Latest Updates
-
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்..
ஜனவரி மாதத்தில் நடக்கும் கிரக மாற்றங்களால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு யோகம் அடிக்கப்போகுது...
2022 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் நான்கு கிரகங்கள் தங்கள் நிலையை மாற்றுகின்றன. இவை அனைத்து ராசிகளிலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஜோதிடத்தின் படி, கிரக பெயர்ச்சிகள் ஒருவரது வாழ்க்கையை நேர்மறையான அல்லது எதிர்மறையான வழியில் பாதிக்கின்றன. ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறுகின்றன. சில கிரகங்கள் முன்னோக்கி நகரும், சில கிரகங்கள் பின்னோக்கி நகரும். 2022 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் நான்கு கிரகங்கள் தங்கள் நிலையை மாற்றுகின்றன. இவை அனைத்து ராசிகளிலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போது 2022 ஜனவரி மாதத்தில் எந்தெந்த கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன மற்றும் அதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிக பலன் கிடைக்கும் என்பதை இப்போது காண்போம்.

மகரத்தில் சூரிய பெயர்ச்சி
2022 ஜனவரி 14 ஆம் தேதி சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு மதியம் 02:43 மணிக்கு இடம் பெயர்கிறார். இந்த ராசியில் பிப்ரவரி 13, 2022 அன்று அதிகாலை 03:41 மணி வரை இருப்பார். மகர ராசிக்கு சூரியன் வரும் போது, தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொதுவாக சூரிய பெயர்ச்சியின் போது தான் தமிழ் வருடங்கள் பிறக்கின்றன. இந்த சூரிய பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். இருப்பினும், உங்கள் ஈகோவும் உயர வாய்ப்புள்ளது.

மகரத்தில் புதன் வக்ர பெயர்ச்சி
2022 ஜனவரி 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 05.10 மணிக்கு மகர ராசியில் புதன் வக்ர நிலையில் நகர்கிறார். அதன் பின் பிப்ரவரி 4 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார். ஜோதிடத்தில் புதன் புத்திசாலித்தனம், புத்திக்கூர்மை, தகவல் தொடர்பு, பேச்சு ஆகியவற்றுடன் தொடர்புடையவராக கருதப்படுகிறது. புதன் ஒருவரது ஜாதகத்தில் பலவீனமான நிலையில் இருந்தால், அது ஒருவரது முடிவெடுக்கும் திறனை குறைத்துவிடும். அதுவே நல்ல நிலையில் இருந்தால், புத்திசாலித்தனமாக நடக்க வைத்து, புத்தி கூர்மையாக்கும்.

தனுசு ராசியில் செவ்வாய் பெயர்ச்சி
2022 ஜனவரி 16 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 04.50 மணிக்கு செவ்வாய் தனுசு ராசிக்கு செல்கிறார். இந்த ராசியில் 2022 பிப்ரவரி 26 மாலை 04:08 மணி வரை செவ்வாய் இருப்பார். ஜோதிடத்தில், செவ்வாய் கோபம், போர், விளையாட்டு, பூமி மற்றும் இரத்தத்தின் ஒரு அங்கமாக கருதப்படுகிறது. இந்த செவ்வாய் மேஷம் மற்றம் விருச்சிக ராசியின் அதிபதி. தனுசு ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால், தனுசு ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தனுசு ராசியில் நேர்கதியில் சுக்கிரன்
செல்வம், செழிப்பு மற்றும் அனைத்து வகையான பொருள் வசதிகளையும் தரும் சுக்கிரன், ஜனவரி 29, 2022 சனிக்கிழமை மதியம் 02:14 மணிக்கு தனுசு ராசியில் நேர்கதியில் சஞ்சரிக்கிறார். சுக்கிரன் 41 நாட்கள் இந்த சஞ்சாரத்தில் இருப்பார். தற்போது சுக்கிரன் தனுசு ராசியில் வக்ர நிலையில் உள்ளார். ஜோதிடத்தில், சுக்கிரன் காதல், பொருள் வசதிகள் மற்றும் செல்வத்தின் கிரகமாக கருதப்படுகிறது. சுக்கிரனின் நிலை எதிர்மறையாக இருந்தால், அது வறுமைக்கு வழிவகுப்பதோடு, நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

2022 ஜனவரியில் யோகம் அடிக்கும் 4 ராசிகள்
2022 ஜனவரி மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறந்த காலம். இந்த மாதத்தில் மேஷ ராசிக்காரர்கள் நிறைய பரிசுகளைப் பெறுவார்கள். அதேப் போல் மிதுன ராசிக்கும் ஜனவரி மாதம் சிறப்பான மாதம். இம்மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் மாணவர்களுக்கும் நல்ல பலன் கிடைக்கும். அதோடு இந்த ராசிக்காரர்களின் பல எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிம்மம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கும் ஜனவரி மாதம் நல்ல மாதமாக இருக்கும். பணியிடத்தில் சூழ்நிலைகளானது உங்களுக்கு சாதகமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications