For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாயின் தலையை வெட்டிய பரசுராமர் ஏன் தெரியுமா?

|

பரசுராமர் தனது அப்பா சொன்னதை கேட்டு கோடாரியால் தனது அம்மாவின் தலையை வெட்டி உயிரை எடுத்திருக்கிறார். அது மட்டும்தான் பலருக்கும் தெரியும். அம்மாவை கொன்ற அவரேதான் தனது அப்பாவிடம் சொல்லி உயிரை திரும்ப கொண்டு வந்திருக்கிறார். தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற வார்த்தைக்கு உதாரணமாக திகழ்ந்திருக்கிறார் பரசுராமர். மகாவிஷ்ணுவின் அவதாரமாக போற்றப்படும் பரசுராமர் அவதரித்தது அட்சய திருதியை நாளில்தான் என்கின்றன புராணங்கள்.

தசாவதாரத்தில் மஹாவிஷ்ணு எடுத்த அவதாரங்கள் மொத்தம் ஒன்பது. அதில் 6 ஆவதாக எடுத்த அவதாரம் தான் பரசுராமர் அவதாரம். அதுவரை நிகழ்த்திய 5 அவதாரங்களிலும், எந்தவிதமான ஆயுதங்களையும் பயன்படுத்தாமல் அசுரர்களை அழித்த மஹாவிஷ்ணு, பரசுராமர் அவதாரத்தில் தான் முதன் முதலில் ஆயுதத்தை பயன்படுத்தினார்.

பரசுராமர் இன்றைக்கும் நம்முடைய பூமியில் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம். புராணங்களில் படித்தவர்களில் ஏழு பேர் நம் பூமியில் இன்றைக்கும் சிரஞ்சீவியாக வாழ்ந்து வருகிறார்களாம். ஆஞ்சநேயர், விபீசணன், வியாசர், அஸ்வத்தாமன், பரசுராமர், மகாபலி சக்ரவர்த்தி, மார்க்கண்டேயர் ஆகியோர்தான் அந்த ஏழு பேர். இன்றைக்கு பரசுராமரை பற்றிதான் பார்க்கப் போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அப்பா சொல் கேட்கும் பிள்ளை

அப்பா சொல் கேட்கும் பிள்ளை

சப்தரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவர் ரேணுகாதேவி தம்பதிகள் சிவபெருமான நோக்கி கடுந்தவம் இருந்தனர். அந்த தவத்தின் பயனாக அவர்களுக்கு நான்காவதாக மகனாக அவதரித்தவர் தான் பரசுராமர். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றும் நீதியை நிலை நாட்டி உலகை காக்கவும் அவதாரமெடுத்தவர். அதனால் தான் தன்னுடைய தந்தையால், என்றைக்கும் சிரஞ்சீவியாக வாழ ஆசி பெற்றவர். இவருடைய கதை ராமாயணம் மற்றும் மகாபாரதத்திலும் இடம்பெற்றுள்ளது.

கோடாரி ஏந்திய பரசுராமர்

கோடாரி ஏந்திய பரசுராமர்

பரசுராமரின் இயற்பெயர் ராமபத்ரா. சிவனை நோக்கி கடுந்தவம் இருந்ததால், அந்த தவத்தை மெச்சிய சிவன் இவர் முன் தோன்றி தெய்வீக கோடாரியை ராமபத்ராவுக்கு வழங்கினார். கோடாரியை கையில் ஏந்தியவர் என்பதால் அன்று முதல் அவருக்கு பரசுராமர் என்ற பெயர் நிலைத்து விட்டது.

கணவனே கண் கண்ட தெய்வம்

கணவனே கண் கண்ட தெய்வம்

பரசுராமரின் தாயார் ரேணுகாதேவி, தன் கணவரைத் தவிர உலகில் வேறு தெய்வம் கிடையாது என்று வாழும் கற்புக்கரசி. தினசரியும் ஆற்று மண்ணை எடுத்து குடம் செய்து தண்ணீர் கொண்டு வருவது வழக்கம். ஒருநாள் ரேணுகாவின் வாழ்க்கையில் விதி விளையாடியது. ஆற்று நீரில் தெரிந்த கந்தர்வனின் உருவத்தை பார்த்து மயங்கி மேலே பார்க்கவே கற்பு நெறி தவறி விட்டாள். அதன் பின்னர் ஆற்று மண்ணை குடமாக செய்ய எவ்வளவோ முயற்சி செய்தும் அது நடக்கவில்லை. இதனால் வெறும் கையுடன் ஆசிரமத்திற்கு திரும்பினார்.

முனிவரின் கோபம்

முனிவரின் கோபம்

மனைவியின் மனம் தடுமாறி விட்டது என்பதை முனிவர் ஜமதக்னி தனது ஞான திருஷ்டியால் உணர்ந்தார். மனைவியிடம் வருத்தப்பட்ட அவர், தனது நான்கு மகன்களை அழைத்து அம்மாவின் தலையை வெட்டச்சொன்னார். மூன்று பேரும் யோசிக்க, பரசுராமர் கொஞ்சம் கூட யோசிக்காமல் அம்மாவின் தலையை வெட்டி சாய்தார். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை உலகிற்கு தெரியவைத்தார்.

வரம் கேட்ட பரசுராமர்

வரம் கேட்ட பரசுராமர்

மகனின் செயல் கண்டு மகிழ்ந்த முனிவர், நீ என்னிடம் வரம் கேள் நீ கேட்டதை நான் தருகிறேன் என்று சொன்னார். அந்த வார்த்தையை தனக்கு சாதகமாக பயன்படுத்திய பரசுராமர், எனது தாய் எனக்கு மீண்டும் உயிருடன் வேண்டும் நீங்கள் உயிர்பித்து கொடுங்கள், அதே நேரத்தில் ஆற்றங்கரையில் நடந்தது, நீங்கள் கோபப்பட்டது நான் தலையை வெட்டியது எதுவுமே என் அம்மாவின் நினைவில் இருந்து அழித்து விடுங்கள் என்று சொன்னார்.

கேட்ட வரம் கொடுத்த முனிவர்

கேட்ட வரம் கொடுத்த முனிவர்

மகன் கேட்ட வரத்தை கொடுத்தார் முனிவர், எதுவுமே நடக்காதது போல உயிரோடு திரும்ப வந்தார் ரேணுகாதேவி. அப்பாவின் பேச்சை கேட்டு வெட்டி சாய்த்த மகனே, தனது அம்மாவின் உயிரை வரமாக கேட்டு பெற்றதோடு அவரது கற்பு நெறிக்கு எந்த பாதகமும் நடக்காமல் பார்த்துக்கொண்டார் என்கிறது புராண கதை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Parshuram Jayanti 2020: Date, Importance And Significance

Parasuram Jayanti is celebrated to honor the birth anniversary of Maharishi Parasuram, who is considered to be the 6th avatar of Lord Vishnu in the Hindu mythalogy. Parshuram Jayanti is an important festival of Hindus.