For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரவு நேரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் இருக்கும் ரகசியங்கள் என்ன தெரியுமா?

இரவு நேரம் இருட்டாகவும், தனிமையாகவும் இருக்கலாம், ஆனால் இரவு என்பது இனிமையான, அமைதியான மற்றும் ஆறுதலான நேரமாகும்.

|

ஒரு நாளின் வெவ்வேறு நேரங்கள் ஒருவரின் வாழ்க்கையில் வெவ்வேறு முக்கியத்துவங்களைக் கொண்டுள்ளன. ஒருவர் பிறந்த நேரம் என்பது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. நீங்கள் பகலில் பிறந்தவராக இருந்தால் பிரகாசமானவராகவும், வெளிப்படைத்தன்மை கொண்டவராகவும், அனைவருக்கும் பிடித்த நபராகவும் இருப்பார்கள். இவர்கள் லார்க் என்று அழைக்கப்படுகிறார்கள்.

PersonalityAnalysis of People Born In Night

இரவில் பிறந்தவர்கள் இதற்கு முற்றிலும் எதிர்மறையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இரவு நேரம் இருட்டாகவும், தனிமையாகவும் இருக்கலாம், ஆனால் இரவு என்பது இனிமையான, அமைதியான மற்றும் ஆறுதலான நேரமாகும். நீங்கள் இரவில் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம், இதனால்தான் இரவு நேரத்தில் பிறந்தவர்கள் பொறுமையாகவும் புரிந்துகொள்ளுதலுடனும் அறியப்படுகிறார்கள். இரவு நேரத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் சிறப்பான குணங்கள் என்ன அவர்களின் ஆளுமை எப்படிப்பட்டது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிக்கலை தீர்ப்பவர்கள்

சிக்கலை தீர்ப்பவர்கள்

வாழ்க்கையில் சில ஆன்மா தேடல்களைச் செய்ய இரவு நேரம் சிறந்த நேரம் என்பது ஒரு அறிவியல்ரீதியாக நிருபிக்கப்பட்ட உண்மை. என்ன செய்வது, எப்படி செய்வது என்று நீங்கள் குழப்பமடைந்துவிட்டால், உங்கள் நகர்வைத் திட்டமிட சூரியன் மறையும் வரை நீங்கள் காத்திருக்கிறீர்கள். எனவே இரவில் பிறந்தவர்கள் நல்ல சிக்கல் தீர்க்கும் நபர்களாகவும் அறியப்படுகிறார்கள்.

ஏன் புத்திசாலிகள்?

ஏன் புத்திசாலிகள்?

நீங்கள் இரவு நேரத்தில் பிறந்தவராகவோ அல்லது உலகமே தூங்கும்போது நீங்கள் விழித்திருப்பவராக இருந்தால் நீங்கள் இரவு ஆந்தை வகையை சேர்ந்தவர்கள். எனவே பிரபலமான கருத்துக்கு மாறாக இரவு நேரத்தில் பிறந்தவர்கள் பகலில் பிறந்தவர்களை விட புத்திசாலிகளா? அறிவியல் ஆம் என்றுதான் கூறுகிறது. அதற்கான காரணங்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

வலிமை

வலிமை

ஆராய்ச்சி முடிவுகளின் படி, இரவு ஆந்தைகள் உடல்ரீதியாக லார்க்கை விட வலிமையானவர்களாக உள்ளனர். லார்க்ஸ் நாள் முழுவதும் ஒரே ஆற்றலைக் கொண்டிருக்கும் அதே வேளையில் இரவு ஆந்தைகள் திடீரென மாலை நேரங்களில் உச்ச நேர ஆற்றலைப் பெறுவதாக ஆராய்ச்சிகள் கூறுகிறது. இது லார்க்கை இவர்கள் மிஞ்சுவதற்கு காரணமாகிறது.

MOST READ: சாணக்கியரின் கூற்றுப்படி இந்த வகை பெண்ணை திருமணம் செய்வது உங்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றுமாம்...!

நிதானமானவர்கள்

நிதானமானவர்கள்

பகல் நேரத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் கார்டிசோலின் மன அழுத்த ஹார்மோனைக் கொண்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இது நாள் நகரும்போது அதிகரிக்கிறது. இருப்பினும், இரவு ஆந்தைகள் இந்த ஹார்மோனைக் குறைவாகக் கொண்டுள்ளன, மேலும் இந்த உண்மையின் காரணமாக இவர்கள் மிகவும் நிதானமாக இருக்க முனைகிறார்கள்.

பொது அறிவு

பொது அறிவு

மாட்ரிட் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், லார்க்ஸ் அதிக தரங்களைப் பெற்று, சிறந்த ஊதியம் பெறும் வேலைகளில் இருக்கக்கூடும். இரவு நேரத்தில் பிறந்தவர்கள் பொது அறிவும் அதிக சமயோசித புத்தியும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

குறைவான தூக்கம்

குறைவான தூக்கம்

பகல் நேரத்தில் பிறந்தவர்களுக்கு குறைந்தபட்சம் 8-9 மணி நேர தூக்கம் தேவைப்படும், ஆனால் இரவு நேரத்தில் பிறந்தவர்களுக்கு அனைத்தையும் நிர்வகிக்க 5-6 தூக்கம் போதுமானது. அவர்கள் பகல் நேரத்தில் நன்றாக தூங்க முனைகிறார்கள், அதே நேரத்தில் பகல் நேரத்தில் பிறந்தவர்களுக்கு வெயில் இருக்கும் போது கண்ணை மூடுவது சிரமமாக இருக்கும்.

MOST READ: கொரோனா வைரஸ் பற்றிய சில விசித்திரமான உண்மைகள்... கொரோனாவால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன தெரியுமா?

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

இரவு ஆந்தைகள் தங்கள் லார்க் சகாக்களை விட குறைவான தூக்கத்தைப் பெற்றாலும், அவர்கள் லார்க் மக்களை விட அதிக விழிப்புணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். ஒரு ஆய்வின்படி, லார்க்ஸ் அவர்களின் இரவு ஆந்தைக நண்பர்களை விட குறைவான கவனத்தை கொண்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

நெகிழ்வானவர்கள்

நெகிழ்வானவர்கள்

இரவு நேரத்தில் பிறந்தவர்கள் வேலையில் அதிக நெகிழ்வுடன் இருப்பார்கள், கூடுதல் வேலை செய்ய அவர்கள் எப்பொழுதும் தயாராய் இருப்பார்கள். இரவில் எவ்வளவு தாமதமானாலும் வேலையை முடிக்காமல் உறங்க மாட்டார்கள். மறுபுறம் லார்க்ஸ் 9 மணி நேர அலுவலக வேலையை செய்ய மட்டுமே விரும்புவார்கள்.

அதிக ஐக்யூ

அதிக ஐக்யூ

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இரவு ஆந்தைகள் இருப்பவர்கள் தங்கள் லர்க் சகாக்களை விட மிக அதிகமான ஐ.க்யூவைக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறது. அவர்கள் புத்தக புழுக்களாக இல்லாமல் அதிக கற்பனைத்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

சிந்திக்கும் திறன்

சிந்திக்கும் திறன்

இரவு ஆந்தைகள் இரவு நேரத்தில் தூங்காமல் இருப்பதால் நிறைய யோசிக்கிறார்கள், இது அவர்களை நல்ல முடிவெடுப்பவர்களாக ஆக்குகிறது. அவர்கள் தங்கள் எண்ணங்களை நன்கு சிந்தித்து, தங்கள் வாழ்க்கையைப் பற்றி நன்கு சிந்தித்து சரியான திட்டம் எதுவென்று முடிவெடுக்கிறார்கள்.

MOST READ: கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...!

மறுபக்கம்

மறுபக்கம்

மறுபக்கத்தில் இரவு ஆந்தைகள் ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது, புகைபிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற பழக்கங்களுக்கு அடிமையாக அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால், அவர்களின் மனம் பெரும்பாலும் விழித்திருப்பதால் ஏற்படும் சலிப்பால் இந்த பழக்கங்கள் அவர்களை ஆக்கிரமித்துக் கொள்ள வாய்ப்புள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

PersonalityAnalysis of People Born In Night

Read to know the personality traits of night born people.
Story first published: Thursday, April 2, 2020, 13:34 [IST]
Desktop Bottom Promotion