Latest Updates
-
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்!
இந்த 4 ராசிக்காரங்க ரொம்பவும் அதிர்ஷ்டசாலிங்க... இவங்க நினைக்குறது எல்லாமே நடந்துடுமாம்..
வேத ஜோதிடத்தின் படி, 12 ராசிகளில் 4 ராசிக்காரர்கள் மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம். உங்கள் ராசி இதில் உள்ளதா என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாக ஒரு நண்பர் கூட்டத்தை எடுத்துக் கொண்டால், அதில் ஒருவர் மட்டும் அனைத்தையும் மிக எளிதில் பெறக்கூடியவராக இருப்பார். வெற்றி, மகிழ்ச்சி, புகழ், சக்தி மற்றும் செல்வம் என்று எதுவானும் அனைத்துமே அவருக்கு எளிதில் கிடைக்கக்கூடியதாக, அவரைத் தேடி வரும். முக்கியமாக இவர்கள் எந்த ஒரு சிரமமும் படாமல், எவ்வளவு பின்தங்கியிருந்தாலும், முடிவுகள் எப்போதும் இவர்களுக்கு சாதகமாக இருக்கும். இதற்கு காரணம் இவர்களது அதிர்ஷ்டம் என்று தான் கூறுவோம். இவ்வளவு அதிர்ஷ்டமும் ஒருவருக்கு எப்படி கிடைக்கிறது என்று நீங்கள் யோசிக்கலாம். ஜோதிடம் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

வேத ஜோதிடத்தின் படி, 12 ராசிகளில் 4 ராசிக்காரர்கள் மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம். உங்கள் ராசி இதில் உள்ளதா என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள். இவர்கள் விரும்புவதை எப்போதும் பெறுவார்கள். எப்போதும் சந்தோஷமாக இருக்கக்கூடியவர்கள். இவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பார்கள். இவர்களின் கடின உழைப்பு எப்போதும் நல்ல பலனைத் தரும் மற்றும் இவர்கள் வாழ்க்கையில் வெற்றிகரமானவர்களாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் கிடைக்கும். மேலும் இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும், தொழில் வாழ்க்கையும் சந்தோஷமாகவும், ஒழுங்காகவும் இருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் விரும்பியது அனைத்துமே கிடைக்கும். இருப்பினும், அதற்காக இவர்கள் சற்று உழைக்க வேண்டியிருக்கும். ஆனால் முடிவுகள் எப்போதும் இவர்களுக்கு சாதகமாகவே இருக்கும். கும்ப ராசிக்காரர்கள் மகிழ்ச்சியான மனிதர்கள். இவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியைப் பரப்புவார்கள். இவர்கள் நல்ல அனுபவசாலிகள் மற்றும் பல விஷயங்களில் அதிர்ஷ்டசாலிகள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களும் அதிர்ஷ்டம் அதிகம் நிறைந்தவர்கள். இந்த ராசிக்காரர்கள் தாங்கள் நினைத்ததை அடைய கடுமையாக உழைக்கக்கூடியவர்கள். இவர்களின் கடின உழைப்பும், அதிர்ஷ்டமும் இணைந்து தான் இவர்களை வெற்றியடையச் செய்கிறது.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் நல்ல தலைவர்கள் மற்றும் அதிர்ஷ்டசாலிகள். இதனால் இவர்கள் எதிலும் நல்ல நேர்மறையான முடிவுகளைப் பெறுகிறார்கள். எப்போதும் உயர்ந்த லட்சியத்தை அடைய தயாராக இருப்பார்கள். இவர்கள் மிகவும் தன்னம்பிக்கையானவர்கள். இந்த காரணத்தால் ஒவ்வொரு முறையும் அதிர்ஷ்டம் இவர்களுக்கு சாதகமாக உள்ளது. துலாம் ராசிக்காரர்கள் மற்ற ராசிகயை விட கடினமாக உழைக்க சற்றும் தயங்காதவர்கள். இதுவும், இவர்களின் வெற்றிக்கு ஓர் காரணம்.



Click it and Unblock the Notifications