Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
ஆகஸ்ட் மாதம் இந்த 4 ராசிக்காரர்களின் சம்பளம் உயர வாய்ப்புள்ளது.. உங்க ராசி இதுல இருக்கா?
கிரகங்கள் தங்களின் நிலைகளை மாற்றுவதால் ஆகஸ்ட் மாதத்தில் சில ராசிக்காரர்களின் சம்பளம் உயர வாய்ப்புள்ளது. அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றும். அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் புதன், சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன. இதில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி புதன் கடகத்தில் இருந்து சிம்ம ராசிக்கு மாறினார். அதன் பின் ஆகஸ்ட் 07 ஆம் தேதி சுக்கிரன் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு மாறவுள்ளார்.

பின் சூரியன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு ஆகஸ்ட் 17 ஆம் தேதி மாறுகிறார். அதைத் தொடர்ந்து புதன் கன்னி ராசிக்கு ஆகஸ்ட் 21 ஆம் தேதியும், இறுதியாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி சுக்கிரன் சிம்ம ராசிக்கும் செல்கிறார். இப்படி கிரகங்கள் தங்களின் நிலைகளை மாற்றுவதால் ஆகஸ்ட் மாதத்தில் சில ராசிக்காரர்களின் சம்பளம் உயர வாய்ப்புள்ளது. அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். பணிபுரிபவர்கள் தங்களின் வேலையை மாற்ற ஏற்ற மாதம். மேலும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. கல்வி துறையில் இருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். பொருளாதார நிலைமை வலுவாக இருக்கும். நீண்ட காலமாக சிக்கிய பணம் இம்மாதத்தில் கைக்கு வந்து சேரும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் நிதி நிலைமை சூப்பராக இருக்கும். சிக்கிய பணம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வை பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை சந்தோஷமாகவும், இனிமையாகவும் இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம். மொத்தத்தில் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் சம்பளம் உயர்வதற்கான வாய்ப்புள்ளது. குடும்ப சூழல் இனிமையாகவும், அமைதியாகவும் இருக்கும். செல்வம் பெருகுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இதுவரை ஏதாவது நோயால் அவதிப்பட்டு வந்தால், இந்த மாதத்தில் அதில் இருந்து விடுபடுவீர்கள். அலுவலகத்தில் உங்களின் வேலை உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இம்மாதத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உள்ளது. போட்டித் தேர்வுகளை எழுதியுள்ள மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். நிதி நிலைமை வலுவாக இருக்கும். ரகசியமான மூலத்தில் இருந்து பணம் வருவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நல்ல புதிய வேலை வாய்ப்புக்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications