Latest Updates
-
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா?
டிசம்பர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது...
டிசம்பர் மாதமானது 5 ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலனைத் தரவுள்ளன. இப்போது 2022 டிசம்பர் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகள் மற்றும் அவற்றால் நற்பலனைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

2022 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் நுழையவுள்ளோம். ஜோதிடத்தின் படி, 2022 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 3 கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. அதுவும் புதன், சுக்கிரன், சூரியன் ஆகிய கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. முக்கியமாக இந்த மூன்று கிரகங்களும் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறி ஒன்றாக பயணிக்கவுள்ளன. இப்படி புதன், சூரியன், சுக்கிரன் ஒன்றாக பயணிப்பதால், டிசம்பர் மாதமானது 5 ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலனைத் தரவுள்ளன. இப்போது 2022 டிசம்பர் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகள் மற்றும் அவற்றால் நற்பலனைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

2022 டிசம்பர் மாத கிரக மாற்றங்கள்
2022 டிசம்பர் மாதத்தில் 3 கிரகங்கள் தனது ராசியை மாற்றவுள்ளன. அதில் முதலாவதாக டிசம்பர் 03 ஆம் தேதி புதன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். அதன் பின் டிசம்பர் 05 ஆம் தேதி சுக்கிரன் தனுசு ராசிக்கு செல்கிறார். பின்பு டிசம்பர் 16 ஆம் தேதி நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் தனுசு ராசிக்கு செல்கிறார்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாத கிரக பெயர்ச்சிகள் சாதகமாக இருக்கும் இந்த மாதத்தில் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற முழு பலன் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வருமான ஆதாரங்களின் அதிகரிப்பதில் வெற்றி பெறவீர்கள். ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேம்படும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் நன்மை தரும் மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் நிலம் மற்றும் சொத்து தொடர்பான விஷயங்களில் ஆதாயமடைவீர்கள். வாகனம் வாங்கும் எண்ணம் கொண்டவர்களின் ஆசை நிறைவேறும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். டிசம்பர் மாதத்தில் குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேம்படும். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது. மாத இறுதியில் முன்னேற்றத்திற்கான ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கும் டிசம்பர் மாத கிரக பெயர்ச்சிகள் நல்ல பலன்களை வழங்கும். குறிப்பாக வாழ்க்கை சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேம்படும். நிலுவையில் உள்ள பணிகள் பெற்றோரின் உதவியால் வெற்றிகரமாக முடிக்கப்படும். ஆனால் வியாபாரிகள் மட்டும் இம்மாதத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்
டிசம்பர் மாத கிரக பெயர்ச்சிகளால் கும்ப ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறுவார்கள். பொருளாதார ரீதியாக நல்ல ஆதாயம் கிடைக்கும். உங்களின் கடின உழைப்பு முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புக்களைத் தரும். புதிய வேலையைத் தொடங்க சிறந்த மாதம் இது. சமூக மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் நற்பெயர் அதிகரிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இம்மாதத்தில் செலவுகளை மட்டும் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் அதிர்ஷ்டமான மாதம் என்றே கூற வேண்டும். ஏனெனில் இந்த மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால் நிலுவையில் உள்ள பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். பணப் பிரச்சனைகள் நீங்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் இம்மாதத்தில் கைக்கு வந்து சேரும். நண்பர்களுடன் சந்தோஷமாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் அமையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் மற்றும் பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சந்தோஷம் நிறைந்து இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications