November Horoscope 2022: நவம்பர் மாதம் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது..

உங்களுக்கு 2022 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் நவம்பர் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என கொடுக்கப்பட்டுள்ளன.

November 2022 Monthly Horoscope In Tamil

ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் நவம்பர் மாதம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது. உங்களுக்கு 2022 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் நவம்பர் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என நவம்பர் மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2022 நவம்பர் மாதம் எப்படி இருக்கும் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! நவம்பர் மாதம் உங்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். மாத தொடக்கத்தில் சில சவால்களை சந்திக்க நேரிடலாம். இம்மாதத்தில் உங்கள் கோபத்தையும், பேச்சையும் கட்டுப்படுத்துங்கள். தொழில் வாழ்க்கை மற்றும் நிதி நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். எனவே சற்று கவனமாக இருங்கள். இழப்புகளைத் தவிர்க்க, உங்களின் செயல்களில் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! நவம்பர் மாதத்தின் தொடக்கம் உங்களுக்கு சற்று பலவீனமாக இருந்தாலும், போக போக நல்ல பலனளிக்கும். அதுவும் மாத தொடக்கத்தில் செலவுகளை சந்திக்க நேரிடும். இதன் காரணமாக உங்கள் நிதி நிலை சற்று மோசமாக வாய்ப்புள்ளது. எனவே பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகளால் சற்று சிரமப்படுவீர்கள். இம்மாதத்தில் எங்காவது பயணத்தை மேற்கொள்ளலாம்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! நவம்பர் மாதமானது தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். ஆனால் வாழ்வின் பிற விஷயங்களில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். முக்கியமாக எந்த ஒரு வேலையிலும் அலட்சியமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். இம்மாதத்தில் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டியிருக்கும். பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, வாழ்வில் சற்று முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வெளிநாடு செய்வதற்கான வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு இம்மாதம் சாதகமாக இருக்கும்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே! நவம்பர் மாதமானது உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவதாக இருக்கும். ராகு மற்றும் கேதுவால் பணியிடத்தில் சிக்கலை சந்திப்பீர்கள். எனவே சற்று கவனமாக செயல்படுங்கள். வெளிநாடு செய்வதற்கான வாய்ப்புள்ளது. ஆனால் செலவுகள் அதிகமாக இருக்கும். இருப்பினும் வருமானத்தில் எந்த ஒரு குறைவும் இருக்காது என்பதால் கவலைப்பட தேவையில்லை. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். மாதத்தின் நடுப்பகுதியில் வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இம்மாதத்தில் அதிகம் சம்பாதிப்பீர்கள், செலவுகளையும் செய்வீர்கள். மொத்தத்தில் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பிர்கள். குடும்ப வாழ்க்கை சற்று மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். ஆனால் அதிர்ஷ்டத்தின் உதவியால் ஒவ்வொரு சூழ்நிலையையும் சமாளிப்பீர்கள்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! நவம்பர் மாதமானது நல்ல பலனைத் தருவதாக இருக்கும். உங்கள் ராசியின் அதிபதி மாதத்தின் முதல் பாதியில் 3 ஆவது வீட்டிலும், இரண்டாம் பாதியில் 4 ஆவது வீட்டிலும் இருப்பதால், இரண்டாம் பாதியை விட முதல் பாதி சாதகமாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நீங்கள் தைரியமும் வலிமையும் நிறைந்தவராக இருப்பதால், இந்த மாதம் உங்களின் ரிஸ்க் எடுக்கும் போக்கு அதிகரிக்கும். அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். நிலுவையில் உள்ள பணிகள் முடிக்கப்படும். திருமணமானவர்களின் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! நவம்பர் மாதமானது பல அம்சங்களில் சாதகமான மாதமாக இருக்கும். ஆனாலும் சில விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக, கடினமாக உழைக்க வேண்டிய நேரமிது. வெற்றிபெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நிதி ரீதியாக, இருமடங்கு பலன்கள் கிடைக்கும். குழந்தைகள் தொடர்பான விஷயங்கள் மன உளைச்சலை ஏற்படுத்தும். குடும்ப சூழல் இனிமையாக மற்றும் சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! நவம்பர் மாத்ம் சில பெரிய செலவுகள் வரலாம். இதனால் உங்களின் பட்ஜெட் பாதிக்கப்படலாம். வாழ்க்கையின் முக்கியமான அம்சங்களில் சாதகமான பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. ஆனால் ஆரோக்கியம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் சற்று கவனம் செலுத்த வேண்டும். இம்மாதத்தில் நேரத்தையும், பணத்தையும் புத்திசாலித்தனமாக செலவு செய்ய முயற்சி செய்யுங்கள். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொந்தரவுகளை சந்திக்கலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! நவம்பர் மாதம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். மாதத்தின் தொடக்கம் சற்று பலவீனமாக இருந்தாலும் இரண்டாம் பாதி உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வரவுசெலவுத் திட்டம் பாதிக்கப்படலாம். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை சற்று மகிழ்ச்சி குறைந்து, மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். குறுகிய பயணங்களுக்கு வாய்ப்புள்ளது. ஆனால் பயணங்களின் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! நவம்பர் மாதம் உங்களுக்கு சாதகமான மாதமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும் மற்றும் பதவி உயர்வு பெறும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இருப்பினும் தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். சில பெரிய செலவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு, மாதத்தின் இரண்டாம் பாதியில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே! நவம்பர் மாதம் உங்களுக்கு சாதகமான மாதமாக இருக்கும். மாதத்தின் தொடக்கத்தில் கடின உழைப்பின் முழு பலனைப் பெறுவீர்கள். உங்களின் மரியாதை அதிகரிக்கும். நல்ல வருமானத்தால் உங்களின் விருப்பங்களை இம்மாதத்தில் நிறைவேற்றுவீர்கள். உங்களின் லட்சியங்களும் நிறைவேறும். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இம்மாதத்தில் உங்கள் எதிரிகளை விட நீங்கள் பலமாக இருப்பீர்கள். மாத இறுதியில் பணப் பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் சில தடைகளை சந்தித்தாலும், உங்களுக்கு சாதகமான மாதமாக இருக்கும். ஆனால் ஆரோக்கியம் மற்றும் குடும்பம் ஆகிய இரண்டு விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களால் இம்மாதத்தில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இம்மாதத்தில் அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும். இதனால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். சிக்கிய பணம் இம்மாதத்தில் கிடைக்கும்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே! நவம்பர் மாதம் சற்று ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த மாதமாக இருக்கும். மாத தொடக்கத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்தாலும், பின்னர் முன்னேற்றம் ஏற்படும். செலவுகளை விட வருமானத்தில் அதிக கவனம் செலுத்தினால் நற்பலன் கிடைக்கும். இந்த மாதம் சில வேலைகளில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இம்மாதத்தில் நற்செய்தி கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion