Latest Updates
-
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
பருப்பு உருண்டை குழம்பு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2 வாரம் தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
ராகு நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது..
பெனும்பிரல் சந்திர கிரகணம் 2020 எப்போது? எங்கு தெரியும்? யாரால் பார்க்க முடியும்?
2020ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் பெனும்பிரல் மூன் எக்லிப்ஸ் நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணத்தை ஸ்ட்ராபெர்ரி மூன் எக்லிப்ஸ் என்று அழைக்கின்றனர்.
2020 ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் வரும் ஜூன் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணம் "ஸ்ட்ராபெர்ரி மூன் எக்லிப்ஸ்"(Strawberry Moon Eclipse) என்று அழைக்கப்படுகிறது. அதன்படி ஸ்ட்ராபெர்ரி மூன் எக்லிப்ஸானது நிகழும் போது நிலவின் 57 சதவிகிதம் பகுதி பூமியை நிழலில் அமையும்.

இந்த சந்திர கிரகணம் ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா போன்ற பெரும்பாலான பகுதிகளில் தெரியும், தெற்கு கிழக்கு தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் மற்றும் அண்டார்டிகா ஆகிய பெரும்பாலான பகுதிகளில் தென்படும் என வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
கிரகணங்கள் வந்தாலே இப்போதெல்லாம் அச்சம்தான். காரணம் ஒரே ராசியில் நான்கு கிரகங்கள் கூடினாலே ஏதோ நடக்கப் போகிறது என்று சிலர் பயப்படுவார்கள். கடந்த 2019ஆம் தனுசு ராசியில் ஆறு கிரகங்கள் கூடியிருந்த போது நிகழ்ந்த கேது கிரகஸ்த சூரிய கிரகணம் மிக நீண்ட சூரிய கிரகணமாக இருந்தது. நெருப்பு வளைய சூரிய கிரகணம் 3 மணிநேரம் வரை நீடித்தது. இந்த கிரகணத்தால் ஏற்பட்ட பாதிப்பை இன்னமும் உலக மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

பெனும்பிரல் சந்திர கிரகணம்
சந்திர கிரகணங்கள் மூன்று வகைப்படும் முழு சந்திரகிரகணம், பகுதி நேர சந்திரகிரகணம், பெனும்பிரல் சந்திர கிரகணம் என மூன்று வகைப்படும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சந்திரகிரகணம் சிவப்பு நிலவாகவும், நீல நிலவாகவும் தெரிந்தது. ஜூன் 5ஆம் தேதி நிகழ உள்ள சந்திர கிரகணம் பெனும்பிரல் சந்திர கிரகணம் அதாவது புறநிழல் நிலவு மறைப்பு சந்திர கிரகணம் ஆகும். இந்த கிரகண காலத்தில் சந்திரன் முற்றிலும் இருட்டாக மாறாது அல்லது சிவப்பாகவும் மாறாது. இந்த சந்திர கிரகணம் கண்களுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காது, அதனால் எந்த சிறப்பு உபகரணங்களும் இல்லாமல் பார்க்க முடியும்.

ஓநாய் சந்திர கிரகணம்
2020ஆம் ஆண்டில் நான்கு பெனம்பிரல் சந்திர கிரகணங்கள் நிகழும் என்றும் நாசா அறிவித்திருந்தது. அதன்படி 2020ஆம் ஆண்டு பிறந்த உடன் ஜனவரி 10ஆம் தேதி ஓநாய் சந்திர கிரகணம் நிகழ்ந்தது. இந்த கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை. ஐரோப்பிய நாடுகள், ஆசியாவின் பெரும்பாலான பகுதி, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வசித்த மக்கள் இந்த சந்திர கிரகணத்தை பார்த்தனர்.

ஸ்ட்ராபெர்ரி மூன் எக்லிப்ஸ்
இந்த ஆண்டின் இரண்டாவது பெனும்பிரல் சந்திர கிரகணம் 'ஸ்ட்ராபெர்ரி மூன் எக்லிப்ஸ்' ஜூன் 5 ஆம் தேதி அன்று இரவு 11:15 மணிக்கு ஆரம்பித்து ஜூன் 6 தேதி காலை 2:34 மணி வரை நீடிக்கும். முழு சந்திர கிரகணத்தை ஜூன் 6 ஆம் தேதி அன்று 12:54 மணிக்கு பார்க்க முடியும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும். 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் மொத்தமாக மூன்று மணி நேரமும் பதினெட்டு நிமிடங்கள் நீடிக்கிறது. இந்தியாவில் குறிப்பாக தென்இந்தியாவில் இந்த கிரகணம் தெரியாது என்பதால் இந்தியாவில் உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றே கூறலாம்.

இன்னும் இரண்டு கிரகணங்கள்
இந்த ஆண்டில் ஜூன் 5, ஜூலை 5, நவம்பர் 30ஆம் தேதி சந்திர கிரகணங்கள் நிகழ உள்ளன. இந்த சந்திர கிரகணங்கள் இந்தியாவில் தெரியாது. அமெரிக்கா, ஐரோப்பா, கிழக்காசிய நாடுகள், ஆஸ்திரேலியாவில் இந்த சந்திர கிரகணம் தெரியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகு சூரிய கிரகணம்
இந்த நிலையில் ராகு உடன் சூரியன் சந்திரன் சேர்ந்திருக்கும் போது நிகழும் இந்த சூரிய கிரகணம் ராகு கிரகஸ்த சூரிய கிரகணமாகும். 21-06-2020ஆம் நாள் ஞாயிறு கிழமை காலை 9.16 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3.03 மணிவரை நீடிக்கிறது. இந்த கிரகணத்தை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பார்க்க முடியும். இதுவும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்தான். மிதுனம் ராசியில் இந்த நான்கு கிரகங்கள் கூடியிருக்கும் போது கேதுவின் பார்வை கிடைக்கிறது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியும் என்பதுதான் சிறப்பம்சம்.



Click it and Unblock the Notifications