For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பெண்கள் இந்த இடங்களுக்கு தெரியாமல் கூட போகக்கூடாது... மீறி போனா பிரச்சினைதான்...!

பொதுவாக ஆண்களுக்கு அனுமதி இல்லாத இடங்களை பற்றி பரவலாக நாம் அறிவோம். ஆனால் இந்தியாவில் குறிப்பிட்ட இடங்களில் பெண்களுக்கு அனுமதியில்லை.

|

இந்தியா பல முரண்பாடுகளை கொண்ட நிலமாகும். அதில் முக்கியமான முரண்பாடு என்னவெனில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள்தான். பெண் கடவுள்களை வணங்கும் இங்குதான் உலகிலேயே அதிக பெண் சிசுக்கொலைகளும், வீட்டிற்குள் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளும் அதிகம் நடக்கின்றது.

Places in India Where Women Are Not Allowed

பொதுவாக ஆண்களுக்கு அனுமதி இல்லாத இடங்களை பற்றி பரவலாக நாம் அறிவோம். ஆனால் இந்தியாவில் குறிப்பிட்ட இடங்களில் பெண்களுக்கு அனுமதியில்லை. இதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் என்னவென்று பார்த்தால் தூய்மையின்மை, ஆண் கடவுள்களை கோபப்படுத்துவது என வலுவில்லாத காரணங்கள் கூறப்படுகின்றன. இந்தியாவில் பெண்களுக்கு அனுமதி இல்லாத இடங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சனி ஷிங்னாபூர் - பாறை தெய்வம்

சனி ஷிங்னாபூர் - பாறை தெய்வம்

பகவான் சனி பகவானின் வழிபாட்டாளர்களுக்கான இந்த புனித ஆலயம் சமீபத்தில் ஒரு இளம் பெண் பாறை தெய்வத்தைத் தொட்டதற்குப் பிறகு, அறக்கட்டளை அதிகாரிகள் சுத்திகரிப்பு சடங்கை செய்தபோது இந்த செய்தி வெளிவந்தது. அதற்குபின் பெண்களின் தொடுதலைத் தடுக்க பாறை தெய்வம் தடைசெய்யப்பட்ட பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

நிஜாமுதீன் தர்கா - உள் அறை

நிஜாமுதீன் தர்கா - உள் அறை

அனைத்து பெண் பக்தர்களும் சுற்றளவு வரை தடைசெய்து வைக்கப்பட்டுள்ளனர், மேலும் 14 ஆம் நூற்றாண்டு வாழ்ந்த துறவி, பிரார்த்தனை செய்து, இறுதியில் அடக்கம் செய்யப்பட்ட உள் அறைக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பாரம்பரியம் கிட்டத்தட்ட 700 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.

ஹாஜி அலி தர்கா- புனித உள் கருவறை

ஹாஜி அலி தர்கா- புனித உள் கருவறை

இந்த புனித ஆலயம் 15 ஆம் நூற்றாண்டில் சூஃபி துறவி பிர் ஹாஜி அலி புகாரிக்கு அர்ப்பணிப்பாக கட்டப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக, உள் கருவறை பெண்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள அதிகாரிகளின் கூற்றுப்படி, உள் கருவறை என்பது சூஃபி துறவியின் கல்லறை மற்றும் ஷரியா சட்டத்தின்படி பெண்கள் அந்த இடத்திற்குள் நுழைவது இஸ்லாம் மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டது.

சபரிமலை - ஐயப்பன் கோவில்

சபரிமலை - ஐயப்பன் கோவில்

இது இந்தியாவே நன்கு அறிந்த இடம்தான். பல நூற்றாண்டுகளாக 10-50 வயதுக்குட்பட்ட பெண்கள் வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வயதில் பெண்களுக்கு மாதவிடாய் தொடங்குவதால் அவர்கள் பிரம்மச்சாரி கடவுளான ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவதில்லை. இதன்மீது பல்வேறு வழக்குகள் நடப்பது நாம் அறிந்ததுதான்.

ஜமா மஸ்ஜித் - தெற்கு மினாரெட்

ஜமா மஸ்ஜித் - தெற்கு மினாரெட்

ஆண் துணை இல்லாமல் எந்தப் பெண்ணும் வளாகத்திற்குள் நுழைய முடியாது, மக்ரிப் தொழுகைக்குப் பிறகு அவர்கள் மசூதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

்ரீ பத்மநாபசாமி கோயில் - பாதுகாப்பு பெட்டகங்கள்

்ரீ பத்மநாபசாமி கோயில் - பாதுகாப்பு பெட்டகங்கள்

வெளிப்படையாக, பெண்கள் இங்கே பிரார்த்தனை செய்யலாம், ஆனால் அவர்கள் ஒருபோதும் கண்டறியப்பட்ட பெட்டகங்களுக்குள் கால் வைக்க முடியாது. பல நூற்றாண்டுகள் பழமையான பழக்கவழக்கங்களை மேற்கோள் காட்டி, கோயில் அதிகாரிகள் பெண்கள், உயர் பெண் அதிகாரிகள் அல்லது வல்லுநர்கள் கூட இந்த பெட்டகங்களுக்குள் நுழைவதை தடைசெய்துள்ளனர் மற்றும் பெண்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், துப்புரவு நோக்கங்களுக்காக கூட உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை.

கார்த்திகேயர் கோயில் - புஷ்கர்

கார்த்திகேயர் கோயில் - புஷ்கர்

இந்த கோயில் பெண் பக்தர்களுக்காக சபிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது, எப்போதாவது ஒரு பெண் வளாகத்திற்குள் நுழையத் துணிந்தால், அவர் ஆசீர்வதிக்கப்படுவதற்குப் பதிலாக சபிக்கப்படுவார். ஒருமுறை, இந்திரன் கார்த்திகேயரை தனது ஆழ்ந்த தியானத்திலிருந்து திசைதிருப்ப முயன்றார், அதற்காக வானத்து தேவதைகளை அனுப்பினார். எனவே, அவரைப் பார்க்க வர முயற்சித்த எல்லா பெண்களையும் அவர் சபித்தார்.

பட்பெளசி சத்ரா - உள் கருவறை

பட்பெளசி சத்ரா - உள் கருவறை

விவரிக்கப்படாத 500 ஆண்டு பழமையான பாரம்பரியத்தால் அசாமில் உள்ள இந்த இந்து மடாலயத்தின் புனித கருவறைக்குள் எந்தவொரு பெண்ணும் இதுவரை அனுமதிக்கப்படவில்லை.. 2010 ஆம் ஆண்டு அசாம் கவர்னர் ஜே.பி.பட்நாயக் ஒரு குழுவினரை கோவிலுக்குள் அழைத்துச் சென்றார் ஆனால் அந்த பெண்கள் குற்ற உணர்வை உணர்ந்ததாக தெரிவித்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Places in India Where Women Are Not Allowed

Find out the places in India where women are not allowed.
Desktop Bottom Promotion