Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மார்ச் மாதம் இந்த 4 ராசிக்கு நல்ல லாபகரமான மாதமாக இருக்கப் போகுது... உங்க ராசி இதுல இருக்கா?
மார்ச் மாதத்தில் சில கிரகங்கள் ராசியை மாற்றவிருக்கின்றன. அந்த கிரகங்கள் எவை, எப்போது மாற்றப் போகின்றன மற்றும் அதனால் எந்த ராசிக்காரர்கள் நற்பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறுகின்றன. கிரகங்கள் இப்படி ராசியை மாற்றும் போது, அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் ஒரு கிரகம் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் போது, அது சிலருக்கு நற்பலன்களையும், சிலருக்கு தீய பலன்களையும் தரும். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் தொடங்கியுள்ளது. இந்த மார்ச் மாதத்தில் சில கிரகங்கள் ராசியை மாற்றவிருக்கின்றன. அந்த கிரகங்கள் எவை, எப்போது மாற்றப் போகின்றன மற்றும் அதனால் எந்த ராசிக்காரர்கள் நற்பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

மார்ச் மாத கிரக பெயர்ச்சிகள்
மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலேயே புதன் இடம் பெயரவுள்ளார். பேச்சு மற்றும் புத்திக்குரியவர் புதன். இந்த புதன் 2022 மார்ச் 06 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயரவுள்ளார். அதன் பின் 2022 மார்ச் 15 ஆம் தேதி சூரியன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் மாறுகிறார். பின் 2022 மார்ச் 18 ஆம் தேதி புதன் கும்ப ராசியில் அஸ்தமித்து, 2022 மார்ச் 24 ஆம் தேதி புதன் மீன ராசிக்கு இடம் மாறுகிறார். மாதத்தின் இறுதியில் 2022 மார்ச் 31 ஆம் தேதி சுக்கிரன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார்.

மகர ராசியில் 4 கிரக சேர்க்கை
மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் 4 கிரகங்கள் மகர ராசியில் ஒன்றிணைந்து சதுர்கிரக யோகத்தை உருவாக்குகிறது. இந்த யோகம் ஒரு சுப யோகம் என்பதால், பல ராசிக்காரர்கள் மார்ச் மாதத்தின் ஆரம்பத்தில் நற்பலன்களைப் பெறுவார்கள். இப்போது மார்ச் மாத கிரக மாற்றங்களால் எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல லாபகரமான மாதமாக இருக்கும் என்பதை காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் மிகவும் சிறப்பான மாதமாக இருக்கும். இம்மாதத்தில் நிதி நிலைமை நல்ல நிலையில் இருக்கும். பணிபுரிபவர்களுக்கு மார்ச் மாதம் நல்ல வாய்ப்புக்கள் கிடைத்து முன்னேற்றம் நிறைந்ததாக இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் நல்ல முன்னேற்றம் நிறைந்ததாக இருக்கும். திடீர் பண வரவால் உங்கள் நிதி நிலைமையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். மொத்தத்தில், இம்மாதம் லாபகரமான மாதமாக இருக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் பல வழிகளில் சாதகமான மாதமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இம்மாதத்தில் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.

மீனம்
மார்ச் மாதத்தில் மீன ராசிக்காரர்களின் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். நல்ல பண வரவிற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வெளியூர் பயணங்களால் அதிக பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications