For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாளய பட்சத்தின் போது மறந்தும் இந்த தவறுகளை செஞ்சுடாதீங்க... அப்புறம் பாவமாயிடும்...

மகாளய பட்சத்தை கடைப்பிடிப்பதன் மூலம், இந்துக்கள் வாழ்வில் வெற்றி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பையும், தங்கள் முன்னோர்களின் ஆசிகளைப் பெறுவார்கள் என நம்பப்படுகிறது.

|

இந்து மதத்தின் அடிப்படையில் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைய பல சடங்குகள், நடைமுறைகளை பின்பற்றுவது வழக்கம். அதில் ஒன்று தான் பித்ரு பக்ஷம் என்றழைக்கப்படும் மகாளய பட்சம். ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்திற்கு பிறகு வரும் பிரதமை நாளில் தொடங்கி புரட்டாசி மாத அமாவாசை வரை மகாளய பட்ச காலமாக கருதப்படுகிறது. அதாவது, மகாளய பட்சம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஆவணி-புரட்டாசி மாதத்தில் 14 நாட்கள் கடைபிடிக்கப்படும் விரதமாகும் இந்த 15 நாட்களும் பித்ருகளுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏற்ற நாட்களாக விளங்குகிறது. இந்த ஆண்டு, செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 25 வரை, மகாளய பட்ச காலமாகும்.

Pitru Paksha: Mistakes You Should Avoid During Pitru Paksha

மகாளய பட்சத்தின் போது இந்துக்கள் தங்கள் முன்னோர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கி தர்ப்பணம் வழங்குவர். இந்த காலகட்டத்தில், இந்துக்கள் தங்கள் முன்னோர்களை நினைவு கூர்ந்து, 'தர்ப்பணம்', 'பிண்டம்' மற்றும் 'படையல்' போன்ற சடங்குகளைச் செய்வர்.

மகாளய பட்சத்தை கடைப்பிடிப்பதன் மூலம், இந்துக்கள் வாழ்வில் வெற்றி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பையும், தங்கள் முன்னோர்களின் ஆசிகளைப் பெறுவார்கள் என நம்பப்படுகிறது. மகாளய பட்சத்தின் போது தவிர்க்கப்பட வேண்டிய தவறுகளை இந்து மதத்தின் புனித நூல்கள் விவரிக்கின்றன. வேதங்கள் மற்றும் மத நூல்களின் அடிப்படையில், மகாளய பட்சத்தின் போது இந்துக்கள் பின்வரும் செயல்களை செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அசைவம் கூடாது

அசைவம் கூடாது

மகாளய பட்ச காலத்தின் போது சைவ உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும். அந்த 16 நாட்களில் நீங்கள் அசைவ உணவு மற்றும் மது உட்கொண்டால், அது பிரிந்த ஆன்மாவை வருத்தப்படுத்தும் செயலாக மாறிவிடும். மேலும், நீங்கள் சிக்கலை சந்திக்க நேரிடும்.

முடி, நகம் வெட்டக்கூடாது

முடி, நகம் வெட்டக்கூடாது

மகாளய பட்சத்தின் போது 'படையல்' வைத்து சடங்குகளைச் செய்வோரின் குடும்பத்தில் உள்ளவர்கள் அந்த 16 நாட்களிலும் முடி வெட்டுவது மற்றும் நகம் வெட்டுவது போன்றவற்றை மறந்தும் செய்திட கூடாது. அதிலும், அவரும் பிரம்மச்சரியத்தை முக்கியமாக பின்பற்ற வேண்டும்.

சூரிய மறைவிற்கு பின்பு சமையல் கூடாது

சூரிய மறைவிற்கு பின்பு சமையல் கூடாது

மகாளய பட்ச காலத்தில் படையல் செய்து சடங்குகளை செய்வோர் மாலை சூரிய மறைவிற்கு முன்பாக அனைத்தையும் செய்து முடித்து விட வேண்டும். சூரிய மறைவிற்கு பிறகு சடங்குகள் செய்வது நல்லதல்ல.

விலங்குகளுக்கு உணவளிக்கவும்

விலங்குகளுக்கு உணவளிக்கவும்

மகாளய பட்சத்தின் போது உங்கள் வீட்டு வாசலில் ஏதேனும் விலங்குகள் அல்லது பறவைகள் வந்தால், நீங்கள் அவற்றிற்கு உணவு கொடுக்க வேண்டும். முன்னோர்கள் விலங்குகள் மற்றும் பறவைகள் வடிவில் உங்களை சந்திக்க வருவார்கள் என்று நம்பப்படுகிறது. எனவே, முடிந்தளவு இந்தக் காலக்கட்டத்தில் பசு மாட்டிற்கோ அல்லது காகத்திற்கோ உணவு கொடுக்க வேண்டும்.

இலையில் சாப்பிடுவது

இலையில் சாப்பிடுவது

மகாளய பட்சம் 16 நாட்களிலும் படையல் போடும் போது, பிராமணர்களுக்கு உணவளிக்கும் போதும் வாழை இலையில் உணவளிப்பது நல்லதாக கருதப்படுகிறது. எனவே, நீங்கள் படையல் உணவை பிறருக்கு பரிமாறும் போது வாழைஇலையில் மட்டுமே பரிமாற வேண்டுமென்பதை மறவாதீர்கள்.

சுப காரியங்கள் கூடாது

சுப காரியங்கள் கூடாது

மகாளய பட்ச காலத்தில் வீட்டில் திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற எந்த சுப காரியங்களையும் நடத்தக்கூடாது. அதுமட்டுமின்றி, இந்த காலகட்டத்தில் புதிய பொருட்களை வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Pitru Paksha 2022: Mistakes You Should Avoid During Pitru Paksha

Here are some mistakes you should avoid during pitru paksha. Read on...
Desktop Bottom Promotion