Just In
- 1 hr ago
கணைய புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...
- 1 hr ago
குழந்தைகளுக்கான அழகான காலணிகளை 76% அதிரடி தள்ளுபடி விலையில் அமேசானில் வாங்கலாம்...!
- 2 hrs ago
ஹர் கர் திரங்கா: தேசியக்கொடியை எப்படி மடிப்பது மற்றும் எப்படி பாதுகாப்பாக வைக்க வேண்டும் தெரியுமா?
- 2 hrs ago
இந்த உணவுகள் உங்களுக்கு அருமையான மூடை செட் பண்ணி கொடுக்குமாம்... ட்ரை பண்ணி பாருங்க...!
Don't Miss
- Movies
சந்திரமுகி 2 ஷுட்டிங்கில் என்ன நடந்தது...வடிவேலுவின் ஜாலி வீடியோவுடன் அப்டேட் தந்த ராதிகா
- Sports
செஸ் ஒலிம்பியாட் 2022: பதக்கம் வென்றவர்கள் யார் யார்? இந்தியாவின் நிலை என்ன? - முழு பதக்கப்பட்டியல்!
- News
கிட்ட வாம்மா.. நீ என் தங்கச்சி..! தூய்மை பணியாளரை இறுக பற்றிய வைகைப் புயல்! உருகிப் போன பக்தர்கள்!
- Finance
ப்ளேபாய் அட்டை படத்தில் டொனால்டு டிரம்ப்.. இந்த வேலை கூடவா டிரம்ப் செய்திருக்கிறார்..?
- Automobiles
விரைவில் ஏலத்திற்கு வருகிறது மறைந்த நடிகரின் சூப்பர் கார்... ஆகஸ்டு 18இல் ஏலம் விட ஏல நிறுவனம் திட்டம்!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
- Technology
திடீர் விலைக்குறைப்பு.. அடிச்சு பிடிச்சு விற்பனையாகும் 6000mAh Samsung போன்!
- Education
ஃபர்ஸ்ட்டில் இருக்கும் கல்வி நிறுவனம் செய்த சாதனை தெரியம்?
ஜூலை மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
வேத ஜோதிடத்தைப் பொறுத்தவரை, ஜூலை மாதம் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் ஜூலை மாதத்தில் பல பெரிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. பொதுவாக கிரகங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறும். இப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது அது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த தாக்கம் நல்லதாகேவோ அல்லது கெட்டதாகவோ இருக்கலாம்.
ஜூலை மாதத்தின் ஆரம்பத்தில், அதுவும் ஜூலை 2 ஆம் தேதி புதன் ராசியை மாற்றவுள்ளார். அதைத் தொடர்ந்து ஜூலை 12 ஆம் தேதி வக்ர சனி கும்பத்தில் இருந்து மகரத்தை அடைந்து பயணிக்கிறார். அதன் பின் மறுநாள் ஜூலை 13 ஆம் தேதி சுக்கிரன் ராசியை மாற்றுகிறார். ஜூலை 16 ஆம் தேதி சூரியன் ராசியை மாற்றுகிறார். ஜூலையின் கடைசியில் குரு வக்ர நிலையில் பயணிப்பார். இப்போது 2022 ஜூலை மாத கிரக பெயர்ச்சிகள் குறித்து விரிவாக காண்போம்.

புதன் பெயர்ச்சி 2022
பேச்சு மற்றும் புத்தியின் கிரகமான புதன், ஜூலை மாதத்தில் 3 முறை ராசியை மாற்றுகிறார். ஜூலை 2 ஆம் தேதி காலை 9.42 மணியளவில் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார். மிதுனம் புதன் ஆளும் ராசி. ஆகவே இந்த புதன் பெயர்ச்சி மிகவும் முக்கியமானது. இதைத் தொடர்ந்து ஜூலை 16 ஆம் தேதி கடக ராசிக்கு புதன் செல்கிறார். அதன் பின் மாத இறுதியில் ஜூலை 341 ஆம் தேதி புதன் சிம்ம ராசிக்கு செல்கிறார்.

சனி பெயர்ச்சி 2022
கிரகங்களிலேயே நீதி மற்றும் கர்ம பலன்களை வழங்குபவர் தான் சனி. இத்தகைய சனியின் சொந்த ராசி மகரம் மற்றும் கும்பம் ஆகும். சனி பகவான் தற்போது கும்ப ராசியின் வக்ர நிலையில் பயணிக்கிறார். 2022 ஜூலை 12 ஆம் தேதி மதியம் 02.58 மணிக்கு வக்ர நிலையில் மகர ராசியை அடைகிறார். அதன் பின் சனி பகவான் அக்டோபர் 23 ஆம் தேதி மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிப்பார். சனியின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சுக்கிர பெயர்ச்சி 2022
அழகு மற்றும் ஆடம்பரத்திற்கு காரணமாக சுக்கிரன் 2022 ஜூலை 13 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு காலை 10.50 மணிக்கு செல்கிறார். சுக்கிரன் மிதுன ராசிக்கு சென்றவுடன் சூரியன் மற்றும் புதனுடன் சேர்வதால், திரிகிரஹி யோகம் உருவாகும். ஒரு ராசியில் மூன்று கிரகங்கள் இணைந்திருந்தால், அது திரிகிரஹி யோகம் என்று அழைக்கப்படும். சுக்கிரன் ஒரு ராசியில் சுமார் 23 நாட்கள் மட்டுமே இருப்பார்.

சூரிய பெயர்ச்சி 2022
கிரகங்களில் சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். இப்படி ராசியை மாற்றும் போது, அது அனைத்து ராசிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் ஜூலை மாதத்தில் 16 ஆம் தேதி சூரியன் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்கிறார்.

குரு வக்ர பெயர்ச்சி 2022
கிரகங்களிலேயே மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுவது வியாழன் என்னும் குரு. இத்தகைய குரு ஒரு ராசியில் சுமார் 12 மாதங்கள் வரை இருப்பார். ஜூலை மாதத்தின் கடைசியில், அதுவும் ஜூலை 28 ஆம் தேதி குரு மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்க தொடங்குவார். அதன் பின் 2022 நவம்பர் 24 ஆம் தேதி அன்று குரு வக்ர நிவர்த்தி அடைவார்.

2022 ஜூலை மாத கிரக பெயர்ச்சியால் 12 ராசிக்கும் எப்படி இருக்கும்?
கிரகங்களின் அடிப்படையில் ஜூலை மாதம் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இம்மாதத்தில் சில கிரகங்கள் வக்ர நிலையில் பயணிக்க ஆரம்பிக்கின்றன. இதனால் இம்மாத கிரக பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்களும், இன்னும் சில ராசிக்காரர்களுக்கு கலவையான பலனும் கிடைக்கும். ஜோதிட கணக்கீடுகளின் படி, ஜூலை மாதம் மேஷம், மிதுனம், கடகம், சிம்மம் மற்றும் மகரம் ஆகிய ராசிகளுக்கு மிகவும் நன்றாக இருக்கும். இவர்கள் பணம், லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். மறுபுறம், கன்னி, துலாம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதுமட்டுமின்றி, ரிஷபம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கு கலவையானதாகவும் இருக்கும்.