Latest Updates
-
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
இதுல உங்க உள்ளங்கை எப்படி-ன்னு சொல்லுங்க... உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்...
உள்ளங்கையின் வடிவம், நீளம் மற்றும் அகலத்தைக் கொண்டு, ஒருவரைப் பற்றிய பல விஷயங்களை அறிய முடியும். குறிப்பாக அவர்களின் குணாதிசயங்கள் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி கணிக்கலாம்.
ஒருவரது குணாதிசயம் மற்றும் எதிர்காலத்தைக் கணித்துக் கூற பல சாஸ்திரங்கள் உள்ளன. அதில் சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, உடலின் ஒவ்வொரு பாகங்களும் ஒருவரின் குணங்கள் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி கூறுவது போல, ஒருவரது உள்ளங்கையின் வடிவமும் அவரைப் பற்றிய பல விஷயங்களைக் கூறுகின்றன. ஒவ்வொருவருக்கும் உள்ளங்கையின் வடிவம் மற்றும் அளவு வேறுபட்டிருக்கும்.

அந்த வகையில், உள்ளங்கையின் வடிவம், நீளம் மற்றும் அகலத்தைக் கொண்டு, ஒருவரைப் பற்றிய பல விஷயங்களை அறிய முடியும். குறிப்பாக அவர்களின் குணாதிசயங்கள் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி கணிக்கலாம். இக்கட்டுரையில் பல வகையான உள்ளங்கையின் வடிவங்களையும், அது கூறும் விஷயங்களைப் பற்றியும் காண்போம்.

சிறிய உள்ளங்கை
சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, சிறிய உள்ளங்கையைக் கொண்டவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவார்கள். இவர்கள் தூய்மையான மனதைக் கொண்டவர்கள். பக்திமயமானவர்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, சிறிய உள்ளங்கையைக் கொண்டவர்கள் வாழ்க்கையின் அனைத்து இன்பங்களையும் பெறுவார்கள். இயற்கையில் மிகவும் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பவர்கள். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள விரும்புவார்கள்.

பெரிய உள்ளங்கை
பெரிய உள்ளங்கையைக் கொண்டவர்கள் குறைந்த நிதி திறன் கொண்டவர்கள். இத்தகையவர்கள் வாழ்க்கையில் போதுமான மகிழ்ச்சியைப் பெறுவார்கள். இவர்களுக்கு கவனக்குறைவுடன் இருப்பது பிடிக்காது. தொழில், அலுவலகம் போன்ற இடத்தில் ஒருவர் அலட்சியமாக இருந்தால், உடனே அவர் மீது கோபம் கொள்வார்கள்.

மென்மையான உள்ளங்கை
உள்ளங்கையில் அதிக சதையைக் கொண்டவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். மேலும் உள்ளகையில் அதிக சதை இருந்தால், அவர்களின் உள்ளங்கை மிகவும் மென்மையாக இருக்கும். முக்கியமாக மென்மையான உள்ளங்கையைக் கொண்டவர்கள் அதிக இன்பத்தைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

கடினமான உள்ளங்கை
சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, கடினமான உள்ளங்கையைக் கொண்டவர்கள் மகிழ்ச்சிக்காக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அதே வேளையில் இம்மாதிரியான உள்ளங்கையைக் கொண்டவர்கள் கடின உழைப்பாளிகளாகவும், நேர்மையானவர்களாகவும் கருதப்படுகிறார்கள். எந்த ஒரு வேலையையும் சரியான நேரத்தில் முடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதனால் இவர்கள் எப்போதுமே பிஸியாக இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications