Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சனி பகவான் அருளால் அக்டோபர் மாசம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமான மாசமா இருக்கப் போகுது...
அக்டோபர் மாதம் வந்துவிட்டது. இந்த மாதம் பல ராசிகளுக்கு சந்தோஷத்தைத் தரப்போகிறது. அக்டோபர் மாதத்தில், சனி பகவான் நகரவிருக்கிறார். அதுவும் 2021 அக்டோபர் 11 ஆம் தேதி சனி பகவான் தனது சொந்த ராசியான மகர ராசியில் நகர்கிறார்.
அக்டோபர் மாதம் வந்துவிட்டது. இந்த மாதம் பல ராசிகளுக்கு சந்தோஷத்தைத் தரப்போகிறது. அக்டோபர் மாதத்தில், சனி பகவான் நகரவிருக்கிறார். அதுவும் 2021 அக்டோபர் 11 ஆம் தேதி சனி பகவான் தனது சொந்த ராசியான மகர ராசியில் நகர்கிறார். இது அனைத்து ராசிகளிலும் சாதகமான விளைவை ஏற்படுத்தவுள்ளது.

பொதுவாக சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை வருடங்கள் ஆகும். ஏனெனில் கிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். ஜோதிடத்தின் படி, நேர்பாதையில் நகர்வதை மார்கி என்று அழைக்கப்படுகிறது. ராசியின் அதிபதி சொந்த ராசியின் பாதையில் நகர்ந்தால் துன்ப காலம் நீங்கும். குறிப்பாக சனியால் துன்பத்தில் இருந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான நேரமாக மாறும். இப்போது அக்டோபர் மாதத்தில் சனி பகவான் சொந்த ராசியின் பாதையில் நகரும் போது எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் அற்புதமாக இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
சனி பகவான் தனது சொந்த ராசியின் பாதையில் நகர ஆரம்பித்த பின், தொழிலில் இருந்த ஏற்ற இறக்கங்கள் நீங்கும். பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவதால் வெற்றி அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் நீங்கள் புதிய தொழிலைத் தொடங்க விரும்பினால், ஜோதிடரின் ஆலோசனையைப் பெற்று நல்ல நேரத்தில் தொடங்குங்கள். இதனால் அதிலிருந்து பல நன்மைகளைப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே உங்களின் அந்தஸ்து அதிகரிக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த அக்டோபர் மாதத்தில் நிறைய நன்மைகளைப் பெறப் போகிறார்கள். தொழிலில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். முழு மனதுடன் செய்யும் எந்த ஒரு வேலையிலும் நிச்சயமாக வெற்றியைப் பெறுவீர்கள். இந்த முறை மாணவர்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கப் போகிறது. இது தவிர, ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளும் நீங்கும். உங்களுக்கு நாள்பட்ட நோய் ஏதேனும் இருந்தால், அது தற்போது குணமாகும். பாதியில் நின்ற வேலை முடிவடையும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இந்த மாதத்தில் குடும்ப உறவுகளில் இனிமையான உணர்வை அனுபவிப்பார்கள். பரஸ்பர உறவுகள் சிறப்பாக இருக்கும். வாகனம் அல்லது சொத்து வாங்குவதற்கான அறிகுறிகள் உள்ளன. குறிப்பாக குடும்பத்திற்கும் வேலைக்கும் இடையே நல்ல சமநிலையை ஏற்படுத்த முடியும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இந்த மாதத்தில் சில நல்ல செய்தியைப் பெறுவதன் மூலம் சந்தோஷமடைவார்கள். குடும்பத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். உங்கள் உடன்பிறப்புகள் வெற்றியைப் பெறுவார்கள். இது உங்களுக்கு சந்தோஷத்தை தரும் மற்றும் உங்கள் மனதில் உள்ள சுமையைக் குறைக்கும். வணிகர்களுக்கு இது நல்ல காலம். அவர்கள் தங்கள் வியாபாரத்தை உயர்த்துவார்கள். இதுவரை நீங்கள் பிரச்சனையை எதிர்கொண்டால், இனி அது தீரும்.

மகரம்
சனி பகவான் தனது சொந்த ராசியில் பயணிப்பதால், மகர ராசிக்காரர்களுக்கு இது மிகவும் நல்ல காலமாக இருக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் செல்வத்தை அதிகம் குவிக்க முடியும். ஆரோக்கியம் மேம்படும். சனி பகவான் உங்கள் இலக்கை அடைய உதவுவார். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். இதுவரை இருந்த மன அழுத்தம் குறைந்து, இனிமேல் நிம்மதியாக இருப்பீர்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். உங்களின் செயல்கள் சுற்றியுள்ளவர்களை ஈர்க்கும் மற்றும் இது உங்கள் புகழை அதிகரிக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். இருப்பினும், பண பரிவர்த்தனை விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications