Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
இந்த 6 ராசிக்காரங்க வைர நகைகளை அணியக்கூடாதாம்... இல்லன்னா பிரச்சனை உருவாகுமாம்..
ஜோதிடர்களின் நம்பிக்கைகளின் படி, அனைவருமே வைர நகைகளை அணியக்கூடாது. ஏனெனில் அது ஒரு ரத்தினக் கல் மற்றும் அது அனைவருமே அணிய ஏற்றது அல்ல.
தற்போதெல்லாம் தங்கத்தை விட வைரங்களை அணிவது தான் ட்ரெண்ட்டாக உள்ளது. வைரம் ஒருவரது ஸ்டேட்டஸ் அறிகுறியாக இருப்பதோடு, வைர நகைகள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, வைரம் என்பது சுக்கிரனுக்குரிய ரத்தினம். சுக்கிரன் வலுவாக இருந்தால், வாழ்க்கை ஆடம்பரமாக இருக்கும். ஆனால் ஜோதிடர்களின் நம்பிக்கைகளின் படி, அனைவருமே வைர நகைகளை அணியக்கூடாது. ஏனெனில் அது ஒரு ரத்தினக் கல் மற்றும் அது அனைவருமே அணிய ஏற்றது அல்ல.

நீங்கள் வைர நகைகளை அணிவதாக இருந்தால் ஜோதிடர்களை கலந்தாலோசித்த பின்னரே அணிய வேண்டும். இல்லாவிட்டால், அது மோசமான பலன்களை அளிக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, பின்வரும் 5 ராசிக்காரர்கள் எந்த சூழ்நிலையிலும் ஜோதிடர்களின் ஆலோசனையின்றி வைரத்தை அணியக்கூடாது.

மேஷம்
நீங்கள் மேஷ ராசிக்காரராக இருந்தால், உங்கள் ராசியின் 2 மற்றும் 7 ஆவது வீட்டின் அதிபதியாக இருந்தால், நீங்கள் வைரம் அணியக்கூடாது. ஒருவேளை அணிந்தால், இந்த வைரம் உங்களுக்கு நிறைய பிரச்சனைகளை உருவாக்கும்.

கடகம்
பொதுவாக கடக ராசிக்காரர்கள் வைர நகைகளை அணியக்கூடாது. ஆனால் சுக்கிரனின் மகாதசை உங்கள் மீது இயங்கினால், வைரம் அணிவது உங்களுக்கு சாதகமான பலனை அளிக்கும். ஆகவே ஜோதிடரின் ஆலோசனையைப் பெற்ற பின்னர் வைர நகைகளை அணியுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சாதகமாக கருதப்படாததால், இந்த ராசிக்காரர்கள் வைரம் அணியக்கூடாது. ஜோதிடர்களின் ஆலோசனையின்றி ஒருவேளை வைர நகைகளை வாங்கி அணிந்தால், அந்த வைரம் கெட்ட பலன்களை அளிக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால், வைரம் அணிந்தால், செவ்வாய்க்கும் சுக்கிரனுக்கும் பகை உண்டாகும். ஒருவேளை அணிந்தால், வைரமானது இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை உருவாக்கும் மற்றும் பல அசுப பலன்களைத் தரும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் வைரத்தை அணிந்தால், அது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை தலைத்தூக்கச் செய்து, வாழ்க்கையையே மோசமாக்கும். ஆகவே இந்த ராசிக்காரர்கள் எக்காரணம் கொண்டும் வைர நகைகளை அணியக்கூடாது.

மீனம்
மீன ராசியின் மூன்று மற்றும் எட்டாம் வீட்டின் அதிபதி தான் சுக்கிரன். இது தவிர மீன ராசியின் அதிபதி குரு பகவான். குரு பகவானுக்கும், சுக்கிரனுக்கும் பகை உள்ளது. எனவே மீன ராசிக்காரர்கள் வைரத்தை அணிந்தால், அது அசுப பலன்களை அளித்து, அனைத்து பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.



Click it and Unblock the Notifications