Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த 4 ராசிக்காரங்களுக்கு காதல், கல்யாணம்-ன்னு எதுவுமே செட் ஆகாதாம்... அப்படியே ஆனாலும் நிலைக்காதாம்!
ஜோதிடத்தில் இருக்கும் ராசியானது ஒருவரின் குணங்கள், இயல்புகள் மற்றும் ஆளுமையைப் பற்றி நிறைய கூறுகிறது. அதில் சில ராசிக்காரர்கள் உறவுகளைப் பேணுவதில் சிறந்தவர்கள். ஆனால் இன்னும் சிலரது உறவுகள் பெரும்பாலும் தோல்வியடைகின்றன.
உலகில் பிறந்த ஒவ்வொருவருக்குமே ஒவ்வொருவிதமான குணாதிசயங்கள் மற்றும் தன்மைகள் இருக்கும். அதேப்போல் ஜோதிடத்தில் உள்ள ராசிகளுக்கும் தன்மைகள் உள்ளன. ஒவ்வொரு ராசியும் தனித்துவமான தன்மைகளைக் கொண்டுள்ளன. ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசியைச் சேர்ந்தவர்களின் குணாதிசயங்களும், அந்த ராசியைப் பொறுத்தும் இருப்பதாக கூறப்படுகிறது.

ஜோதிடத்தில் இருக்கும் ராசியானது ஒருவரின் குணங்கள், இயல்புகள் மற்றும் ஆளுமையைப் பற்றி நிறைய கூறுகிறது. அதில் சில ராசிக்காரர்கள் உறவுகளைப் பேணுவதில் சிறந்தவர்கள். ஆனால் இன்னும் சில ராசிகளின் உறவுகள் பெரும்பாலும் தோல்வியடைகின்றன. அப்படி உறவுகளைப் பேணுவதில் வெற்றி பெறாத அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் உறவுகளைப் பேணுவது மிகவும் கடினம். இந்த ராசிக்காரர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், அவர்களின் உறவுகள் வெற்றி பெறுவதில்லை. அதற்காக அவர்கள் தங்கள் உறவை வெற்றிகரமாக பேணக்கூடாது என்றெல்லாம் விரும்பவில்லை. ஆனால் அவர்கள் உறவைப் பேண மேற்கொள்ளும் செயல்களால் அனைத்தும் முழுமையற்றதாகவும், பலவீனமாகவும் தெரிகிறது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு எந்த உறவும் வெற்றிகரமான நிலைப்பதில்லை. இதற்கு காரணம், அவர்கள் தங்கள் உறவுகளில் அனைத்துமே பர்பெக்ட்டாக இருக்க வேண்டுமென்று விரும்புவது தான். ஏனெனில், இந்த ராசிக்காரர்கள் சிறு தவறு நேர்ந்தாலும், தாங்கள் விரும்பும் ஒருவருடன் ஆர்வத்தை இழக்கத் தொடங்குகிறார்கள். இதன் காரணமாகவே, இந்த ராசிக்காரர்களுக்கு காதல், கல்யாணம் பெரும்பாலும் தோல்வியடைகின்றன.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கைப் பாதை பெரும்பாலும் வெற்றியடையாது. இவர்கள் எப்போதும் உறவில் இருக்கும் போது சிறந்ததைக் கொடுப்பார்கள். அதனால் அவர்களுக்கு துணையாக வருபவர்கள் பெரும்பாலும் இவர்களிடம் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். இதற்கு இவர்கள் எவ்வளவு முயற்சித்தாலும், துணையாக வருபவர் எந்த வகையிலும் இவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. இந்த ஒரு காரணத்தினாலேயே இந்த ராசிக்காரர்களின் உறவுகள் நீடிக்காமல் தோல்வியடைகிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் பெரும்பாலும் காதல் மற்றும் உறவுகளைப் பற்றி சற்றும் யோசிக்காமல் எந்த முடிவையும் எடுப்பார்கள். இதனாலேயே இவர்கள் உறவில் இருந்த சில மாதங்கள் கழித்து, ஒத்து வராது என்று நினைப்பதற்கு காரணம். அதோடு இந்த எண்ணம் எழுந்த பின் இவர்கள் தங்கள் உறவில் உள்ள குறைகளைக் கண்டறிய தொடங்கி, இந்த உறவை விட சிறந்த ஒன்று கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இதன் விளைவாகவே, இந்த ராசிக்காரர்கள் தங்களுக்கு ஏற்ற சரியான உறவைப் பெறுவதில் தோல்வியடைகிறார்கள்.



Click it and Unblock the Notifications