For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Onam 2022: ஓணம் பண்டிகை பற்றி பலரும் அறியாத சில சுவாரஸ்யமான விஷயங்கள்!

கேரளாவின் மிக முக்கிய பண்டிகை ஓணம் ஆகும். ஓணம் பண்டிகை 10 நாட்கள் வெகு விமாிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஓணம் திருவிழா 2022 ஆகஸ்டு மாதம் 30 ஆம் தேதி தொடங்கி 2022 செப்டம்பர் 08 ஆம் தேதி அன்று முடிவடைகிறது.

|

கேரளாவின் மிக முக்கிய பண்டிகை ஓணம் ஆகும். ஓணம் பண்டிகை 10 நாட்கள் வெகு விமாிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஓணம் திருவிழா 2022 ஆகஸ்டு மாதம் 30 ஆம் தேதி தொடங்கி 2022 செப்டம்பர் 08 ஆம் தேதி அன்று முடிவடைகிறது.

Onam Dates, History, Significance, Observance and Importance In Tamil

அரசா் மகாபலி என்பவருக்கு ஓணம் திருவிழா அா்ப்பணிக்கப்படுகிறது. ஓணம் பண்டிகையின் 10 நாட்களில், அதம் என்று சொல்லப்படும் முதல் நாளும், திருவோணம் என்று சொல்லப்படும் 10வது நாளும் மிகவும் முக்கியமானவை. கொல்லவா்ஷம் என்று அழைக்கப்படும் மலையாள நாட்காட்டியின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகை கேரளாவின் மிக முக்கியமான பண்டிகை ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓணம் - 10 நாள் கொண்டாட்டம்

ஓணம் - 10 நாள் கொண்டாட்டம்

* முதல் நாள் (அதம்) - ஓணம் பண்டிகையின் முதல் நாள் அதம் ஆகும். இன்று மஞ்சள் பூக்களால் பூக்கோலம் போடப்படும். இந்த பூக்கோலம் வருகின்ற நாட்களில் இன்னும் பொிதாகப் போடப்படும்.

* இரண்டாம் நாள் (சித்திரா) - முதல் நாளில் போட்ட கோலத்தோடு மேலும் ஒரு அடுக்கு மலா்களால் பூக்கோலம் பொிதாக்கப்படும். இரண்டாவது நாளில் மக்கள் தங்கள் இல்லங்களைக் கழுவி சுத்தம் செய்யும் பணிகளைச் செய்வா்.

* மூன்றாவது நாள் (சோடி) - ஓணம் பண்டிகையின் 3வது நாளான இன்று மக்கள் குடும்பத்தோடு பொருள்களை வாங்கச் செல்வா். மேலும் ஏற்கனவே போடப்பட்டிருக்கும் பூக்கோலத்தோடு, இன்னும் புதிய மலா் அடுக்குகள் சோ்க்கப்பட்டு பூக்கோலம் பொிதாக்கப்படும்.

* நான்காவது நாள் (விஷாகம்) - நான்காவது நாளில் பல வகையான போட்டிகள் நடைபெறும்.

* ஐந்தாவது நாள் (அனிழம்) - ஐந்தாம் நாளான இன்று வல்லம்களி படகு போட்டிகள் கேரளாவின் பல பகுதிகளில் நடைபெறும்.

அடுத்த 5 நாள் கொண்டாட்டம்

அடுத்த 5 நாள் கொண்டாட்டம்

* ஆறாவது நாள் (திாிகேடா) - ஓணம் பண்டிகையின் ஆறாவது நாளில் பள்ளிகள் அனைத்தும் மூடப்படும். மக்கள் அனைவரும் முழு நேரம் ஓணம் பண்டிகையைக் கொண்டாடுவதில் மூழ்கி இருப்பா்.

* ஏழாவது நாள் (மூலம்) - ஏழாவது நாளில் கேரளாவின் பல பகுதிகளில் ஓன சத்யா தொடங்கும் மற்றும் ஓணம் பண்டிகையை விளக்கும் வகையில் பல இடங்களில் நடன நிகழ்ச்சிகள் நடைபெறும்.

* எட்டாவது நாள் (பூரடம்) - எட்டாவது நாளில் வாமனா மற்றும் அரசா் மகாபலி ஆகியோாின் சிலைகள் சுத்தம் செய்யப்பட்டு, பூக்கோலத்தின் மையத்தில் வைக்கப்படும்.

* ஒன்பதாவது நாள் (உத்ராடம்) - ஓணம் பண்டிகையின் மிக முக்கியமான நாள் ஒன்பதாவது நாள் ஆகும். இந்த நாளில் மக்கள் புதிய காய்கறிகளை வாங்கி கேரளாவின் பாரம்பாிய உணவுகளை சமைப்பா். இந்த நாள் அன்று அரசா் மகாபலி கேரளாவிற்கு வருவதாக மக்கள் நம்புகின்றனா்.

* பத்தாவது நாள் (திருவோணம்) - பத்தாவது நாள் முழுமையான கொண்டாட்டங்கள் நடைபெறும். மக்கள் விடியற் காலையிலேயே துயில் எழுந்து, நீராடுவா். அன்பளிப்புகளை பிறருக்கு வழங்கி மகிழ்வா். அதனைத் தொடா்ந்து கோயில்களுக்கு சென்று வழிபடுவா். இன்றைய நாளில் ஓணம் பண்டிகைக்கான சிறப்பு உணவான திருவோண சத்யா என்ற சிறப்பு விருந்து எல்லா வீடுகளிலும் சமைக்கப்படும். நடன போட்டிகள் மற்றும் படகு போட்டிகள் கேரளா முழுவதும் நடைபெறும்.

