For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இலங்கையை உண்மையில் எரித்தது அனுமன் அல்ல பார்வதி தேவியின் சாபம்தான் தெரியுமா?

இராவணனின் அழிவு காலம் எப்பொழுதும் தொடங்கியது என்றால் அது பாதி இலங்கையை அனுமன் தன் வாலில் பற்ற வைத்த நெருப்பால் எரித்தப் போதுதான்.

|

இந்தியாவின் முக்கியமான இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் பற்றி நாம் அனைவரும் நன்கு அறிவோம். திருமால் இராம அவதாரம் எடுத்து இராவணனை அழித்து பூமியில் தர்மத்தை நிலைநாட்டிய காவியம்தான் இராமாயணம் ஆகும். இராவணனை வதம் செய்வதில் இராமருக்கு பேருதவியாக இருந்தது அனுமன்தான் என்று நாம் அறிவோம்.

Goddess Parvati had set Lanka on fire

அனுமன் சிவபெருமானின் அவதாரம் என்று கூறப்படுகிறது. இராவணனின் அழிவு காலம் எப்பொழுதும் தொடங்கியது என்றால் அது பாதி இலங்கையை அனுமன் தன் வாலில் பற்ற வைத்த நெருப்பால் எரித்தப் போதுதான். ஆனால் அந்த சம்பவத்திற்கு பின்னால் உண்மையில் இருந்தது சிவபெருமானின் மனைவி பார்வதியின் சாபம்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?. இந்த பதிவில் பார்வதி தேவி ஏன் இராவணனுக்கு சாபம் கொடுத்தார் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இராவணன்

இராவணன்

அசுரவேந்தன் இராவணன் பற்றி அனைவருமே நன்கு அறிவோம். சிவபக்தியில் இராவணனை மிஞ்சியவர்கள் எவருமில்லை. நான்கு வேதங்கள், ஆயக்கலைகள் என அனைத்தும் கற்றறிந்த இராவணனின் தந்தை ரிஷி விஷ்ரவர் ஆவார் அதனால் இராவணன் பிறப்பால் ஒரு பிராமணன் ஆவார். ஆனால் அவரின் தாயார் அசுர குலத்தைச் சேர்ந்தவர் கைகேசி ஆவார்.

இலங்கை

இலங்கை

இராவணனின் ஆட்சியில் இலங்கை பொன்னிலங்கையாக விளங்கியது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். இலங்கையை பூலோக சொர்க்கம் என்று கூறும் அளவிற்கு அதன் வனப்பு மூவுலகையும் ஆச்சரியப்பட வைத்தது. ஆனால் அவை அனைத்தும் இராவணனின் ஆணவத்தாலும், சுயநலத்தாலும் அழிந்தது.

பார்வதியின் ஆசை

பார்வதியின் ஆசை

ஈசனின் மனைவியான பார்வதிக்கு மாளிகை ஒன்று கட்ட வேண்டுமென்று ஆசை வந்தது. பார்வதியின் உள்ள வேட்கையை உணர்ந்த ஈசன் அவரின் ஆசையை நிறைவேற்ற எண்ணினார். எனவே பார்வதியின் விருப்பப்படி ஒரு பொன் மாளிகையை கட்டும் பொறுப்பை இராவணனின் சகோதரனான குபேரனிடம் ஒப்படைத்தார். குபேரனும் தன்னிடம் இருந்த கணக்கிலடங்கா செல்வத்தையும் விஸ்வகர்மாவின் துணையையும் கொண்டு ஒரு அற்புதமான மாளிகையை உருவாக்கினார்.

MOST READ: இந்த ராசிகளில் பிறந்தவர்கள் கண்டதும் காதலில் விழுந்து விடுவார்களாம் தெரியுமா?

இராவணனுக்கு அழைப்பு

இராவணனுக்கு அழைப்பு

குபேரன் உருவாக்கிய மாளிகை காண்போர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பார்வதி தேவி அந்த மாளிகையின் அழகில் மெய்மறந்து போனார். சிவபக்தியில் சிறந்தவராகவும், அனைத்து வேதங்களையும் கற்று அனைவரையும் விட ஞானத்தில் சிறந்தவராகவும் விளங்கிய இராவணனுக்கு மாளிகையின் கிரகபிரவேச பூஜையை நடத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இது இராவணனுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும்.

இராவணனின் ஆசை

இராவணனின் ஆசை

பூஜைக்கு வந்த இராவணன் பார்வதி தேவிக்காக கட்டப்பட்ட மாளிகையை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கினார். இதுபோன்ற ரூ கோட்டையை தனக்காக கட்ட வேண்டும் என்று நினைத்த இராவணன் பின் இந்த கோட்டையையே தன்னுடைய கோட்டையாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்று நினைத்தார். எனவே அதற்கான திட்டத்தை தீட்டினார்.

இராவணனின் திட்டம்

இராவணனின் திட்டம்

அனைத்து கடவுள்களும், தேவர்களும் கூடியிருக்க பார்வதி தேவியுடைய மாளிகையின் கிரக பிரவேச பூஜை அசுர வேந்தன் இராவணனால் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. அதன்பின் தன் திட்டத்தை நிறைவேற்ற தயாரானார் இராவணன். பூஜை நடத்திய பிராமணருக்கு அவர் வேண்டும் தானத்தை தர வேண்டும் என்பது சாஸ்திரம் ஆகும். எனவே தனக்கு தட்சணையாக இந்த பொன்மாளிகை வேண்டும் என்று இராவணன் கேட்டார்.

MOST READ: தூங்கச் செல்லும்முன் செய்யும் இந்த எளிய செயல்கள் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கும்.

சிவனின் தானம்

சிவனின் தானம்

சிவபெருமான் சற்றும் யோசிக்காமல் தனது அன்பான பக்தனுக்கு அவன் கேட்ட தானத்தை கொடுக்க ஒப்புக்கொண்டார். இதனை பார்த்த பார்வதி இது நயவஞ்சகம் எனவும், அநீதி எனவும் கூறினார். ஆனால் சிவபெருமான் தன் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.

பார்வதியின் கோபம்

பார்வதியின் கோபம்

தனக்காக கட்டப்பட்ட மாளிகையில் மற்றவர் வாழப்போவதை பார்வதி தேவியால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. எனவே இந்த மாளிகையை அழித்து விட்டு இராவணனுக்கு வேறு மாளிகையை கட்டித்தரும்படி கூறினார். ஆனால் சிவபெருமான் தன் வாக்கிலிருந்து பின்வாங்க முடியாது என்று கூறி பார்வதி தேவியை சமாதானப்படுத்த எவ்வளவோ முயன்றார். ஆனால் பார்வதி தேவி அங்கிருந்து விலகி தனிமையில் சென்றுவிட்டார்.

MOST READ: நீங்கள் தினமும் செய்யக்கூடிய இந்த எளிய செயல்கள் உங்கள் எலும்புகளை இரும்பு போல மாற்றும் தெரியுமா?

பார்வதியின் சாபம்

பார்வதியின் சாபம்

கோபம் குறையாத பார்வதி சிவனை அந்த கோட்டையை அழிக்கும் படி கூறினார். அதற்கு ஈசன் தீர்த்த யுகத்தில் தான் வானர அவதாரம் எடுக்கும்போது உனது கோரிக்கையை நிறைவேற்றுவேன் என்று கூறினார். பார்வதி தேவியும் சிவனிடம் இருந்து பறிக்கப்பட்ட கோட்டையை அவரே அழிப்பார் என்று சாபமிட்டார். அதனால்தான் ஈசனின் அவதாரமான அனுமன் இராவணனின் கோட்டையை அழித்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Not Hanuman, but Goddess Parvati had set Lanka on fire!

Because of goddess Parvati's curse only set Lanka set on fire.
Story first published: Saturday, July 27, 2019, 13:21 [IST]
Desktop Bottom Promotion