Latest Updates
-
சனிபகவான்-செவ்வாய் அரிய இணைப்பால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலுக்கு ஏற்ற குளுகுளு வெள்ளரிக்காய் சட்னி ரெசிபி..இப்படி செஞ்சு பாருங்க..இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும் -
Tamil Nadu Elections 2026: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள டாப் 5 தொகுதிகள் என்னென்ன தெரியுமா? -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகத்தால் இந்த 3 ராசிகளுக்கு புது சொத்துக்கள் குவியப்போகுதாம்...! -
வீட்ல காய்கறி எதுவும் இல்லையா? டக்குனு இந்த பூண்டு மிளகு சாதத்தை செய்யுங்க... ஆரோக்கியமா, சுவையா இருக்கும்...! -
30 ஆண்டுக்கு பின் நிகழும் சனி-சுக்கிரன் சேர்க்கை: இந்த 3 ராசிகளை பணமும், புகழும் தேடிவரப்போகுதாம்...! -
கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி... இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க... சாதத்துக்கு பெஸ்ட் சைடிஷ் இதுதான்...! -
ராகி பூரியும்.. வெங்காய மசாலாவும்.. - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்..
October Horoscope 2022: அக்டோபர் மாசம் 12 ராசிக்கும் எப்படி இருக்கப் போகுது தெரியுமா?
உங்களுக்கு 2022 ஆம் ஆண்டின் பத்தாவது மாதமான அக்டோபர் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 2022 அக்டோபர் மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டின் பத்தாவது மாதத்தில் நுழைய உள்ளோம். கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து ஒவ்வொரு மாதமும் பலன்கள் வேறுபடும். அந்த வகையில் அக்டோபர் மாதம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது. உங்களுக்கு 2022 ஆம் ஆண்டின் பத்தாவது மாதமான அக்டோபர் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் அக்டோபர் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என அக்டோபர் மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! அக்டோபர் மாதம் உங்களுக்கு பல அம்சங்களில் சாதகமானதாக இருக்கும். மாதத்தின் தொடக்கத்தில் 6 ஆவது வீட்டில் 3 கிரகங்கள் இணைந்திருப்பதால், ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும். அதே வேளையில், சனி பகவான் 10 ஆவது வீட்டில் இருப்பதால், தொழிலில் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். காதலிப்பவர்களுக்கு இது நல்ல மாதமாக இருக்கும். ஆனால் திருமணமானவர்கள் துணையுடன் வழக்கத்தை விட அதிகமாக வாக்குவாதம் செய்வார்கள். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் சூழ்நிலைகள் மோசமடையக்கூடும். மாதத்தின் இரண்டாம் பாதியில் செவ்வாய் மூன்றாவது வீட்டிற்கு செல்வதால், மாணவர்களுக்கு சிறந்த காலமாக இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் அற்புதமாக இருக்கும். மாத தொடக்கத்தில் வாழ்க்கையின் வெவ்வேறு பகுதிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பணியிடத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாக வாய்ப்புள்ளது. ஆனால் ராகுவால் இம்மாதத்தில் சற்று மன அழுத்தத்தை உணர்வீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் சிறந்து விளங்குவார்கள். காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆரோக்கியத்தை சற்று கவனித்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் மருத்துவரை தவறாமல் அணுகுங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இம்மாதத்தில் குரு 10 ஆவது வீட்டில் இருப்பதோடு, சனி 10 ஆவது வீட்டை பார்ப்பதால், வெற்றி அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மாதத்தில் முதல் வாரத்தில் ராகுவும், சந்திரனும் 11 ஆவது வீட்டில் சேர்ந்திருப்பதால், மாதத்தின் தொடக்கம் அவ்வளவு நன்றாக இருக்காது. காதலில் தவறான புரிதலால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மாதத்தின் இரண்டாம் பாதியில் சூரியனும், சுக்கிரனும் 5 ஆவது வீட்டில் இருப்பதால், அது வசதியான சூழ்நிலையை உருவாக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் கலவையான பலன்களைத் தரும். மாதத்தின் தொடக்கத்தில் 10 ஆவது வீட்டில் ராகுவும், சந்திரனும் இணைந்திருப்பதால், பணியிடத்தில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆனால் இரண்டாம் பாதியில் 4 ஆவது வீட்டில் சூரியனும், சுக்கிரனும் இணைந்திருப்பதால், நல்ல வேலை கிடைக்கும் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். காதல் வாழ்க்கை மற்றும் உறவுகளில் கலவையான பலன்கள் கிடைக்கும். மாதத்தில் முதல் பாதியில் உறவுகள் நன்றாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் திருமணமான தம்பதிகளிடையே சில மோதல்கள் ஏற்படும். முக்கியமாக காதலிப்பவர்களுக்கு சாதகமாக இருக்காது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் நிறைய ஆதரவைத் தரும் மாதமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நிதி ரீதியாக, முன்பை விட வலுவாக இருக்கும். இம்மாதத்தில் குடும்பத்துடன் வீட்டில் சௌகரியமாக இருப்பீர்கள். இரண்டாவது வீட்டில் சூரியனும், புதனும் இணைந்திருப்பதால், குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி ரீதியாக சாதகமான மாதமாக இருக்கும். காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இணக்கமாகவும் இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதமானது முந்தைய மாதங்களை விட வித்தியாசமாக இருக்கும். மாதத்தின் முதல் வாரத்தில் சிறிது நிதி பிரச்சனையால் சிரமப்பட வேண்டியிருக்கும். மாணவர்கள் சற்று அவதிப்படுவார்கள். திருமண மற்றும் காதல் வாழ்க்கையில், கலவையான பலன்களை அனுபவிக்கக்கூடும். மாதத்தின் முதல் பாதியில் புதனும், சூரியனும் லக்னத்தில் இணைந்திருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகாமக இருக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இம்மாதத்தில் முதல் பாதி சிறந்ததாக இருக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் கலவையான பலன்களைத் தரும். இந்த ராசிக்காரர்கள் எதிர்பார்த்ததை விட இம்மாதம் அற்புதமாக இருக்கும். சந்திரனும், ராகுவும் 7 ஆவது வீட்டில் இணைவதால், வியாபாரம் மற்றும் பணியிடத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சனி பகவான் 10 ஆவது வீட்டைப் பார்ப்பதால், வேலை மற்றும் தொழில் ரீதியாக நற்பலன்கள் கிடைக்கும். மாத தொடக்கத்தில் 12 ஆவது வீட்டில் புதனும், சூரியனும் இணைந்திருப்பதால், வெளிநாட்டில் இருந்து சாதகமான பலன்கள் கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை சுமாராக இருக்கும். இம்மாதத்தில் உங்களின் பலவீனத்தை புரிந்து நடந்து கொண்டால், உறவுகள் சுமூகமாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் நிதி நிலைமை நன்றாக இருக்கும். ஆனால் இரண்டாம் பாதியில் அதிக செலவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதுவும் அக்டோபர் 18 ஆம் தேதிக்கு பின் சூரியனும், சுக்கிரனும் இணைவதால் நிதி நெருக்கடி ஏற்படலாம். காதல் மற்றும் திருமண உறவுகளில் உள்ள சிக்கலான பிரச்சனைகளை தீர்க்க முயலும் போது கர்வம் கொள்ளாமல் இருங்கள். திருமணமானவர்கள் நல்ல புரிதலுடன் இருந்தால் திருமண வாழ்க்கை அன்பானதாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் சாதகமானதாக இருக்கும். மாத தொடக்கத்தில்10 ஆவது வீட்டில் சூரியனும், புதனும் இணைந்து புதாதித்ய யோகம் உருவாவதால், பணி வாழ்க்கை அற்புதமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணை தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்ல, தொழில் ரீதியாகவும் உதவியாக இருப்பார்கள். மாதத்தின் நடுப்பகுதியில், சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் 11 ஆவது வீட்டிற்கு செல்வதால், இந்த ராசிக்காரர்கள் தங்கள் துணையின் உதவியால் வருமானத்தில் அதிகரிப்பைக் காண்பார்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் சாதகமான மாதமாக இருக்கும். சனி இந்த ராசிக்காரர்களின் முதல் வீட்டில் வக்ர நிலையில் இருப்பதால், மாதத்தின் தொடக்கம் சாதகமாக இருக்கும். குடும்பம் மற்றும் நிதி நிலை சாதகமாக இருக்கும். ஆனால் தொழில் மற்றும் ஆரோக்கியம் பற்றிய சில கவலைகள் இருக்கும். காதல் மற்றும் திருமண உறவுகளில் கலவையான பலன்கள் கிடைக்கும். குறிப்பாக அக்டோபர் 20 ஆம் தேதிக்கு பிறகு எந்த ஒரு முக்கிய முடிவை எடுப்பதாக இருந்தாலும், நிதானமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! அக்டோபர் மாதமானது தொழில் மற்றும் தனிப்பட்ட இலக்குகளில் கவனம் செலுத்த சிறந்த மாதமாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். 10 ஆவது வீட்டில் செவ்வாய் உள்ளார். எனவே தொழில் வாழ்க்கை சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் இருக்கும். 8 ஆவது வீட்டில் சூரியனும், புதனும் இணைந்திருப்பதால், வெளிநாட்டு வியாபாரம் அல்லது வெளிநாட்டில் படிக்க விரும்புவோர் நற்செய்தியைப் பெறுவார்கள். காதல் உறவு மற்றும் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களே! அக்டோபர் மாதத்தில் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். வேலை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். செலவுகளிலும் கூடுதல் கவனம் தேவை. குரு முதல் வீட்டில் வக்ரமாக இருப்பதால், கடமைகள் மற்றும் பொறுப்புகளை உங்களுக்கு புரிய வைப்பார். மாத தொடக்கத்தில் குடும்ப உறுப்பினர்களிடையே சில பிரச்சனைகள் குழப்பத்தை ஏற்படுத்தலாம். மாதத்தின் இரண்டாம் பாதியில் சமூகத்தில் உங்கள் இமேஜ் மேம்படும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உங்கள் பேச்சைக் கேட்பார்கள். செலவுகளை செய்யும் போது பார்த்து செலவு செய்ய வேண்டும். ஆனால் அக்டோபர் 17 ஆம் தேதிக்கு பின், எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











