Latest Updates
-
கேட்டரிங் ஸ்டைல் கோவைக்காய் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் அம்மிணி கொழுக்கட்டை ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
வயிற்றை சுத்தம் செய்யணுமா? அப்ப காலையில் எழுந்ததும் இந்த பானங்களை குடிங்க... -
மனிதத் தன்மையற்ற வரலாற்றின் டாப் 10 கொடூரமான அரசர்கள் - முதலிடத்தில் எந்த அரசர் இருக்கிறார் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்
2023 அதிர்ஷ்டமானதா இருக்கணுமா? அப்ப புத்தாண்டின் முதல் நாளில் ராசிக்கேற்ற நிறத்தில் ஆடைகளை அணியுங்க..
2023 புத்தாண்டில் உங்கள் ராசிக்கு எந்த நிற ஆடைகளை அணிய வேண்டும் என்பதை அறிந்து, அந்த நிற ஆடைகளை புத்தாண்டின் முதல் நாளில் அணிந்து லட்சுமி தேவியின் ஆசியைப் பெறுங்கள்.
New Year 2023: புத்தாண்டில் நுழையவுள்ளோம். இந்த புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் பலர் புத்தாண்டின் முதல் நாளில் வெளியே செல்ல திட்டமிடுவார்கள். பெரும்பாலானோர் புத்தாண்டு சிறப்பாக இருக்க வேண்டுமென்று, காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு கோவிலுக்கு செல்வார்கள். இப்படி வெளியே செல்லும் போது, அழகான உடைகளை அணிந்து செல்ல விரும்புவோம்.

வாஸ்துப்படி சில நிறங்கள் மங்களகரமானவை. அதே வேளையில் ஒருவரது ராசிக்கேற்ப நிறங்களை அணிந்தால், லட்சுமி தேவியின் ஆசை கிடைப்பதோடு, நிதி நெருக்கடியில் இருந்தும் விடுபடுவதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். எனவே இந்த புத்தாண்டில் உங்கள் ராசிக்கு எந்த நிற ஆடைகளை அணிய வேண்டும் என்பதை அறிந்து, அந்த நிற ஆடைகளை புத்தாண்டின் முதல் நாளில் அணிந்து லட்சுமி தேவியின் ஆசியைப் பெறுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் புத்தாண்டின் முதல் நாளில் சிவப்பு நிற ஆடைகளை அணிவதன் மூலம் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். அதே வேளையில் இந்த ராசிக்காரர்கள் கருப்பு நிற ஆடைகளை எக்காரணம் கொண்டும் அணியக்கூடாது. இல்லாவிட்டால், எதிர்மறை பலன்களைப் பெறக்கூடும்.

ரிஷபம்
வாஸ்துப்படி, ரிஷப ராசிக்காரர்கள் வெள்ளை, பிங்க் அல்லது க்ரீம் நிற ஆடைகளை புத்தாண்டின் முதல் நாளில் அணிய அறிவுறுத்தப்படுகிறது. அதே சமயம் இந்த ராசிக்காரர்கள் சிவப்பு நிற ஆடைகளை அணியக்கூடாது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் பச்சை நிற ஆடைகளை புத்தாண்டின் முதல் நாளில் அணிவது நல்லது. இது படைப்பாற்றலை அதிகரிக்கும் மற்றும் அந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிற ஆடைகளை அணிய பரிந்துரைக்கப்படுகிறது. இது அதிர்ஷ்டத்தைப் பிரகாசிக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். ஆனால் இந்த ராசிக்காரர்கள் கருப்பு நிற ஆடைகளை அணியக்கூடாது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சிவப்பு, மஞ்சள், கோல்டன் மற்றும் வெள்ளை நிற ஆடைகளை அணிவதன் மூலம், லட்சுமி தேவியின் ஆசியைப் பெறலாம். எனவே இவற்றில் ஒரு நிறத்தை தேர்ந்தெடுத்து புத்தாண்டின் முதல் நாளில் அணிந்து, புத்தாண்டைக் கொண்டாடுங்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் வாஸ்துப்படி வெளிர் நீலம், லைட் பிங்க் அல்லது பச்சை நிற ஆடைகளை புத்தாண்டின் முதல் நாளில் அணிவது நல்லது. ஆனால் இந்த ராசிக்காரர்கள் சிவப்பு நிற ஆடைகளை அணியக்கூடாது.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் 2023 ஜனவரி முதல் நாளில் நீல நிற ஆடைகளை அணிவது நல்லது. இது அவர்களுக்கு நேர்மறையான முடிவுகளைக் கொடுப்பதோடு, வெற்றியையும் அளிக்கும். ஆனால் இவர்கள் கருப்பு, வெள்ளை அல்லது பிங்க் நிற ஆடைகளை அணியக்கூடாது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் சிவப்பு அல்லது மெரூன் நிற ஆடைகளை அணிவது நல்லது. இவ்விரு நிறங்களும் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். ஆனால் இவர்கள் பச்சை நிற ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற ஆடைகளை புத்தாண்டின் முதல் நாளில் அணிய வேண்டும். இது மங்களகரமானதாக இருக்கும் மற்றும் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் நீல நிற ஆடைகளை புத்தாண்டின் முதல் நாளில் அணிவதால், பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து, வெற்றிகள் குவியும். ஆனால் இந்த ராசிக்காரர்கள் கருப்பு நிற ஆடைகளை எக்காரணம் கொண்டும் அணியக்கூடாது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் புத்தாண்டின் முதல் நாளில் நீலம் அல்லது ஊதா நிற ஆடைகளை அணிவது நல்லது. ஏனெனில் இவ்விரு நிறங்களும் நற்பலன்களை வழங்கும். குறிப்பாக இது குடும்பத்தில் மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும். ஆனால் இவர்கள் கருப்பு நிற ஆடைகளை அணியக்கூடாது.

மீனம்
மீன ராசிக்காரர்கள் புத்தாண்டு நாளில் மஞ்சள் நிற ஆடைகளை அணிவதால், லட்சுமி தேவியின் ஆசியைப் பெறுதோடு, சாதகமான பலன்களும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications