Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
2023-ல் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கப் போகுது...
உங்கள் வேலையில் நல்ல மாற்றம் நடக்கா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறீர்களா? 2023 ஆம் ஆண்டின் கிரக நிலைகளால் சில ராசிக்காரர்களுக்கு தொழிலில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.
2022 ஆம் ஆண்டில் நிறைய பேர் தங்கள் வேலையில் பல பிரச்சனைகளை சந்தித்திருக்கலாம். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டில் இருந்து தங்களின் பணியிடத்தில் நல்லது நடக்காதா என்று பல எதிர்பார்ப்பதுண்டு. நீங்களும் அப்படி உங்கள் வேலையில் நல்ல மாற்றம் நடக்கா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறீர்களா? 2023 ஆம் ஆண்டின் கிரக நிலைகளால் சில ராசிக்காரர்களுக்கு தொழிலில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இதன் விளைவாக பதவி உயர்வு, சம்பள உயர்வு, விரும்பிய இடமாற்றம் போன்றவை கிடைக்கப் போகிறது.

அதேப் போல் அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தால், அதிலும் நல்ல பலன் கிடைக்கும். முக்கியமாக வேலை கிடைக்காமல் அலைந்து கொண்ட பலருக்கு 2023 ஆம் ஆண்டில் நல்ல வேலை கிடைக்கும். இப்போது 2023 ஆம் ஆண்டு தொழில் ரீதியாக எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
2023 ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக நன்மை தரும் ஆண்டாக இருக்கும். இதுவரை உங்கள் தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்களை நடைபெறாமல் போனால், இந்த ஆண்டில் அது வெற்றிகரமாக நடக்கும். பணியிடத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் குறையும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வைப் பெற வாய்ப்புக்கள் உள்ளன. பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டு தொழில் ரீதியாக சிறப்பான ஆண்டாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கடுமையாக உழைத்தால் நல்ல பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளன.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வெற்றியுடன், முன்னேற்றமும் ஏற்படும். மிதுன ராசிக்காரர்கள் சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடுகிறார்கள். இதனால் தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. வேலையை மாற்ற நினைத்தால் அல்லது வேலையைத் தேடிக் கொண்டிருந்தால், இந்த ஆண்டில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் 2023 ஆம் ஆண்டில் தொழில் ரீதியாக சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். தொழிலில் நல்ல உயரங்களை அடைவீர்கள். பதவி உயர்வுக்கான வாய்ப்புக்களும் உள்ளன. ஜனவரி மாதத்தில் சனி உங்கள் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செல்வதால், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அதுவும் மெதுவாக முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டு தொழிலில் மகத்தான வெற்றியைத் தரும் ஆண்டாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் வேலையில் சில மாற்றங்களை சந்திக்கக்கூடும். ஆனால் அந்த மாற்றங்கள் நல்ல மாற்றங்களாகவே இருக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஆண்டில் நல்ல வேலை கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்கள் மற்றும் இடமாற்றத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு அது நிறைவேறும்.

மீனம்
2023 ஆம் ஆண்டில் மீன ராசிக்காரர்களும் தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். குறிப்பாக வேலை செய்பவர்கள் பணியிடத்தில் பாராட்டைப் பெறுவார்கள். ஜனவரி மாதம் மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். குருவின் அருளால் முடிவெடுக்கும் திறன் மேம்படும். பணியிடத்தில் உங்கள் வேலையில் மட்டும் கவனத்தை செலுத்தினால், பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications