Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த 6 ராசிக்காரங்க பிறவியிலேயே நல்ல தலைவனா இருக்கும் தகுதியை கொண்டவங்களாம்..
ஜோதிடத்தின் படி, ஒருவரது ராசியைக் கொண்டு அவரின் தலைமைப் பண்புகளை அறிய முடியும். அந்த வகையில் ஜோதிடத்தில் உள்ள 12 ராசிகளில் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு நல்ல தலைவராக இருக்கும் பண்புகள் உள்ளன.
ஒரு குழுவை திறம்பட வழிநடத்துவது என்பது அனைவராலும் முடியாது. அதற்கு சரியான தலைமை பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். நல்ல தலைமைப் பண்புகளைக் கொண்டவர்கள் மிகவும் நம்பகமானவர்கள் மற்றும் எப்படிப்பட்ட கடினமான சூழ்நிலைகளையும் சிறப்பாக கையாளக்கூடியவர்ளாக இருப்பார்கள். இந்த தலைமைத்துவ பண்புகள் அனைவரிடத்திலும் இருந்துவிடாது.

ஆனால் சிலருக்கு பிறவியிலேயே இந்த தலைமை பண்புகள் இருக்கும். இதற்கு பிறக்கும் போது கிரகங்களின் நிலையும் ஓர் காரணம். ஜோதிடத்தின் படி, ஒருவரது ராசியைக் கொண்டு அவரின் தலைமைப் பண்புகளை அறிய முடியும். அந்த வகையில் ஜோதிடத்தில் உள்ள 12 ராசிகளில் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு நல்ல தலைவராக இருக்கும் பண்புகள் உள்ளன. அத்தகைய ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இத்தகைய செவ்வாய் கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படுபவர். இதனால் மேஷ ராசிக்காரர்கள் மிகவும் தைரியமானவர்களாகவும், எந்த ஒரு ரிஸ்க்கையும் எடுக்க அஞ்சம் கொள்ளதவர்களாகவும் உள்ளார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு தலைமைப் பண்பு பிறப்பில் இருந்தே உள்ளது. அதோடு இவர்களின் குணாதிசயங்கள் மிகவும் வலுவானதாக கருதப்படுகிறது. அதனால் அவர்கள் மிகவும் வேகமாக மற்றவர்களுடன் பழகி, அவர்கள் மனதில் ஒரு நல்ல இடத்தைப் பெறுகிறார்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இத்தகைய சூரியன் நவகிரகங்களின் ராஜா/தலைவராக கூறப்படுகிறார். இதன் காரணமாகவே, சிம்ம ராசிக்காரர்கள் ஒரு ராஜ வாழ்க்கை வாழ்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு கட்டளையிடவும், பெரிய விஷயங்களை செய்யவும், விலையுயர்ந்த பொருட்களை வாங்கவும் விரும்புவார்கள். இந்த ராசிக்காரர்களிடம் சிறு வயதில் இருந்தே தலைமைப் பண்பு காணப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் தங்களுக்கு பிடித்தமான வாழ்க்கையையே வாழ விரும்புவார்கள் மற்றும் பணியிடத்தில் பெரிய பதவிகள் மற்றும் பெரிய பொறுப்புக்களை நன்றாக கையாளுவார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதியும் செவ்வாய் தான். ஆகவே தான் இந்த ராசிக்காரர்களின் குணங்கள் மேஷ ராசிக்காரர்களைப் போலவே உள்ளது. இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஆற்றல் மிக்கவர்கள் மற்றும் அதிக தைரியம் கொண்டவர்கள். பெரிய ரிஸ்க் எடுக்க விரும்புவார்கள். இந்த ராசிக்காரர்கள் நல்ல தலைவர்கள் என்பதை அடிக்கடி நிரூபிப்பார்கள். இருப்பினும், பல நேரங்களில் இவர்கள் குறிப்பிட்ட வெற்றியைக் கண்ட பின்னர் சற்று கர்வத்துடன் இருப்பார்கள்.

கும்பம்
கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். இந்த சனி பகவான் கர்மத்திற்குரிய பலனை அளிப்பவராக கருதப்படுகிறார். இதனாலேயே இவரின் இயல்பில் நீதி காணப்படுகிறது. இதன் காரணமாகவே நீதிமான் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் இயற்கையாகவே மிகவும் நடைமுறைக்குரியவர்கள். மேலும் இவர்கள் ஒரு விஷயத்திற்கு நன்கு யோசித்து ஆராய்ந்த பின்னரே தங்கள் முடிவை வழங்குவார்கள். இதனாலேயே பலர் இந்த ராசிக்காரர்களின் வழிகாட்டுதல்களைப் பெற விரும்புகிறார்கள். இதனால் இவர்கள் சிறந்த தலைவருக்கான பண்பையும் கொண்டுள்ளார்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களும் சனி பகவானை அதிபதியாக கொண்டிருப்பதால், இவர்கள் கர்மாவை நம்புபவர்கள் மற்றும் மிகவும் நேர்மையானவர்கள். அதே வேளையில் இந்த ராசிக்காரர்கள் எதை நினைத்தாலும் அதை செய்து முடித்தாக வேண்டும் என பிடிவாதமாக இருப்பார்கள். மேலும் இவர்கள் தங்களைச் சுற்றி உள்ளவர்களிடம் தங்களுக்கான ஒரு இடத்தை உருவாக்குகிறார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு எதிராக இருந்து யாராலும் வெற்றி பெற முடியாது. இதனாலேயே இவர்கள் மிகவும் நல்ல தலைவர்களாக கருதப்படுகிறார்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் எந்த துறையை தேர்வு செய்தாலும், அதில் மிகுந்த மரியாதையைப் பெறுவார்கள். இவர்கள் இயற்கையாகவே தலைமைத்துவ குணங்களைக் கொண்டுள்ளனர். மேலும் கஙடக ராசிக்காரர்கள் இயற்கையாக மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களின் உணர்வுகள் மற்றும் கருத்துக்களை மதித்து ஏற்றுக்கொள்வார்கள். இது அவர்களை போற்றுதலுக்குரிய நபராக ஆக்குகிறது. மேலும் இந்த ராசிக்காரர்கள் உயர்ந்த உள்ளுணர்வைக் கொண்டுள்ளனர். அதனால் அடுத்து என்ன செய்வதென்பதை எப்போதும் திட்டமிடுவார்கள். ஆகவே தான் அவர்கள் ஒரு சிறந்த தலைவருக்கான குணத்தைக் கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள்.



Click it and Unblock the Notifications