Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
அக்டோபர் மாதம் இந்த 5 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. இல்லன்னா பெரிய நிதி இழப்பு ஏற்படும்..!
அக்டோபர் மாதத்தில் புதன் மற்றும் சனி வக்ர நிவர்த்தி அடைகின்றனர். மறுபுறம் செவ்வாய் மிதுன ராசியில் வக்ர நிலையில் இருப்பார். இப்போது அக்டோபர் மாதம் எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, அக்டோபர் மாதத்தில் பல கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன மற்றும் சில கிரகங்கள் வக்ர நிவர்த்தி அடைகின்றன. கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதமாக இருந்தாலும், சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்த மற்றும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மாதமாக இருக்கும்.

அக்டோபர் மாதத்தில் புதன் மற்றும் சனி வக்ர நிவர்த்தி அடைகின்றனர். மறுபுறம் செவ்வாய் மிதுன ராசியில் வக்ர நிலையில் இருப்பார். இது தவிர பல முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன. இப்போது அக்டோபர் மாத கிரக நிலைகளால் எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 10 மற்றும் 11 ஆவது வீட்டின் அதிபதி சனி மற்றும் 8 ஆவது வீட்டின் அதிபதி செவ்வாய். எனவே இந்த ராசிக்காரர்களின் செலவுகள் அதிகரிக்கும். இதன் விளைவாக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தொழில் செய்பவர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சிலர் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 9 மற்றும் 10 ஆவது வீட்டின் அதிபதி சனி மற்றும் 7 ஆவது வீட்டின் அதிபதி செவ்வாய். ஆகவே இம்மாதத்தில் முதலீடுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் பெரிய இழப்புக்களை சந்திக்க நேரிடும். பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும். மேலும் நிதி பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் அக்டோபர் மாதகிரக நிலைகளால் தங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் அதிக மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். பயணத்தின் போது கவனமாக இருங்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

கடகம்
கடக ராசியின் 7 மற்றும் 8 ஆவது வீட்டின் அதிபதி சனி மற்றும் 5 மற்றும் 10 ஆவது வீட்டின் அதிபதி செவ்வாய். எனவே இம்மாதத்தில் கடக ராசிக்காரர்கள் தேவையற்ற செலவுகளை அதிக செய்ய நேரிடும். பண இழப்பிற்கு அதிக வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மறுபுறம் சனி வக்ர நிவர்த்தி அடைவதால் மாணவர்கள் படிப்பில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். இம்மாதத்தில் எந்தவித மாற்றங்களையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
