பிலவ வருடத்தில் இந்த 5 ராசிக்காரங்க நல்ல பலன்களைப் பெறப் போறாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா?

தமிழ் நாட்காட்டியில் மொத்தம் 60 ஆண்டுகள் உள்ளன. அதில் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒவ்வொரு பெயர்கள் உள்ளன. 2021 ஏப்ரல் 14 ஆம் தேதி பிறந்திருப்பது பிலவ ஆண்டாகும். இந்த ஆண்டு பிறக்கும் போதே சூரியனும், செவ்வாயும் இடம் பெயர்ந்துள்ளன.

தமிழ் நாட்காட்டியில் மொத்தம் 60 ஆண்டுகள் உள்ளன. அதில் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒவ்வொரு பெயர்கள் உள்ளன. அந்த வகையில் 2020-2021 ஆம் ஆண்டு சார்வரி என்றும், 2021-2022 ஆம் ஆண்டிற்கு பிலவ ஆண்டு என்றும் பெயர். அதாவது 2021 ஏப்ரல் 14 ஆம் தேதி பிறந்திருப்பது பிலவ ஆண்டாகும். இந்த ஆண்டு பிறக்கும் போதே சூரியனும், செவ்வாயும் இடம் பெயர்ந்துள்ளன. செவ்வாய் பகவான் பிலவ வருடம் பிறக்கும் போது இடம் பெயர்ந்துள்ளதால், மழைக்கு பஞ்சம் இருக்காது என்று பஞ்சாங்கம் கூறுகிறது.

Pilava Varuda Rasi Palangal 2021

இப்போது பிலவ வருடத்தில் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப் போகிறது, யாரெல்லாம் அதிர்ஷ்டசாலி, யாருக்கு மோசமான வருடமாக இருக்கப் போகிறது என்று காண்போம். உங்கள் ராசிக்கான பலனைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இந்த வருடம் நீங்கள் நல்ல பலன்களைப் பெறப் போகிறீர்கள். உங்களின் தொழில் மற்றும் வியாபாரம் செழிக்கும். உங்களின் செயல்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வேலைத் தேடுபவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை கிட்டும். சிலருக்கு வெளிநாடு செல்ல யோகம் உண்டு. சுபகாரியங்கள் தடையின்றி நடக்கும். புதிய தொழில் தொங்க சிறந்த காலம். இந்த வருடத்தை சரியாக திட்டமிட்டு பயணித்தால், இந்த ஆண்டு அற்புதமான வருடமாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, இந்த ஆண்டு நீங்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும். யாரையும் அவ்வளவு எளிதில் நம்பாதீர்கள். தெரியாட இடத்தில் கடன்களை வாங்காதீர்கள். உங்களின் தொழில் மற்றும் வியாபாரம் பலமடங்கு வளர்ச்சி காணும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றை பெற வாய்ப்புக்கள் உண்டு. கணவன்-மனைவிக்கு இடையே சண்டைகள் வந்தாலும், பெரிய பாதிப்புகள் இருக்காது. நீங்கள் எந்த செயலில் இறங்கும் முன்பும் முருகப்பெருமானை வணங்கிவிட்டு ஈடுபட்டால் வெற்றி கிட்டும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல ஆண்டாக இருக்கும். இதுவரை நீங்கள் பட்ட கஷ்டம் அனைத்தில் இருந்தும் விடுபடுவீர்கள். உங்கள் ராசியின் மீது குருப் பார்வை விழுவதால், செப்டம்பர் மாதத்திற்கு முன்பே சுபகாரிய விஷயங்களில் ஈடுபடுவது நல்லது. செப்டம்பர் மாதத்திற்கு பின் உடல்நலத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய முதலீடு செய்யும் போது, ஒன்றிற்கு பல முறை யோசிப்பது நல்லது. இந்த வருடத்தில் எதையும் எடுத்தோம் செய்தோம் என்று உடனே முடிவெடுக்காமல் அனுபவசாலிகளிடம் ஆலோசனைப் பெற்றுவிட்டு எடுப்பது வளர்ச்சியைத் தரும்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே, இந்த ஆண்டு நல்ல ஆண்டாக இருந்தாலும், மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். பணிபுரிபவர்கள், பிடித்த இடத்தில் இடமாற்றத்தைப் பெற வாய்ப்புள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். இருவருக்கும் இடையேயான அன்பு அதிகரிக்கும். இந்த வருடத்தில் குலதெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால், அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, இந்த ஆண்டு அட்டகாசமான பலன்களைப் பெறப் போகிறீர்கள். இதுவரை இருந்த கவலைகள் நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். முடியாது என்று நினைக்கும் காரியத்தை முடித்துக் காட்டுவீர்கள். பணிபுரிபவர்கள், அலுவலகத்தில் பாராட்டுக்களைப் பெறுவார்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். உடன்பிறப்புக்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். நிதி நிலைமையில் ஏற்றமான காலம் என்பதால், பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, இந்த ஆண்டு சுப செலவுகளைச் செய்யக்கூடும். பணிபுரிபவர்கள், ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்ளாமல் இருந்தால், தேவையில்லாத கடனைப் பெறக்கூடும். மேலும் இந்த வருடம் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் குடும்பத்தினரின் ஒத்துழைப்பைப் பெறுவார்கள். கணவன்-மனைவிக்கு இடையேயான நெருக்கம் அதிகரிக்கும். குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கி வந்தால், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இந்த ஆண்டு சனி பகவானின் தாக்கம் அவ்வளவாக இருக்காது. உங்கள் மனதிற்கு பிடித்தவர்களை மணக்கும் யோகம் கிடைக்கும். குரு பார்வை உங்கள் மீது விழுவதால், சுப காரிய முயற்சிகள் வெற்றி பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முதலீடுகளை செய்யும் போது கவனமாக இருங்கள். பணிபுரிபவர்கள், வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. யாருக்கும் பெரிய தொகையை கடனாக கொடுத்துவிடாதீர்கள். எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும், விநாயகரை மனதில் வணங்கி எடுங்கள். சனி தாக்கம் குறைய சனிபகவானுக்கு எள் எண்ணெய் தீபம் போட்டு வழிபடுங்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, இந்த ஆண்டு உங்களுக்கு இருந்த கடன் பிரச்சனைகள் நீங்கி, பொருளாதாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். பணிபுரிபவர்கள் திடீர் இடமாற்றத்தைப் பெறக்கூடும் என்பதால் கவனமாக வேலை செய்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் தேவையில்லாத பேச்சுக்களை குறைக்காமல் இருந்தால், உங்கள் மன அமைதி பாதிக்கப்படும்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, இந்த ஆண்டு சனி உங்கள் ராசியில் இருந்து முழுவதுமாக விலகப் போவதால், கடைசி கட்ட பிரச்சனைகளை சந்திப்பீர்கள். இதுவரை பாடாய் படுத்திய கஷ்டங்கள் தீரும். தொழில் மற்றும் வியாபாலத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றத்தைக் காண்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஆதரவாய் இருப்பார்கள். இக்காலத்தில் விடா முயற்சிக்கான பலனைப் பெறுவீர்கள். இக்காலத்தில் குடும்பத்தினர் உங்களுக்கு உதவி செய்வார்கள். இந்த ஆண்டு சிறப்பாக அமைய சிவபெருமானை வழிபடுங்கள்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே, இந்த ஆண்டு நிதி நிலைமையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இந்த வருடம் எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள், நல்ல பலனைப் பெறுவார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும். இந்த வருடம் சேமிப்பின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்து செயல்படுவீர்கள்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, இந்த ஆண்டு சனிபகவான் உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்தாலும், திடீர் யோகம் உண்டாகும். எதிர்பாரத இடங்களில் இருந்து பணவரவு உண்டாக்கும். கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கி நிதி நிலைமையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பூர்வீக சொத்துக்களால் நல்ல பலனைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். மொத்தத்தில் இந்த வருடம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே, இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக இருக்க போகிறது. இந்த ஆண்டு எதையும் நேர்வழியில் செய்தால் வெற்றி நிச்சயம் கிட்டும். சுப காரிய விஷயத்தில் இருந்த தடைகள் நீங்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு, அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் இருந்த மன கசப்புகள் நீங்கும். புதிய தொழில் தொடங்கியிருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் இருக்கும். இந்த வருடம் நிதானமாக செயல்பட்டால், அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion