For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு என்ன தசை நடக்குது தெரியுமா - இந்த போட்டோவை பாருங்க...

|

நவகிரகங்கள் 12 ராசிகளை ஆள்கின்றன. சூரியன் தொடங்கி கேது வரைக்கும் 12 கிரகங்களுக்கும் வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களும் நமக்கு வெற்றி தரும் குறியீடுகள்தான். ஜோதிட சாஸ்திரத்தில் இருபத்தியேழு நட்சத்திரங்களுக்கும் உருவம் அல்லது குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளை நாம் வெற்றி சின்னங்களாகப்பயன்படுத்திக்கொள்ளலாம். எப்படியென்றால், நாம் வசிக்கும் வீடு,பணிபுரியும் இடம்,அணியும் ஆடை, விசிட்டிங் கார்டு, லெட்டர் பேட் ஆகியவற்றில் அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய உருவத்தை சின்னங்களாக பயன்படுத்திவந்தால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறலாம். அதேபோல கிரகங்களின் வாகனங்களும் நமக்கு வெற்றியை தேடி தருகின்றன.

Nine Dasa Bhukth Navagrahas With Vahanas Success

ஒருவருக்கு எந்த கிரகத்தின் தசை நடப்பில் உள்ளதோ அந்த கிரகங்களுக்கு உண்டான வாகனத்தின் படத்தை தினமும் பார்த்து வந்தால், அந்த கிரகத்தின் தசாக்காலத்தில் கெடு பலன்கள் குறையும்,நற்பலன்கள் அதிகரிக்கும். கிரகங்களின் வாகனங்கள், சூரியனுக்கு மயில்,தேர், சந்திரனுக்கு முத்து விமானம், செவ்வாய்க்கு அன்னம், புதனுக்கு குதிரை, குருவிற்கு யானை, சுக்கிரனுக்கு கருடன், சனிக்கு காகம், ராகுவிற்கு ஆடு, கேதுவிற்கு சிங்கம் ஆகியவை வாகனங்கள்.

MOST READ: இந்த ராசிக்காரங்களுக்கு 2020 இல் வேலை போக வாய்ப்பிருக்கு... எச்சரிக்கையா இருங்க...

நட்சத்திர உருவங்கள் அல்லது சின்னங்கள் நமக்கு வெற்றிதரும் சின்னங்களாகும். அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய உருவத்தை,தன்னோடு வைத்திருந்தால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறலாம். அதேபோல ஒன்பது தசைகளும் மாறி மாறி ஒருவருக்கு நடக்கும் போது நன்மையும் தீமையும் கலந்த பலன்கள் ஏற்படும் அப்போது நாம் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க கிரகங்களின் வாகனங்களின் படங்களை தினசரி பார்த்து பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம் முதல் கடகம் வரை

மேஷம் முதல் கடகம் வரை

அஸ்வினி - குதிரைத்தலை, அமர்ந்திருக்கும் பறவை.

பரணி - யோனி, அடுப்பு, முக்கோணம், சங்கு.

கிருத்திகை - கத்தி, கற்றை, வாள், தீஜ்வாலை, தீபம்.

ரோகிணி - தேர், வண்டி, கோயில், ஆலமரம், சகடம், கூடை.

மிருகசீரிடம் - மான்தலை, தேங்காய்க்கண், மான் கொம்பு.

திருவாதிரை - மனித தலை, வைரம், கண்ணீர்துளி, ருத்திராட்சம், எலும்பு மாலை.

புனர்பூசம் - வில், நாய்.

பூசம் - புடலம்பூ, அம்புக்கூடு, பசுவின்மடி, வேல்.

ஆயில்யம் - சர்ப்பம், அம்மி, ஊர்ந்து செல்லும் சர்பம்.

சிம்மம் முதல் விருச்சிகம் வரை

சிம்மம் முதல் விருச்சிகம் வரை

மகம் - வீடு, பல்லக்கு, நுகம், ராஜ கோபுரம்.

பூரம் - கட்டில் கால், கண்கள், அத்திமரம், சதுரம், மெத்தை, நந்தி.

உத்திரம் - கட்டில்கால், கம்பு, குச்சி, மெத்தை, யோக தண்டம்.

ஹஸ்தம் - கை, மயிலிறகு.

சித்திரை - முத்து, புலிக்கண், ஸ்வஸ்திக் சின்னம்.

ஸ்வாதி - பவளம், தீபம், தணல்.

விசாகம் -விசிறி முறம், தோரணம், குயவன்சக்கரம்.

அனுசம் - குடை, முடப்பனை, தாமரை, கம்மல் ஜிமிக்கி, வில்வளசல்.

கேட்டை - குடை, குண்டலம், ஈட்டி.

தனுசு முதல் மீனம் வரை

தனுசு முதல் மீனம் வரை

மூலம் - அங்குசம், சிங்கத்தின் வால், யானையின் துதிக்கை.

பூராடம் - கட்டில் கால், அனுமனின் கதை.

உத்திராடம் - கட்டில் கால், வில்.

திருவோணம் - முழக்கோல், மூன்று பாதச்சுவடு, அம்பு.

அவிட்டம் - மிருதங்கம், உடுக்கை.

சதயம் - பூங்கொத்து, மூலிகைகொத்து.

பூரட்டாதி - கட்டில் கால், அனுமனின் கதை.

உத்திரட்டாதி - கட்டில்கால், பசுக்கள்.

ரேவதி - மீன், படகு.

மயில், அன்னப்பறவை

மயில், அன்னப்பறவை

அதே போல ஒருவருக்கு சூரிய தசை நடக்கும் காலத்தில்,அவர் தன் வீட்டில் மைய பகுதியில் மயில் படத்தையோ தேர் படத்தையோ மாட்டி வைக்க வேண்டும். அல்லது சிறிய உருவத்தையோ ஒருவருக்கு சந்திர தசை நடக்கும் காலத்தில், அவர் தன் வீட்டில் தென்கிழக்குப் பகுதியில் முத்து விமானத்தின் படத்தை மாட்டி வைக்க வேண்டும். ஒருவருக்கு செவ்வாய் தசை நடக்கும்காலத்தில், அவர் தன் வீட்டில் அன்னப்பறவையின் படத்தை தெற்கு திசையில் மாட்டி வைக்க வேண்டும்.

குதிரை, யானை, கருடன்

குதிரை, யானை, கருடன்

ஒருவருக்கு புதன் தசை நடக்கும்காலத்தில் அவர் தன் வீட்டில் வடகிழக்குப் பகுதியில் குதிரையின் படத்தை மாட்டி வைக்க வேண்டும். ஒருவருக்கு குரு தசை நடக்கும்காலத்தில், அவர் தன் வீட்டில் வடக்குப் பகுதியில் யானையின் படத்தை மாட்டி வைக்க வேண்டும். ஒருவருக்கு சுக்கிர தசை நடக்கும் போது அவர் தன் வீட்டில் கிழக்குப் பகுதியில் கருடன் படத்தை மாட்டி வைக்க வேண்டும்.

காகம், ஆடு, சிங்கம்

காகம், ஆடு, சிங்கம்

ஒருவருக்கு சனி தசா நடக்கும்காலத்தில், அவர் தன் வீட்டில் மேற்குப் பகுதியில் காகத்தின் படத்தை மாட்டி வைக்க வேண்டும். ஒருவருக்கு ராகு தசா நடக்கும்காலத்தில், அவர் தன் வீட்டில் தென்மேற்குப் பகுதியில் ஆட்டின் படத்தை மாட்டி வைக்க வேண்டும். ஒருவருக்கு கேது தசா நடக்கும்காலத்தில், அவர் தன் வீட்டில் வடமேற்குப் பகுதியில் சிங்கத்தின் படத்தை மாட்டி வைக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Nine Dasa Bhukth Navagrahas With Vahanas Success

The 12 zodiac signs divided into 27 equal parts each representing a Nakshatra, the constellation. The nakshatra zodiac is rich in symbolism and meaning, and provides a framework for seeing the relationship of human life to the cosmos.
Story first published: Friday, December 6, 2019, 12:03 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more