Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
2023-ல் இந்த 6 ராசிக்காரங்க பணக்காரராக வாய்ப்பிருக்கு... உங்க ராசி இதுல இருக்கா?
2023 ஆம் ஆண்டில் கிரக நிலைகளைப் பொறுத்து, சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருப்பதோடு, அவர்கள் பணக்காரராகவும் வாய்ப்புள்ளது.
அனைவருக்குமே பணக்காரராக வேண்டுமென்ற ஓர் ஆசை இருக்கும். ஆனால் பணக்காரராக வேண்டுமானால், அதற்கு கடினமாக உழைத்து பணம் சம்பாதிக்க வேண்டும். இது தவிர ஒருவருக்கு அதிர்ஷ்டத்தின் அதரவும் தேவை. சிலருக்கு அவர்களது ராசியைப் பொறுத்து, அதிர்ஷ்டம் மற்றும் அவர்களின் திறமையால் எளிதில் பணக்காரராகிவிடுவார்கள். ஒருவரது கடின உழைப்பிற்கு அதிர்ஷ்டம் ஆதரவாக இருந்தால், அதற்கான பலன் கிடைக்கும்.

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டில் கிரக நிலைகளைப் பொறுத்து, சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருப்பதோடு, அவர்கள் பணக்காரராகவும் வாய்ப்புள்ளது. உங்களுக்கு 2023 ஆம் ஆண்டில் பணக்காரராகும் வாய்ப்பு எந்த ராசிக்கு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த ராசிகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டு தொழில் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் சிறந்த ஆண்டாக இருக்கும். இதுவே இந்த ஆண்டில் இவர்களின் நிதி நிலைமை மேம்படுத்தி பணக்காரராக்கும். அதே வேளையில் ரிஷப ராசிக்காரர்கள் சனியின் கடுமையான தாக்கத்தில் இருந்து தப்பித்து நற்பலனைப் பெற மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

கன்னி
2023 ஆம் ஆண்டில் கன்னி ராசிக்காரர்கள் அதிக ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ஆண்டில் இவர்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு ஏராளமான கதவுகள் திறக்கப்படும். எதையும் கச்சிதமாக செய்ய வேண்டும் என்ற இவர்களின் போக்கு இந்த ராசிக்காரர்களை அனைத்திலும் வெற்றி பெற வைத்து வெற்றியின் உச்சத்திற்கு கொண்டு செல்லும். எனவே கன்னி ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டு வாழ்வில் ஒரு திருப்பு முனையாக இருக்கும்.

துலாம்
நிதியைப் பொறுத்தவரை, 2023 ஆம் ஆண்டில் துலாம் ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். அதுவும் இந்த ஆண்டில் இந்த ராசிக்காரர்களின் மிகவும் ஆக்கப்பூர்வமான மற்றும் மூலோபாய யோசனைகள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைத் தந்து, பணக்காரராகும் வாய்ப்பை அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி முதல் டிசம்பர் வரை முதலீடுகளுக்கு நல்ல காலம்.

தனுசு
2023 ஆம் ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமான ஆண்டாக இருக்கும். ஏனெனில் இந்த ஆண்டில் தனுசு ராசிக்காரர்களுக்கு தங்கள் கடின உழைப்பிற்கான வெகுமதி கிடைக்கும். மேலும் இந்த ஆண்டில் அனைத்து விஷயங்களுமே தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இதன் விளைவாக தனுசு ராசிக்காரர்கள் 2023 ஆம் ஆண்டில் பணக்காரராகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

கும்பம்
2023 ஆம் ஆண்டில் கும்ப ராசிக்காரர்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. நிதியைப் பொறுத்தவரை, இந்த ஆண்டில் கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிடாமல் அதைப் பயன்படுத்தினால், உங்களின் நிதி நிலை எதிர்பாராத அளவில் முன்னேற்றமடையும். அதுவும் இந்த ஆண்டு சற்று கடினமானதாக இருந்தாலும், முடிவில் அவை வெற்றிகரமாக இருக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் பிறப்பில் இருந்தே நல்ல அதிர்ஷ்டசாலிகள். அதுவும் 2023 ஆம் ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக இருக்கும். ஏனெனில் இந்த ஆண்டில் இந்த ராசியின் அதிபதியான குரு பகவான் மீனத்தில் பயணிக்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குருவின் அருளால் தொழிலில் சிறப்பான வெற்றி மற்றும் லாபத்தை கண்டு, பணக்காரராகும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications