இந்த தேதியில பிறந்தவங்களுக்கு 2022-ல் பணம் கூரைய பிச்சிகிட்டு கொட்டுமாம்... நீங்க பிறந்த தேதி என்ன?

மது அருந்துவதையும் அசைவ உணவு சாப்பிடுவதையும் தவிர்க்கவும். உங்கள் இரத்த அழுத்தத்தை தொடர்ந்து பரிசோதித்துக் கொள்ளுங்கள். இந்த ஆண்டு நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தையும் உணவையும் சமநிலைப்படுத்த பச்சைக்

வரும் 2022 புதிய ஆண்டில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் செல்வத்துடன் செழிப்பாக இருக்கதான் அனைவரும் விரும்புவார்கள். கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மக்களின் 2 வருட வாழ்க்கை மொத்தமாக மாற்றிவிட்டது. தற்போது எல்லாம் சகஜமாகி வருகிறது. 2022ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் சில நாட்கள் இருப்பதால், நம் நம்பிக்கைகள் அனைத்தும் உயர்ந்துகொண்டே இருக்கின்றன. வரப்போகும் ஆண்டு நன்றாக இருக்குமா? நமது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை சிறப்பாக அமையுமா? அல்லது பெரும் பிரச்சனைகள் ஏதும் வருமா? ஆரோக்கியத்தில் சிக்கல் ஏற்படுமா? குடும்ப வாழ்க்கை நிம்மதியாக இருக்குமா? என்று ஆயிரம் கேள்விகள் உங்களுக்குள் இருக்கும்.

numerologist decodes the New Year 2022 according birth date

வரும் ஆண்டு எப்படி இருக்கும் என தெரிந்துகொள்ள நியூமராலஜி(எண் ஜோதிடம்) உங்களுக்கு உதவும். உங்கள் நட்சத்திரங்களுக்கான வரவிருக்கும் ஆண்டிற்கான சில கணிப்புகள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம். உங்கள் பிறந்த நாளின் படி, வரப்போகும் ஆண்டு எப்படி இருக்கும் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறந்த நாட்கள் 1, 10, 19, 28

பிறந்த நாட்கள் 1, 10, 19, 28

மற்றவர்களின் உதவியைப் பெற நீங்கள் வெட்கப்பட வேண்டாம். ஈகோ மற்றும் அணுகுமுறை உங்களைச் சிறப்பாகப் பெற அனுமதிக்காதீர்கள். இந்த ஆண்டு ஜவுளி மற்றும் ஃபேஷன் தொடர்பான வர்த்தகத்திற்கு நல்லதாக இருக்கும். முதலீடுகளில் நன்கு கவனம் செலுத்துங்கள். உயர் இரத்த அழுத்தம் மற்றும் கண் பிரச்சினைகள் போன்ற பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.

பிறந்த நாட்கள் 2, 11, 20, 29

பிறந்த நாட்கள் 2, 11, 20, 29

பிறர் சொல்வதைக் கேட்பது உங்களுக்குப் பயனளிக்கும். உங்கள் மீது அதிக நம்பிக்கை வையுங்கள். கடினமாக உழைக்கவும், உங்களையும் மற்றவர்களையும் சந்தேகிக்காதீர்கள். சரியான தூக்கத்தைப் பெறுங்கள் மற்றும் ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். உங்கள் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த பிராணயாமா செய்வது ஒரு சிறந்த படியாகும்.

பிறந்த நாட்கள் 3, 12, 21, 30

பிறந்த நாட்கள் 3, 12, 21, 30

உங்கள் முழு கவனத்தையும் வேலையில் செலுத்துங்கள். உங்கள் குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினரை நீங்கள் வரவேற்கலாம். உங்களுக்காக முடிவுகளை எடுக்க உங்கள் ஈகோவை அனுமதிப்பதைத் தவிர்க்கவும். உங்கள் முயற்சிகள் கல்வி மற்றும் ஆலோசனை முன்னணியில் பலனளிக்கும். தினமும் உலர் பழங்களை சாப்பிடுங்கள் மற்றும் உங்கள் தொண்டைக்கு சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

பிறந்த நாட்கள் 4, 13, 22, 31

பிறந்த நாட்கள் 4, 13, 22, 31

மது அருந்துவதையும் அசைவ உணவு சாப்பிடுவதையும் தவிர்க்கவும். உங்கள் இரத்த அழுத்தத்தை தொடர்ந்து பரிசோதித்துக் கொள்ளுங்கள். இந்த ஆண்டு நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தையும் உணவையும் சமநிலைப்படுத்த பச்சைக் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள். உங்களை விட இளையவர்களுக்கும் உங்களை விட அனுபவம் குறைந்தவர்களுக்கும் ஆதரவளிக்கவும். புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் உடன்பாடுகள் ஏற்படுவதற்கு ஏற்றதாக இருக்கும்.

