Latest Updates
-
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
நவம்பர் மாதத்தில் அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
நவம்பர் மாத கிரக நிலைகளால் சில ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கவுள்ளார்கள். இப்போது அந்த 5 ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
நவம்பர் மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த மாதத்தில் 4 முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. மேலும் குரு பகவான் வக்ர நிவர்த்தியடைகிறார். அதோடு இந்த மாதத்தில் சந்திர கிரகணம் நிகழவுள்ளது. ஜோதிடத்தின் படி, சந்திர கிரகணம் மிகவும் முக்கியமானது. இது தவிர இந்த மாதத்தில் சுக்கிரன் விருச்சிக ராசிக்கு செல்கிறார். செவ்வாய் வக்ர நிலையில் ரிஷப ராசியை அடைகிறார்.

மேலும் சூரியன் மற்றும் புதன் விருச்சிக ராசிக்கு செல்கின்றனர். இதனால் புதாதித்ய யோகம் மற்றும் லட்சுமி நாராயண யோகம் உருவாகும். நவம்பர் மாத கிரக நிலைகளால் சில ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கவுள்ளார்கள். இப்போது அந்த 5 ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் சில சவால்களை சந்திக்க நேரிடும். கோபத்தையும், பேச்சையும் கட்டுப்படுத்த வேண்டும். மாதத்தின் நடுப்பகுதியானது சற்று கடினமான காலமாக இருக்கும். தவறான உணவுப் பழக்கங்களால் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரம் செய்பவர்களின் போட்டியாளர் இக்காலத்தில் வலுவாக இருப்பார்கள். மாதத்தின் இரண்டாம் பாதியில், வியாபாரத்தை விரிவுப்படுத்த முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தவறான புரிதல்களால் பிரச்சனைகள் வரக்கூடும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் நவம்பர் மாதத்தில் எந்த வேலையையும் புறக்கணிக்கக்கூடாது. மாதத்தின் தொடக்கத்தில் பணத்தை புத்திசாலித்தனமாக செலவழிக்க வேண்டும். அதே சமயம் யாருக்கும் எந்த வாக்குறுதியையும் அளித்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். மாதத்தின் நடுப்பகுதியில் குடும்பத்தினரைப் பற்றிய கவலை அதிகரிக்கும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். மாத இறுதியில் வியாபாரிகள் சில சிரமங்களை சந்திப்பார்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் புத்திசாலித்தனமாக செலவழிக்க வேண்டும். ஏனெனில் பெரிய செலவுகளால் உங்களின் பட்ஜெட் பாழாகலாம். உங்களின் பணிகளை முடிக்க முயற்சி செய்யுங்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். மாதத்தின் இரண்டாம் வாரத்தில் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நாள்பட்ட நோயால் உடல் ரீதியாக மற்றும் மன ரீதியாக அவதிப்பட நேரிடும். மாத இறுதியில் நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். காதல் வாழ்வில் சில பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் நவம்பர் மாதத்தில் சிரமங்களை எதிர்கொள்வார்கள். மாதத்தின் இரண்டாவது வாரத்தில் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மாதத்தின் நடுப்பகுதியில் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். இம்மாதத்தில் மிகப்பெரிய செலவுகள் வரக்கூடும். காதல் உறவைப் பொறுத்தவரை, சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. மாதத்தின் நடுப்பகுதியில் மூன்றாம் நபரால் தவறான புரிதல் காரணமாக பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.

மீனம்
மீன ராசிக்காரர்கள் நவம்பர் மாதத்தில் தங்கள் வேலையில் சிரமத்தை சந்திக்கக்கூடும். இம்மாதத்தில் உங்கள் வேலையில் கூடுதலாக முயற்சித்தால் உங்கள் இலக்கை அடைவீர்கள். மாதத்தின் இரண்டாவது வாரத்தில் உங்கள் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இக்காலத்தில் யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்கள், கண்மூடித்தனமாக யாரையும் நம்பாதீர்கள் மற்றும் பண பரிவர்த்தனைகளை செய்யாதீர்கள். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். மாதத்தின் நடுப்பகுதியில் உங்கள் துணையுடன் பிரச்சனைகளை சந்திக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications