். அதுவும் இந்த பெயர்ச்சியானது 2023 மார்ச் 31 ஆம் தேதி நிகழ்கிறது. இந்த புதன் பெயர்ச்சியால் மிதுனம், கடகம், துலாம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கவுள்ளது.
மார்ச் மாதத்தில் கிரகங்களின் பெயர்ச்சிகளைத் தவிர, இரண்டு கிரகங்கள் உதயமாவதோடு, ஒரு கிரகம் அஸ்தமனமாகவுள்ளது.

சனி உதயம்
ஜோதிடத்தில் சனி மிகவும் முக்கியமான கிரகம். ஒருவரது செயல்களுக்கு ஏற்ப சனி பகவான் பலன்களை வழங்கக்கூடியவர். இந்த சனி 2023 ஆம் ஆண்டின் ஜனவரி 17 ஆம் தேதி கும்ப ராசிக்கு நுழைந்தார். சில நாட்களிலேயே கும்ப ராசியில் அஸ்தமனமானார். இந்நிலையில் 2023 மார்ச் 06 ஆம் தேதி சனி உதயமாகவுள்ளார். இந்த சனி உதயத்தால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், துலாம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறவுள்ளார்கள்.

குரு அஸ்தமனம்
குரு பகவான் கடந்த ஆண்டு தனது சொந்த ராசியான மீன ராசிக்குள் நுழைந்தார். இந்நிலையில் 2023 மார்ச் 28 ஆம் தேதி மீன ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். குரு அஸ்தமனம் அவ்வளவு நல்லதல்ல மற்றும் இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இந்த குரு அஸ்தமனத்தால் எந்த ராசிக்கும் அவ்வளவு சிறப்பாக இருக்காது, சற்று ஏற்றத்தாழ்வு நிறைந்ததாகவே இருக்கும்.

புதன் உதயம்
புத்திகாரகன் புதன் ஏற்கனவே அஸ்தமன நிலையில் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த அஸ்தமன நிலையிலேயே புதன் மீன ராசியில் பயணித்து, மேஷ ராசிக்கு செல்கிறார். ஆனால் மேஷ ராசியில் நுழைந்த, அதே நாளில், அதாவது மார்ச் 31 ஆம் தேதி புதன் உதயமாகவுள்ளார். இந்த புதன் உதயத்தால் மேஷம், மிதுனம், கடகம், சிம்மம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது.



Click it and Unblock the Notifications