For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வைகுண்ட ஏகாதசி நாளில் பரமபதம் விளையாடுவதன் இரகசியம் உங்களுக்கு தெரியுமா?

|

வைகுண்ட ஏகாதசி நாளில் பரமபத விளையாட்டு விளையாடுவார்கள். அந்த விளையாட்டை இரவு முழுவதும் கண் விழித்து விளையாடுவார்கள். பாம்பும் ஏணியும் மாறி மாறி நம் வாழ்க்கையை பதம் பார்க்கும். கஷ்ட நஷ்டங்கள் இணைந்ததுதான் வாழ்க்கை என்பதை உணர்த்துவதுதான் பரமபதம். ஒன்று முதல் 132 கட்டங்கள் கொண்ட அந்த விளையாட்டு அட்டையில் நிறைய சின்ன பாம்புகள் மிகப்பெரிய பாம்பு ஒன்றும் 100வது கட்டத்தை தாண்டிய பிறகும் இருக்கும். அதையும் தாண்டி விட்டால் அப்புறமும் நம்மை கொத்தி கீழ் இறக்க தயாராக சில குட்டி பாம்புகள் இருக்கும். நாம் செய்த புண்ணியங்களின் மூலம் பாம்பின் வாயில் கடிபடாமல் தப்பித்து பரமபதத்தின் இறுதி நிலையான வைகுண்ட வாசலை அடையலாம் என்பதை உணர்த்துகிறது இந்த விளையாட்டு.

Paramapadam Game Famous In The Night Of Vaikunta Ekadasi

பரமபதம் அடைவது என்றால் பரிணாம வளர்ச்சியில் கீழான உயிரினங்களிலிருந்து அடுக்கடுக்காகச் சென்று மனித நிலைகள் பெற்று மனித நிலைகளிலிருந்து உயிரை ஒளியாக மாற்றி உச்சியிலே செல்லும் போது தான் அதாவது இந்த உடலை விட்டு விண்ணிலே சென்று ஒளியாக நிற்க கூடிய நிலையைப் பரமபதமாகக் காட்டி அதற்கு உகந்த நாளாக நாம் ஏகாதசியைக் காட்டினார்கள் ஞானிகள்.

MOST READ: சனிபகவானின் பரிபூர்ண ஆசீர்வாதம் பெற்ற ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

இந்த வாழ்க்கையில் மனிதனாக உருவெடுத்த பின்னர் மிருகத்திலிருந்து நாம் எப்படி மனித நிலைக்கு வந்தோம் மனிதனானபின் எப்படிப் பரமபதம் அடைவது என்று சிந்தித்துச் செயல்படும் நிலைக்குத்தான் பரமபதத்தின் படத்தைப் போட்டு அங்கே காட்டி இருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாயக்கட்டை

தாயக்கட்டை

இரண்டு பேர் இந்த விளையாட்டை விளையாடலாம். பரமபதம் விளையாட நமக்கு தாயக்கட்டை தேவை. காய் நகர்த்துவதற்கு தேவை. பரமபதத்தில் நாம் தாயத்தை உருட்டுகின்றோம். உருட்டிக் கொண்டு போனவுடனே முதலில் சிறு பாம்பு கடிக்கும். அது கடித்த பின் மீண்டும் கீழே கொண்டு போய் விட்டுவிடும். இதிலிருந்து தப்பித்து மேலே சென்றவுடன் அதை விடப் பெரிய பாம்பு கடித்தவுடன் மேலே இருந்து கீழே வந்து விடுகின்றோம்.

இப்படி அதையெல்லாம் தப்பித்து மேலே போகும் போது அதை விடப் பெரிய பாம்பு கடிக்கிறது. மீண்டும் திரும்பத் திரும்ப வந்து பல சுழற்சிகள் ஆகி நாம் மேலே போகின்றோம்.

அசுரர்கள்

அசுரர்கள்

இந்த உலகத்தில் நாம் எத்தனையோ அசுரர்களை தாண்டித்தான் வந்திருக்கிறோம். ராவணன், ஹிரண்யகசிபு, துரியோதனன், மகிஷாசூரன், துரியோதனன், கும்பகர்ணன், கர்கோடகன், சிசுபாலன், சூரபத்மன், மகிஷாசூரன், மகாபலி இப்படி அரசுரர்களின் பெயரை பாம்புக்கு வைத்திருப்பார்கள். இந்த அசுரர்களிடம் இருந்து தப்பிதது நாம் எப்படி ஏணிகளின் மூலம் ஏறி வைகுண்டத்தை அடையப்போகிறோம் என்பதுதான் இந்த விளையாட்டு உணர்த்தும் உண்மை.

கொத்தும் பாம்புகள்

கொத்தும் பாம்புகள்

தாயம் விழுவதே கஷ்டம் ஒருவழியாக தாயம் விழுந்து 1ஆம் கட்டத்தில் அமர்ந்து ஆறு, 12 என போட்டு ஏணியில் ஏறி மேலே வந்து விட்டோம். இன்னும் இரண்டே கட்டம் எல்லாவற்றையும் விடப் பெரிய பாம்பு அங்கே இருக்கின்றது. நம்முடைய பயமே நமக்கு எதிரி பயத்தால் உருட்டிய உடனே தாயம் விழுந்துவிடும். மீண்டும் பாம்பு கடிக்கும். அந்த விஷமான நிலைகள் பட்டவுடனே சர்ர்ர் என்று கீழே இங்கே கொண்டு வந்து நம்மை விட்டுவிடும். எனவே பயப்படாமல் இருந்தால் அந்த தாயக்கட்டை கூட நாம் சொல்வதைக் கேட்கும்.

சொர்க்கத்தை அடையலாம்

சொர்க்கத்தை அடையலாம்

வாழ்க்கையில் நடக்கும் இத்தகைய பேருண்மைகளை நமக்கு நினைவுபடுத்தும் நாள் தான் ஏகாதசி. பரமபதத்தை அடைய வேண்டும் என்றால் விருப்பு வெறுப்பு என்ற நிலை இல்லாதபடி ஒளியின் சரீரமாக நாம் பெற்று அந்த மெய் ஒளியின் எண்ணத்துடன் செல்வது தான் ஏகாதசி என்பது. இதோ சொர்க்கவாசல் திறந்திருக்கிறது. நாம் பெருமாளை கும்பிட்டு விட்டு புதிய வாழ்க்கையை தொடங்கலாம். என்னதான் நல்லது செய்தாலும் சில விஷ நேரங்களை நாம் கடந்துதான் ஆகவேண்டும் அப்படி கடக்கும் போது சில சறுக்கல்கள் வரத்தான் செய்யும் மீண்டும் நம்பிக்கையோடு முயற்சி செய்து விளையாடினால் நாம் கண்டிப்பாக சொர்க்கத்தை அடையலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Paramapadam Game Famous In The Night Of Vaikunta Ekadasi

The game is most popularly played by people trying to stay awake on the night of Vaikunta Ekadasi.Games of chance were played during festivities, while games of skill were associated with the cycle of life of an individual. For instance, games of chance such as Paramapadam and Thaayam encouraged people to reflect on life
Story first published: Monday, January 6, 2020, 10:08 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more