பிறந்த நாட்கள் 5, 14, 23

பிறந்த நாட்கள் 5, 14, 23

புதிய நட்பு வட்டாரங்களை அமைப்பது சற்று சிக்கலை ஏற்படுத்தும். 2022 உங்கள் உறவுகளுக்கு நல்ல ஆண்டாகும். புதன்கிழமைகளில் பச்சைக் காய்கறிகளை அதிகம் உட்கொள்ளுங்கள். வசதியற்றவர்களுக்கு உணவு தானம் செய்யுங்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

பிறந்த நாட்கள் 6, 15, 24

பிறந்த நாட்கள் 6, 15, 24

2022 புதிய ஆண்டு உங்கள் தொழில் வாழ்க்கைக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். உங்கள் வருமானத்தை எப்படி செலவிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். நீங்கள் சம்பாதிக்கக்கூடியதை விட அதிகமாக செலவு செய்யாதீர்கள். உங்கள் காதல் வாழ்க்கை உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரலாம் மற்றும் உங்கள் வாழ்க்கை நன்றாக செல்லும். உங்கள் துணைக்கு விஸ்வாசமாக இருங்கள் மற்றும் உங்கள் உணர்ச்சிகளால் நிரம்பி வழியாதீர்கள். அதிகப்படியான சர்க்கரை மற்றும் ஜங்க் உணவுகளை தவிர்க்கவும்.

பிறந்த நாட்கள் 7, 16, 25

பிறந்த நாட்கள் 7, 16, 25

புதிய மக்களுடன் இணைவதற்கான வாய்ப்புகளைப் பெறலாம். ஆராய்ச்சி அடிப்படையிலான தொழில் உள்ளவர்களுக்கு, இந்த ஆண்டு முன்னேற்றம் அதிகமாக இருக்கும். மே மாதத்திற்குப் பிறகு குறிப்பிடத்தக்க ஒட்டுமொத்த வளர்ச்சியை நீங்கள் கவனிக்கலாம். இரைப்பை பிரச்சனைகளில் கவனம் செலுத்துங்கள். புதிய பழச்சாறுகளை உட்கொள்வது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பிறந்த நாட்கள் 8, 17, 26

பிறந்த நாட்கள் 8, 17, 26

புதிய ஆண்டில் நீங்க நினைத்தது விஷயங்கள் நடக்காமல் போகலாம். ஆனால் பொறுமையாக இருங்கள். இதனால் மனஅழுத்தம் கொள்ளாதீர்கள். மற்றவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்க்கவும். உங்கள் வயிறு மற்றும் பற்களை தேவையான அளவு கவனித்துக் கொள்ளுங்கள். இந்த புதிய ஆண்டு திருமணத்திற்கும் உங்கள் குடும்பத்தை விரிவுபடுத்துவதற்கும் நல்ல நேரம். இந்த ஆண்டு உங்கள் சேமிப்பை நன்றாகச் சேகரிக்க முடியும். கட்டுமானம் மற்றும் கட்டிடக்கலை பணிகளுக்கு இது ஒரு நல்ல ஆண்டாக இருக்கும்.

பிறந்த நாட்கள் 9, 18 மற்றும் 27

பிறந்த நாட்கள் 9, 18 மற்றும் 27

உங்கள் துணைக்கு அதிக நேரம் கொடுக்க முயற்சிக்க வேண்டும். வெளிநாட்டு வியாபாரம் மற்றும் வியாபாரத்தில் புதிய அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். வரும் புதிய ஆண்டு விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பானது. கோபத்தைத் தவிர்த்து, பொறுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். முதலீடுகளுக்கு இது ஒரு நல்ல நேரம் மற்றும் அவற்றிலிருந்து நீங்கள் சாதகமான விளைவுகளை பெறலாம்.

இறுதி குறிப்பு

இறுதி குறிப்பு

புத்தாண்டு அனைவருக்கும் புதிய நம்பிக்கையையும், மனவளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் தருவதாக நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் செழிப்பை நோக்கி அமைதி, நம்பிக்கை மற்றும் வலிமையுடன் முன்னேறுங்கள். இந்த ஆண்டு இனிய ஆண்டாக தொடர இனிதே வாழ்த்துகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, December 21, 2021, 16:54 [IST]
Desktop Bottom Promotion