For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராசிப்படி ஒரு ஆணின் குணாதிசயம் எப்படி இருக்கும் தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவர் பிறக்கும் போது கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலைகள் ஒருவரது குணாதிசயங்களைத் தீர்மானிக்கின்றன. எனவே ஒரு ஆணின் குணாதிசயத்தை தெரிந்து கொள்ள விரும்பினால், ராசியைக் கொண்டு அறிய முடியும்.

|

பொதுவாக உலகில் பெண்களைப் புரிந்து கொள்வது கடினமான ஒன்றாக பலரால் சொல்லப்படுகிறது. ஒரு பெண் எப்போது எந்த மாதிரி இருப்பார், அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை யாராலும் கூற முடியாது என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் ஆண்களை புரிந்து கொள்வது மட்டும் எளிதானதா? ஆண்களிடம் சிக்கலோ, குழப்பமோ இல்லையா? நிச்சயம் உள்ளது. நீங்கள் உங்களுக்கு பிடித்த ஆணை புரிந்து கொள்ள விரும்பினால் மற்றும் அவரது நடத்தை, அவருக்கு எப்படி பிடிக்கும் போன்ற பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் அதற்கு அந்த ஆணின் ராசியைக் கொண்டே அறியலாம்.

Personality Of Men According to their Zodiac Sign In Tamil

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவர் பிறக்கும் போது கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலைகள் ஒருவரது குணாதிசயங்களைத் தீர்மானிக்கின்றன. எனவே ஒரு ஆணின் குணாதிசயத்தை தெரிந்து கொள்ள விரும்பினால், அதை அவரது ராசியைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும். கீழே ராசிப்படி ஒரு ஆணின் குணாதிசயம் எப்படி இருக்கும் என கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசியைச் சேர்ந்த ஆண்கள், ஆற்றல் நிறைந்தவர்கள். எந்த ஒரு விஷயத்திலும் இவர்களுக்கு எந்த ஒரு தூண்டுதலோ அல்லது உந்துதலோ தேவையில்லை. எதையும் தாமாக முன்வந்து செய்யக்கூடியவர்கள். எந்த ஒரு ரிஸ்க்கையும் எடுக்க தயங்கமாட்டார்கள்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசியைச் சேர்ந்த ஆண்கள் கலை ஆர்வலர்கள். இயற்கையை அதிகம் விரும்பக்கூடியவர்கள். இவர்கள் தொழில்நுட்ப அம்சங்கள், படிப்பு மற்றும் நிதி பாதுகாப்பு பற்றி அதிகம் கவலைப்பட மாட்டார்கள். அதற்காக இவர்கள் படிக்க விரும்பமாட்டார்கள் என்று அர்த்தமல்ல. இவர்களுக்கு படிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்காது. இவர்கள் முற்றிலும் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியைச் சேர்ந்த ஆண்கள் எதையாவது பெற விருப்பம் கொண்டிருந்தால், அதை அடையும் வரை முயற்சி செய்வார்கள். சிலர் இவர்களின் இக்குணத்தை அதிக பிடிவாதம் கொண்டவர்கள் என நினைத்து குழப்பமடைகிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணம் வெற்றி அடைவது மட்டும் தானே தவிர வேறொன்றும் இல்லை. இது அவர்களின் காதலிலும் பொருந்தும். மிதுன ராசியைச் சேர்ந்த ஆண் உங்களின் நண்பரா? அவர் எப்போதும் உங்களுடன் பேசும் போது கண்களால் விளையாடுகிறார்களா? அப்படியானால் அவர்களுக்கு உங்களைப் பிடித்துள்ளது என்று அர்த்தம்.

கடகம்

கடகம்

கடக ராசியைச் சேர்ந்த ஆண்கள் தாங்கள் முன்வைக்கும் விஷயங்களில் மிகவும் கவனம் செலுத்துவார்கள். ஒரு குறிக்கோளை அடைவதற்கு பல வருடங்கள் ஆகும் என்றாலம் அதை அவர்கள் பொருட்படுத்தாமல், முழு கவனத்தையும் செலுத்தி அதைப் பெற முயற்சிப்பார்கள். அதே வேளையில் இவர்கள் தங்கள் வழியில் வரும் அனைத்தையும் மதிப்பீடு செய்வார்கள்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியைச் சேர்ந்த ஆண்கள் மிகவும் நம்பிக்கையானவர்கள். நல்ல பாதுகாப்பை வழங்கக்கூடியவர்கள். இவர்கள் எதையும் செய்வதற்கு முன் ஆயிரம் முறை அதை ஆய்வு செய்து, திட்டமிடுவார்கள். இந்த ராசி ஆண்கள் தங்கள் வாழ்க்கை எங்கு செல்கிறது மற்றும் எதிர்காலத்தில் அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அவர்கள் தெளிவாக அறிய முனைவார்கள். மேலும் இந்த ராசியைச் சேர்ந்த ஆண்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டு, மற்ற ராசிகளுடன் ஒப்பிடும் போது தங்கள் குடும்பத்தில் ஸ்திரத்தன்மையைக் காண்பார்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசியைச் சேர்ந்த ஆண்கள் சிக்கலானவர்கள். இவர்கள் ஒரே வேளையில் பல முரண்பட்ட முடிவுகளை எடுப்பார்கள். இது அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை பலமுறை ஆரம்பத்தில் இருந்து தொடங்குவதற்கு வழிவகுக்கிறது. இவர்கள் மிகவும் பிராக்டிக்கலானவர்கள். இந்த ராசி ஆண்கள் சிறந்த பெற்றோராக இருப்பார்கள். தங்கள் வீட்டையும் குடும்பத்தையும் நன்கு கவனித்துக் கொள்வார்கள்.

துலாம்

துலாம்

துலாம் ராசியைச் சேர்ந்த ஆண்கள் எளிதில் புரிந்து கொள்ளவும், தொடர்பு கொள்ளவும் கூடியவர்கள். மிகவும் அன்பானவர்கள். ஒருவேளை இவர்கள் யாருடனாவத சண்டை போடுவதையோ அல்லது வருத்தப்படுவதையோ கண்டால், அது அவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டதாகவே இருக்கும். இவர்கள் மற்றவர்களை அவ்வளவு எளிதில் புண்படுத்தமாட்டார்கள். சண்டைகளை விரும்பாதவர்கள், அநீதிக்கு எதிரான போராடக்கூடியவர்கள். மொத்தத்தில் இந்த ராசி ஆண்கள் மென்மையானவர்கள் மற்றும் அமைதியை விரும்புபவர்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசியைச் சேர்ந்த ஆண்கள் வலிமையானவர்கள் மற்றும் ஆடம்பர வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். எதற்கும் அஞ்சாதவர்கள். இவர்கள் யாருக்கும் கீழே இருக்க விரும்பமாட்டார்கள். தனக்கு எதிரே வலிமையான ஒருவர் இருந்தாலும், தங்கள் உரிமைகளையும் தங்கள் சக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரின் உரிமைகளையும் பாதுகாப்பார்கள். ஒரு விஷயத்தில் தோற்கிறோம் என்று தெரிந்தாலும் கண்ணியத்துடன் இறங்குவார்கள்.

தனுசு

தனுசு

தனுசு ராசியைச் சேர்ந்த ஆண்கள் பல நல்ல விஷயங்களின் கலவை என்றே கூறலாம். ஏனெனில் இவர்கள் புத்திசாலிகள், வேடிக்கையானவர்கள் மற்றும் அவர்கள் எப்போதும் தங்கள் மீதுள்ள நம்பிக்கையுடன் மற்றவர்களை பாதிக்க முயற்சி செய்கிறார்கள். தன்னைச் சுற்றியிருப்பவர்களை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள நினைப்பார்கள்.

மகரம்

மகரம்

மகர ராசியைச் சேர்ந்த ஆண்கள் சிந்தனைமிக்க மனிதர்கள் மற்றும் சிறந்த ஆலோசகர்கள். இவர்கள் சிறந்த அறிவுரை வழங்குவது மட்டுமின்றி, அதை மற்றவர் கேட்கும் விதத்தில் சொல்வார்கள். இவர்கள் மற்றவர்கள் சொல்வதையும் கேட்கக்கூடியவர்கள். இவர்கள் எதையும் மனதில் மறைத்து வைத்து பேசமாட்டார்கள்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசியைச் சேர்ந்த ஆண்கள் நம்பிக்கையானவர்கள். உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். இவர்கள் மிகவும் தைரியமாகவும் திமிர்பிடித்தவர்களாகவும் இருந்தாலும், அவர்களின் படைப்பாற்றல் அவர்கள் செய்ய வேண்டிய எந்த பணியிலும் உடன் இருக்கும் மற்றும் அவர்கள் வேலையை நிறைவேற்றும் வரை அவர்கள் அதை கைவிட மாட்டார்கள். உங்களுக்கு கும்ப ராசியைச் சேர்ந்த ஆண் நண்பர் இருந்தால், உங்களின் பாதி வேலையை வெற்றிகரமாக முடித்துவிடுவீர்கள்.

மீனம்

மீனம்

மீன ராசியைச் சேர்ந்த ஆண்கள் இலட்சியவாதிகள். இவர்கள் எதையாவது நம்பினால், தங்கள் நம்பிக்கைகளுக்கு யதார்த்தத்தை மாற்ற போராடுவார்கள். அவர்களின் கற்பனைத்திறன், அவர்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் மேம்படுத்த புதிய மற்றும் சிறந்த வழிகளை எப்போதும் சிந்திக்க வைக்கிறது. இந்த ராசிக்கார ஆண்கள் அற்புதமான பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தின் தலைவராக சிறப்பாக செயல்படுவார்கள். பிரச்சனைகளைத் தீர்க்கவும், அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் வழிகளைக் கண்டுபிடித்துவிடுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Personality Of Men According to their Zodiac Sign In Tamil

In this article, we discussed about personality of men according to their zodiac sign. Read on to know more...
Story first published: Friday, February 4, 2022, 15:34 [IST]
Desktop Bottom Promotion