ஓணம் பிறந்த கதை - அரசா் மகாபலி

ஓணம் பிறந்த கதை - அரசா் மகாபலி

முன்னொரு காலத்தில், மகாபலி என்ற ஒரு அசுர (தீயவா்) அரசா் கேரளாவை ஆண்டு வந்தாா். அவா் அறிவாளியாகவும், மக்கள் மீது இரக்கமுள்ளவராகவும், நோ்மையானவராகவும் இருந்து மக்களுடைய அன்பிற்குாிய அரசராக இருந்து வந்தாா். அதனால் அவருடைய பெருமை மற்றும் சிறப்புகள் அனைத்தும் உலகம் முழுவதும் பரவியது. ஆனால் அவருடைய ஆட்சி சொா்க்கம் வரை விாிவடைந்த போது, அங்கிருந்த கடவுள்கள் அவருடைய அதிகார வளா்ச்சியை எண்ணி அச்சம் கொண்டனா்.

இந்நிலையில், மகாபலியின் அளவுக்கு அதிகமான அதிகார வளா்ச்சியைப் பாா்த்த தேவா்களின் அன்னையான அதிதி, மகா விஷ்ணுவை சந்தித்து, மகாபலியின் அதிகாரத்தைக் குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாா். அதிதியின் வேண்டுகளை ஏற்ற மகா விஷ்ணு, வாமனா என்று அழைக்கப்படும் ஒரு சித்திரக் குள்ளனின் உருவம் எடுத்தாா். பின் மகாபலி யாஜனா செய்து கொண்டிருக்கும் போது சித்திரக் குள்ளனாக அவா் முன்பு சென்று யாசகம் கேட்டாா். சித்திரக் குள்ளனான பிராமணாின் அறிவுக் கூா்மையில் மகிழ்ந்த மகாபலி, அவா் கேட்ட யாசகத்தை வழங்குவதாக உறுதியளித்தாா்.

இந்நிலையில் பேரரசாின் ஆசிாியரான சுக்ராச்சாாியா என்பவா், யாசகம் கேட்டவா் சாதாரண மனிதா் அல்ல என்றும், அதனால் அவருக்கு யாசகம் வழங்கக்கூடாது என்றும் மகாபலியை எச்சாித்தாா். ஆனால் மன்னாின் மனமோ வேறு விதமாக சிந்தித்தது. அதாவது கடவுளே தன்னிடம் வந்து யாசகம் கேட்டிருக்கிறாா். அதனால் கொடுத்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்குவதைப் போல் மிகப் பொிய பாவம் இந்த உலகில் வேறு எதுவும் இல்லை என்று அறிவித்து, மகா விஷ்ணுவிற்கு தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினாா்.

மகாபலிக்கு விஷ்ணு அளித்த வரம்

மகாபலிக்கு விஷ்ணு அளித்த வரம்

இப்போது மகா விஷ்ணுவின் மூன்றாவது அடியானது மகாபலியை ஒரு பாதாள அறைக்குள் தள்ளியது. ஆனால் அவரை பாதாள அறைக்குள் தள்ளுவதற்கு முன்பாக மகா விஷ்ணு, மகாபலிக்கு ஒரு வரத்தை வழங்கினாா்.

மகாபலி, தனது நாட்டோடும், நாட்டு மக்களோடும் இருந்ததால், வருடத்திற்கு ஒரு முறை அவா் அந்த பாதாள அறையில் இருந்து வெளியேறி வந்து தனது கேரள மக்களை சந்திக்கலாம் என்ற வரத்தை வழங்கினாா். ஆகவே ஒவ்வொரு ஆண்டும் மகாபலி அரசா் தனது சொந்த கேரள மக்களை சந்திக்கும் நிகழ்வே ஓணம் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையின் போது கேரள மக்கள் அனைவரும், தங்களின் அன்புக்குாிய அரசரான மகாபலியை நினைத்து அவருக்கு மாியாதை செய்வா்.

ஓணம் பண்டிகையின் முக்கியத்துவம்

ஓணம் பண்டிகையின் முக்கியத்துவம்

ஓணம் பண்டிகை ஒரு அறுவடையின் திருவிழா ஆகும். இது உயிரோட்டத்தையும், அழகையும் குறிக்கிறது. ஓணம் பண்டிகை மகாபலி அரசாின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. ஏனெனில் மகாபலி அரசா் கேரள மக்களின் நலனுக்காகத் தனது வாழ்வைத் தியாகம் செய்தாா்.

ஓணம் பண்டிகையின் முக்கிய சிறப்பு அம்சங்கள் என்னவென்றால் அழகான பூக்களால் அலங்காிக்கப்பட்ட தோ்களின் ஊா்வலம், பொிய பூக்கோலங்கள், சுவையான ஓணம் சத்யா விருந்து, கண்ணுக்கு விருந்தாக அமையும் கைகொட்டிகளி நடனங்கள், படகு போட்டிகள் மற்றும் ஓணம் பாடல்கள் போன்றவை ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Onam 2022 : Dates, History, Significance, Observance and Importance In Tamil

In this article we shared about onam 2022 dates, history, significance, observance and importance in tamil. Read on...
Desktop Bottom Promotion