Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
இந்த படத்துல உங்களுக்கு என்ன நிறம் தெரியுதுன்னு சொல்லுங்க பாக்கலாம்...
இங்கு கொடுக்கப்பட்டுள்ள கருப்பு மற்றும் வெள்ளை நிற வட்டம் கொண்ட படத்தின் மையப் பகுதியை கூர்ந்து பாருங்கள். அப்படி தொடர்ந்து பார்க்கும் போது, ஒரு நிறம் தெரியும். உங்களுக்கு என்ன நிறம் தெரிகிறது என்று சொல்லுங்கள்.
தற்போது இணையத்தில் மனதைக் கவரும் பல்வேறு ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த மாதிரியான படங்களானது ஒருவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், சுவாரஸ்யமானதாக இருக்கும். ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களுள் பல ஒருவரது குணாதிசயங்களை வெளிப்படுத்தம். அதேப் போல் ஒருவரது நுண்ணறிவின் அளவு/எவ்வளவு புத்திசாலி என்பதைப் பற்றியும் கூறும் என்பது தெரியுமா?

நம்பமுடியவில்லையா? இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிக்கல் இல்யூஷன் சோதனையை முயற்சித்துப் பாருங்கள். இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் சோதனை ஒருவர் எப்படிப்பட்ட புத்திசாலி என்பதை தெரிவிக்கும். எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இங்கு கொடுக்கப்பட்டுள்ள கருப்பு மற்றும் வெள்ளை நிற வட்டம் கொண்ட படத்தின் மையப் பகுதியை கூர்ந்து பாருங்கள். அப்படி தொடர்ந்து பார்க்கும் போது, ஒரு நிறம் தெரியும். உங்களுக்கு என்ன நிறம் தெரிகிறது என்று சொல்லுங்கள். நீங்கள் எவ்வளவு பெரிய புத்திசாலி என்பதை நாங்கள் சொல்கிறோம். உங்களுக்கு சிவப்பு, நீலம், பச்சை அல்லது மஞ்சள் தெரிகிறதா?

சிவப்பு
உங்களுக்கு சிவப்பு நிறம் தெரிகிறது என்றால், நீங்கள் பிரகாசமான மூளையைக் கொண்டவர்கள் மற்றும் எதையாவது உருவாக்குவதில் தங்கள் பலத்தை மையமாக கொண்டிருப்பீர்கள். இந்த நிறம் தெரிபவர்கள் 150 மற்றும் 180 ஹெர்ட்ஸ் வரம்பில் மூளை அலைகளின் அதிர்வெண்ணைப் பயன்படுத்துகிறார்களாம்.

நீலம்
உங்களுக்கு நீல நிறம் தெரிகிறது என்றால், நீங்கள் மெதுவாகவும், நிதானமாகவும் இருந்தால் வெற்றி பெறலாம் என்ற கொள்கையில் வாழ்பவர்கள் என்று அர்த்தம். இத்தகையவர்கள் 100 மற்றும் 120 ஹெர்ட்ஸ் வரம்பில் மூளை அலைகளின் அதிர்வெண்ணைப் பயன்படுத்துவார்கள். மேலும் ஒரு விஷயத்தைப் பற்றி தெளிவான மனநிலையைக் கொண்டிருப்பார்கள். அதோடு வாழ்க்கையை முழுமையாக புரிந்து வாழ்வார்கள்.

பச்சை
பச்சை நிறம் உங்களுக்கு தெரிகிறதா? அப்படியானால் நீங்கள் மிகவும் திறமைசாலி. இதுவே உங்களை பிரகாசமாக மாற்றுகிறது. இந்த நிறம் தெரிபவர்கள் பெரும்பாலும் சிறந்த தலைவர்களாக இருப்பவர். ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள அதீத ஆர்வத்தைக் கொண்டவர்கள் மற்றும் திறந்த மனதுடையவர். புதிதாக ஒன்றை முயற்சிக்க விரும்புவீர்கள்.

மஞ்சள்
மஞ்சள் நிறம் உங்களுக்கு தெரிகிறது என்றால், நீங்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பீர்கள். ஆக்கப்பூர்வமான மனதைக் கொண்டிருப்பீர்கள் மற்றும் நொடியில் எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக கவனிக்கக்கூடியவர். புதிய சவால்களையும், அனுபவங்களையும் பெற விரும்புவீர்கள்.



Click it and Unblock the Notifications